Yarl Forum
யாழ்ப்பானம் மத்திய கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: யாழ்ப்பானம் மத்திய கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை (/showthread.php?tid=2925)



யாழ்ப்பானம் மத்திய கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை - வினித் - 10-12-2005

<span style='font-size:30pt;line-height:100%'>யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் மீது துப்பாக்கிச் சூடு </span>
[புதன்கிழமை, 12 ஒக்ரொபர் 2005, 16:25 ஈழம்] [யாழ். நிருபர்]
<b>யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் கே.இராஜதுரை இன்று புதன்கிழமை மாலை யாழ்ப்பாண நகரில் அடையாளந் தெரியாத நபர்களினால் சுடப்பட்டு கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும்பொழுது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது</b>

www.puthinam.com


- கோமதி - 10-12-2005

அவர் இறந்துவிட்டதாகச் செய்திகள் வந்துள்ளது.


- வினித் - 10-12-2005

யாழ்ப்பானம் மத்திய கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் கே.இராஜதுரை இன்று புதன்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் அடையாளந் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

யாழ். வீரசிங்கம் மன்டபத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும்பொழுது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராஜதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தற்போது கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


- வினித் - 10-12-2005

(மேலதிக இணைப்பு) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை
[புதன்கிழமை, 12 ஒக்ரொபர் 2005, 16:25 ஈழம்] [யாழ். நிருபர்]
<b>யாழ். மத்திய கல்லூரி அதிபர் கே. இராசதுரை இன்று புதன்கிழமை பிற்பகல் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு பாடசாலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

அப்போது அந்த இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடி விட்டனர். இச்சம்பவம் பிற்பகல் 3 மணிக்கு நடந்தது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கே. இராஜதுரை, யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பிற்பகல் 4 .25 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு நடந்த பகுதி, சிறிலங்கா படை உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட பகுதியாகும்.</b><b>சுட்டுக்கொல்லப்பட்ட இராஜதுரை, ஈ.பி.டி.பி.யின் தீவிர ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது</b>.

<b>யாழ். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லுரி அதிபர் நடராஜா சிவகடாட்சம் நேற்று செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
</b>
www.puthinam.com


- MUGATHTHAR - 10-12-2005

அன்று --ஆனந்தராஜா---சென்ஜோன்ஸ்
இன்று --இராஜதுரை --சென்ரல்

வடபகுதி மிக பேர் எடுத்த பள்ளிக்கூடங்களின் அதிபர்கள்
என்னதான் சொன்னாலும் புத்திஜீவிகளை நாங்கள் இழந்து கொண்டிருப்பது தமிழ் சமுதாயத்துக்கு ஒரு சாபக்கேடுதான் ..


- தூயவன் - 10-12-2005

MUGATHTHAR Wrote:அன்று --ஆனந்தராஜா---சென்ஜோன்ஸ்
இன்று --இராஜதுரை --சென்ரல்

வடபகுதி மிக பேர் எடுத்த பள்ளிக்கூடங்களின் அதிபர்கள்
என்னதான் சொன்னாலும் புத்திஜீவிகளை நாங்கள் இழந்து கொண்டிருப்பது தமிழ் சமுதாயத்துக்கு ஒரு சாபக்கேடுதான் ..
உண்மை தான் முகம்ஸ். நேற்று கோப்பாய் கிறிஸ்தவக் கல்லு}ரி. இன்று இவர் மாறி மாறி பழிவாங்கும் நடவடிக்கையில் அழியப்போவது எம் தமிழினம் தான்.


- kurukaalapoovan - 10-12-2005

உப்படி பாத்தால் காலம் சென்ற நீலன்திருச்செல்வம், கதிர்காமர் போன்றோரும் தாம் தெரிவு செய்த துறையில் திறைமைசாலிகள் அறிவாளிகள் அனுபவசாசிகள் என்ற அடிப்படையில் சமுதாயத்துக்கு இழப்பா? :roll: :?


- yarlmohan - 10-12-2005

தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கும் நோக்கில் இத்துடன் இக்கருத்து மூடப்படுகின்றது.