Yarl Forum
துணைப்படைமீது தாக்குதல் ஒருவர் வீரச்சாவு! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: துணைப்படைமீது தாக்குதல் ஒருவர் வீரச்சாவு! (/showthread.php?tid=2924)



துணைப்படைமீது தாக்குதல் ஒருவர் வீரச்சாவு! - வியாசன் - 10-12-2005

துணைப்படைமீது தாக்குதல் ஒருவர் வீரச்சாவு! புலிகள் பதில் தாக்குதல்! தாக்குதல் நடதியோர் இராணுவ முகாமிற்குள் தப்பியோட்டம்!
இன்று நன்பகல் மட்டக்களப்பு மயிலவெட்டுவான் சந்தனமடு ஆற்றுப் பகுதியில் ரோந்து சென்று கொண்;டிருந்த தமிழீழ தேசிய துணைப்படையினர் மீது இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் துணைப்படை வீரர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

இதனை அடுத்து தாக்குதல் நடத்தியவர்களை விடுதலைப்புலிகள் பின்தொடர்ந்து சென்ற போது அவர்கள் மாவடி வேம்பு சிறிலங்கா இராணுவச் சோதனைச் சாவடியினுள் நுழைந்துள்ளனர். இதன் போது சோதனைச் சாவடியில் இருந்த சிறிலங்காப் படையினர் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அறிய முடிகிறது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறையினருடன் தொடர்பு கொண்ட போது அச்செய்தியை உறுதிப்படுத்தியவர்கள் இது தொடர்பாக கண்காணிப்புக் குழுவினருக்கு உடனடியாக அறிவித்து குறித்த இடத்திற்கு வந்து நிலைமைகளை அவதானிக்குமாறு கூறியபோதும் ஆள்பற்றாக்குறை காரணமாக உடனடியாக அவ்விடத்திற்கு வர இயலாது என கணிகாணிப்புக்குழுவினர் தெரிவித்ததாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கண்காணிப்புக் குழுவினருக்கு இவ்விடயம் தொடர்பாக எழுத்து மூலமாகவும,; தெரியப்படுத்தியிருப்பதாகவும் நாளை இது தொடர்பாக குறித்த பகுதிக்கு கண்காணிப்புக் குழுவினர் வரவிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

சுட்டது புதினத்திலிருந்து
:evil: :evil: :twisted: :twisted: :twisted: :evil: