Yarl Forum
ஆபத்தான இடமாக மாறும் கட்டுநாயக்க விமான நிலையம்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஆபத்தான இடமாக மாறும் கட்டுநாயக்க விமான நிலையம்! (/showthread.php?tid=2809)



ஆபத்தான இடமாக மாறும் கட்டுநாயக்க விமான நிலையம்! - MUGATHTHAR - 10-23-2005

<b><span style='font-size:25pt;line-height:100%'>ஆபத்தான இடமாக மாறும் விமான நிலையம்!</b></span>

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அபாயகரமான இடமாக மாறிக்கொண்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த இடம் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படும் இடமாகக் கூட மாறிவிடலாம்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் (பயணிகள்) எமது இந்த விமான நிலையத்தில் இடம்பெற்று வரும் விரும்பத்தகாத பல விடயங்கள் தொடர்பாக வெறுப்படைந்துள்ளதுடன் இங்கு பாதுகாப்பு எந்த வகையிலும் உறுதிப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

முன்னரெல்லாம் இடம்பெறாத பல்வேறு சம்பவங்கள் இந்த விமானநிலையத்தினுள் இப்போது இடம்பெற்று வருகிறது.

கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெறும் மோசடி நடவடிக்கைகள் குண்டுப்புரளிகள்இ வதந்திகள் போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக இதே பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

2004 ஆம் ஆண்டில் பிரசுரமான ஒரு கட்டுரையிலும் விமான நிலையத்தில் இலஞ்சம் ஊழல் மோசடி அச்சுறுத்தல் ஏமாற்று வேலைகள் பாதுகாப்பின்மை போன்ற பல்வேறுபட்ட விரும்பத்தகாத விடயங்கள். நடந்த விபரங்களும் அறியத்தரப்பட்டிருந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதுடன் நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்திருப்பது அதிகளவான அரசியல் தலையீடுகள் போன்ற பல்வேறு காரணிகள் தொடர்பாக ஊடகங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன.

விமான நிலைய நிர்வாகம் விமான நிலையத்துடன் தொடர்புடைய அமைச்சு அமைச்சர்கள் விழிப்படைந்து விமான நிலையத்தினுள் தோன்றி இருக்கும் சாதகமற்ற செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று பரவலான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும்இ விழிப்படைதல் எதற்கும் செவி சாய்க்கப்படவில்லை என்பதை பறைசாற்றும் வகையில் யாரும் எதிர்பாராத மிகவும் மோசமான சம்பவமொன்று கடந்த 10 ஆம் திகதி விமான நிலையத்தினுள் இடம்பெற்றிருந்ததை முழு உலகமும் அறிந்துகொண்டது.

விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பாக பெரிதாகப் பேசிக்கொள்பவர்கள் வெட்கி அவமானப்பட வேண்டிய சம்பவம் இது. இதனை மிகவும் ஆபத்தான நிலைமை அல்லது அச்சுறுத்தல் என்றும் கூற முடியும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று குவைத் செல்ல விமான நிலையம் வந்திருந்த அப்பாவி இளம் குடும்பப் பெண் ஒருவரை மிகவும் கொடூரத்தனமான முறையில் காமுகர்கள் ஐவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் இவ்வாறானதோர் கொடுமை யொன்று பதியப்பட்டுள்ள முதல் சம்பவம் இதுவாகிறது.

குருநாகலையைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு குழந்தைக்கு தாயான இந்த அபலைப் பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்ற காமுகர்கள் விமான நிலையத்தின் அதிபாதுகாப்பு பகுதி அறையொன்றுக்குள் வைத்து தங்களின் காம இச்சைகளை தீர்த்துக் கொண்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் பின்னர் குறித்த நேரத்தில் அப்பெண்ணை குவைத் விமானத்தில் ஏற்றி அனுப்பிவைத்துள்ளனர்.

குவைத் விமான நிலையத்தில் இறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண் வாந்தி எடுத்துள்ளதுடன் மயக்கம் ஏற்பட்டு விழுந்துள்ளார். இதனையடுத்து குவைத் விமான நிலைய வைத்தியர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கி மீண்டும் இம்மாதம் 19 ஆம் திகதி இலங்கைக்கு திருப்பியனுப்பி வைத்திருந்தனர்.

ஏழ்மையில் வாடிய இப்பெண் தனது குடும்ப நிலைமையை கருத்திற் கொண்டு கடன் வாங்கி வெளிநாட்டு தொழிலுக்கு ஏற்பாடு செய்து கொண்டு எதிர்கால கனவுகளுடன் புறப்பட்ட இந்த பயணம் இறுதியில் வஞ்சிக்கப்பட்ட நிலையில் புஸ்வாணமாகி திரும்பி வந்தபோதுஇ விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த கதி தொடர்பாகவும் அதனால் எல்லாம் இழந்துவிட்ட அவல நிலை பற்றியும் உரிய அதிகாரிகளிடம் கூறி அவர்கள் மூலம் விமானநிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்துஇ இப்பெண்ணை இந்த நிலைமைக்கு தள்ளிய விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் இருவரும் துப்புரவு தொழிலில் ஈடுபடும் மூன்று ஊழியர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் பொறுப்பு வாய்ந்த துறையை சேர்ந்தவர்கள் குப்பை அகற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் சேர்ந்து இவ்வாறான கீழ்த்தரமான ஒரு செயலில் ஈடுபட்டிருப்பது விமான நிலைய பாதுகாப்பையும் அங்குள்ளவர்களின் நடவடிக்கைகளையும் மக்கள் மத்தியில் கேள்விக் குறியாக்கியுள்ளது.

துப்புரவு தொழிலாளர்களுக்கு மலசலகூடமருகில் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நடந்த இப் பாலியல் வல்லுறவு சம்பவம் வெளியாகியுள்ளதை தொடர்ந்து இதற்கு முன்னரும் இங்கு அப்பாவி பெண்கள் இவ்வாறு வல்லுறவுக்குள்ளாகியிருக்கலாம் என்ற கோணத்தில் இதில் சம்பந்தப்படாத சந்தேகத்திற்குரிய பலரிடம் தற்போது பொலிஸார் விசாரணை செய்து வருவதுடன் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இப்பெண்ணுக்கு பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் எல்லா வகையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது.

இங்கு பொலிஸ் நிலையம்இ சுங்கப் பிரிவுஇ குடிவரவு குடியகல்வு கிளை அலுவலகம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பாதுகாப்பு பிரிவுஇ விமான நிலைய பாதுகாப்பு பிரிவுஇ விமானப் படை பாதுகாப்புஇ தேசிய புலனாய்வு பொலிஸ் புலனாய்வு போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு பொலிஸ் பகுதியினர் என்று பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பல அரச பிரிவுகள் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் பிரிவுகள் உட்பட சர்வதேச விமான போக்குவரத்து பாதுகாப்பு" ஸ்ரீலங்கா விமானச் சேவை பாதுகாப்பு என்ற எத்தனை பிரிவுகள் 24 மணிநேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இவை அத்தனையையும் மீறி முதன்மைத் துறையாக விளங்கும் பாதுகாப்பு பிரிவின் ஊழியர்களும் கழிவுகளை அகற்றும் துறையைச் சேர்ந்தவர்களும் செய்துள்ள சாதனையினால் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியும் அவப்பெயரும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மன்னிக்க முடியாத இக்குற்றத்தை மர்ம விடயமாக வைத்திருக்க காலம் இடம் கொடுக்காததாலேயே இவர்கள் இன்று பிடிபட்டுள்ளனர்.

இல்லாவிட்டால் இன்னும் எத்தனையோ விடயங்கள் வெளியில் வராமல் இருப்பது போல் இதுவும் இருந்திருக்கும்.

விமானநிலையத்தினுள் நாளாந்தம் சட்டவிரோத பணப்புழக்கம் கை மாறுதல்இ கடத்தல்இ ஆள்மாறாட்டம் உட்பட பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பிட்ட சில அதிகாரிகள்இ வெளியார் ஆகியோர் இவற்றில் சம்பந்தப்பட்டுள்ளதும் மறுக்க முடியாத உண்மை.

இதேவேளைஇ பயணிகள் பொதிகள் திருட்டுஇ பொதிகளை சேதப்படுத்தி சூறையாடுவதுஇ வெளிநாடுகளிலிருந்து வரும் பணிப்பெண்களை ஏமாற்றி பணம் பொருள் கறப்பதுஇ பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி தமிழ் விமானப்பயணிகளை சிக்கல்களில் மாட்டி பதவி உயர்வுஇ சன்மானம் ஆகியன பெற்றுக்கொள்வது அவர்களை கொள்ளையடிப்பதுஇ ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல்இ தங்கம்இ மாணிக்கக் கற்கள் கடத்தல் ஆகியவற்றுக்கு துணை போவது. மோசடியான முறையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பது போன்ற பல்வேறு குற்றச்செயல்களும் நாளாந்த மற்றும் தொடர் நடவடிக்கைகளாக இருந்து வருகின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும் போதும் நடக்காதவையெல்லாம் புதிது புதிதாக இடம்பெறும் போதும் கட்டுநாயக்க விமான நிலையம் இன்று மிகவும் மோசமான நடவடிக்கைகளுக்கு முதலிடம் வகிக்கின்றது.

கடந்த வருடம் ஆய்வு நிறுவனமொன்று இலங்கையில் மோசடிகள்இ துஷ்பிரயோகங்கள் அதிகம் நிறைந்த அரச நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டதுடன் அதில் பொலிஸ் திணைக்களம் முதலிடத்தில் இருந்த போதும் அதையும் தாண்டி கட்டுநாயக்கா விமான நிலையம் இன்று எல்லாவிதமான சம்பவங்களும் இடம்பெறும் கேந்திர நிலையமாக மாறிவருகிறது.

<b>காணாமல் போயுள்ள நிர்மல ஜீவா</b>

இதேவேளை இவ்வாரம் மேலும் பல சம்பவங்கள் தொடர் கதையாக இடம்பெற்றுள்ளன.

கிளிநொச்சியிலிருந்து தேவை காரணமாக கொழும்பிற்கு வந்த நிர்மல ஜீவாஇ வயது 42. இரண்டு பிள்ளைகளின் தந்தைஇ கடந்த வாரம் காணாமல் போயுள்ளதுடன் இதுவரை அவரைப் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லையென அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவே இப்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

17 ஆம் திகதி திங்கட்கிழமை பேலியகொடை என்ற இடத்தில் பாதாள குழு தலைவர் ஒருவர் சுட்டு அப்பாவி நபர் ஒருவர் உயிரிழந்தும் அவரை பொது மக்கள் அடித்தும் வெட்டியும் கொலை செய்த சம்பவமும்இ அதே தினம் புத்தளத்தில் வீதிச் சோதனை கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் காணாத நபரொருவரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் இடம்பெற்றன.

19 ஆம் திகதி இலங்கை விமானப்படைஇ விமானமான ஆள் இல்லா உளவு விமானம் (சி.ஏ.வி.) வன்னிப் பகுதியில் வைத்து காணாமல் போயுள்ளது. காணாமல் போன இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகி இருப்பதாக விமானப்படைத்தளபதி எயார் வைஸ் மார்சல் டொனால்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தின் இழப்பு விமானப்படையின் உளவு நடவடிக்கைகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் விமானப் படையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு சம்பவத்தை மிஞ்சிய இன்னுமோர் பாலியல் வல்லுறவு சம்பவமொன்று மருதானையில் இடம்பெற்றுள்ளது.

லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் என கருதப்படும் நடுத்தர வயது பெண் ஒருவர் ஐந்து படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பரபரப்பான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன் அது மூடி மறைக்கப்பட்ட விடயமாக மாறியுள்ளது.

இச்சம்பவத்தில் தவறிழைத்த இராணுவத்தினரை கைதுசெய்த இராணுவ பொலிஸார் மற்றும் மருதானை பொலிஸார் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று அறிய முடியாதுள்ளது.

இவ்வாறு மேலும் பல குற்றச் சம்பவங்கள் நிறைவுறும் இவ்வாரத்தில் இடம்பெற்றுள்ளன.

thanks thinakkural


- Danklas - 10-23-2005

தகவலுக்கு நன்றி சுண்டல் சா முகத்தார்...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 10-23-2005

எங்களுக்கும் வெட்டி ஒட்டத் தெரியும் எண்டு காட்டா வந்தா நக்கல் இது ரொம்ப ஓவர் ஆமா..............


- Birundan - 10-23-2005

சுண்டல் கோபிக்க மாட்டாரா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vasampu - 10-23-2005

இல்லை முகத்தார் டண்ணுக்கு கண் பார்வை கொஞ்சம் மங்கல் சுட்டுப் போட்டதைப் பார்த்ததும் வழமைபோல் சுண்டல்தான் போட்டிருப்பார் என எண்ணிவிட்டார். பிறகு புலநாய் குலைக்கத்தான் ஏதோ தவறு என்று சரியாகப் பார்த்து எழுதினார். பாவம் டண் இப்ப எல்லாம் ஏதோ குத்துமதிப்பிலைதான் செய்யிறார். அதாலை பாவம் அவரை ஏசாதீங்கோ

:roll: Cry :roll: Cry


- SUNDHAL - 10-23-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 10-24-2005

நன்றி அங்கிள் உங்கள் தகவலுக்கு


- தூயவன் - 10-24-2005

Danklas Wrote:தகவலுக்கு நன்றி சுண்டல் சா முகத்தார்...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இந்த நன்றிக்காகத்தான் கஸ்டப்பட்டு அங்கிள் கொப்பி பண்ணிப்போட்டாராக்கும் :twisted: :twisted:


- sri - 12-13-2005

À¢Ã¡ýŠ þ¨Ç»÷ ÐýÒÚò¾ø! ‚Äí¸ý ±Â¡÷¨ÄýŠ «¾¢¸¡¡¢¸ÙìÌ ±¾¢Ã¡¸ ÅÆìÌ!


¸ðο¡Âì¸ ÀýÉ¡ðÎ Å¡Û}÷¾¢ ¿¢¨ÄÂò¾¢ø ¾ÁìÌ Í¸Å£Éõ ²üÀðÎ, Å¡Û}÷¾¢Â¢Ä¢ÕóÐ þÈí¸¢ º¢¸¢î¨º ¾ÕÁ¡Ú §¸¡Ã¢Â§À¡Ð ¸¡ÅüШÈ¢É÷ ¾õ¨Á ¾¡ì¸¢Âмý ÐôÀ¡ì¸¢ À¢Ã§Â¡¸õ ¦ºö¾¾¡¸×õ, º¢ò¾¢ÃŨ¾ ¦ºö¾¾¡¸×õ, º¢¨È¢ø ¾ÎòÐ ¨Åò¾¾¡¸×õ, À¢Ã¡ýº¢ý §¿¡÷ÁñÊ À̾¢¨Â §º÷ó¾ þ¨Ç»÷ ´ÕÅ÷ À¢Ã¡ýŠìÌ ¾¢ÕõÀ¢ ¦ºýÈÐõ Ó¨ÈôÀ¡Î ¦ºöÐûÇ¡÷.

‚Äí¸ý ²Â¡÷¨Äý Å¡Û}÷¾¢ §º¨Å ¿¢ÚÅÉòÐìÌ ±¾¢Ã¡¸×õ, ‚Äí¸¡ «¾¢¸¡Ã¢¸ÙìÌ ±¾¢Ã¡¸×õ ÅÆìÌ ¦¾¡¼ÕžüÌ «Å÷ ¿¼ÅÊ쨸¸¨Ç §Áü¦¸¡ñÎûÇ¡¦ÃÉ ¦ºö¾¢¸û ¦¾Ã¢Å¢ì¸¢ýÈÉ.

¦¼É¢Š ¦º¡¼¡§Ä¡ ±ýÈ þó¾ þ¨Ç»Õ째 ¾¡öÄ¡óÐìÌ Å¢ÎӨȨ ¸Æ¢ôÀ¾üÌ ¦ºýÚÅ¢ðÎ ¾¢ÕõÀ¢ ÅÕ¨¸Â¢ø ¸¼ó¾ ¿ÅõÀ÷ 12¬õ ¿¡û ¸ðο¡Âì¸ Å¡Û}÷¾¢ ¿¢¨ÄÂò¾¢ø þó¾ «ÛÀÅõ ²üÀðÎûÇÐ.

¸¼ó¾ ¦ÅûǢ츢ƨÁ À¢Ã¡ý…¢ø ¦ºö¾¢Â¡Ç÷¸Ç¢¼õ «Å÷ ¾ÁìÌ ¿¢¸úó¾Åü¨È Å¢Åâò¾¡÷.

º¢Ú ÅÂÐ Ó¾ø ¾Á츢ÕìÌõ §¿¡ö ¾õ¨Á, ¾¡ì¸¢Â §À¡Ð, ¾õ¨Á Å¡Û}÷¾¢¨Â Å¢ðÎ þÈ츢 º¢¸¢î¨º «Ç¢ìÌÁ¡Ú §¸ð¼¾¡¸ «Å÷ ÜȢɡ÷. ‚Äí¸ý Å¡Û}÷¾¢ §º¨Å «¾¢¸¡Ã¢¸û ¾õÁ¢¼õ ¬Å½í¸¨Ç §¸ð¼¾¡¸×õ, ¾õ¨Á «¨È ´ýÚìÌû «¨ÆòÐ ¦ºýÚ Å¢º¡Ã¢ò¾¾¡¸×õ, «ÐŨà «Å÷¸û ¾õÓ¼ý ¿ýÈ¡¸§Å ¿¼óÐ ¦¸¡ñ¼¾¡¸×õ «Å÷ ¦º¡ýÉ¡÷. «ô§À¡Ð «íÌ Åó¾ ‚ Äí¸¡ ¸¡ÅüШÈ¢É÷; þÕÅ÷ ¾õ¨Á ¾¡ì¸¢Â¾¡¸×õ, Á¢¸×õ ÀÄÁ¡¸ ¾¡ì¸¢ ¿¢Äò¾¢ø Å¢Øò¾¢Â¾¡¸×õ «Å÷ ÜȢɡ÷.

¾¡¦Á¡Õ ÀÂí¸ÃÅ¡¾¢ ±É «Å÷¸û ¿¢¨ÉòÐ ¾¡ìÌž¡¸ ±ñ½¢Â¾¡¸×õ, «Å÷¸Ç¢¼õ þÕóÐ ¾ôÒžü¸¡¸ «í¸¢ÕóÐ µÊ¾¡¸×õ, «ô§À¡Ð «Å÷¸û ÐôÀ¡ì¸¢Â¡ø Íð¼¾¢ø ¾ÁÐ À¢ýÒÈò¾¢ø ¸¡Âõ ²üÀ𼾡¸×õ «Å÷ §ÁÖõ ¦¾¡¢Å¢òÐûÇ¡÷.

«¾üÌ À¢ýÉ÷ ¾¡õ ¿¢¨ÉÅ¢Æó¾¾¡¸×õ, ¨¸Ôõ ¸¡ø¸Ùõ ¸ð¼ôÀð¼ ¿¢¨Ä¢ø À¾¢¨ÉóÐ ¿¡ð¸û ¾õ¨Á º¢¨È¢ø «¨¼òÐ ¨Åò¾¾¡¸×õ, ¾ÁÐ ¯¼Ä¢ø º¢¸¦Ã𠦿ÕôÀ¢É¡ø Í𼾡¸×õ «Å÷ ¦¾Ã¢Å¢ò¾¡÷.

«ÅÃÐ ¾¨Ä¢ø þÕóÐ ¸¡ø Ũà º¢¸¦Ãð ÝðÎ ¸¡Âí¸û ¯ûÇÉ. «ÅüÈ¢ø ´ýÚ 22 ¦ºýÈ¢Á£üÈ÷ ¿£ÇÁ¡ÉÐ.

«ÅÃÐ ¸¡¾Ä¢Â¡É þý¸¢Ã¢ð ±ýÀÅ÷ «Å÷ À½ò¾¡ø ¾¢ÕõÀ Åá¾Ð ÌÈ¢òÐ «îºÁ¨¼óÐ À¢Ã¡ý…¢ø ¦ÅǢŢŸ¡Ã «¨ÁîͼÛõ, ¦¸¡ØõÀ¢ÖûÇ À¢Ã¡ý…¢ý à¾Ã¸òмÛõ ¦¾¡¼÷Ò ¦¸¡ñÎ À¢ýÉ÷ ¦¸¡ØõÒìÌ §¿Ã¢ø ÅóÐ «Å¨Ã Á£ðÎî ¦ºýÚûÇ¡÷.

ÕÅ¡ý À̾¢Â¢ý ºð¼ò¾Ã½¢Â¡É §ƒ¡ý §À¡ø ¾¢Ä¦ÀÉò þó¾ ÐýÒÚò¾ø, «Ç×ìÌ Á£È¢Â ÅýÓ¨È ¦¾¡¼÷À¡¸ ‚ Äí¸ý Å¢Á¡É §º¨Å ¿¢ÚÅÉòÐìÌõ, º¢È£Äí¸¡ «¾¢¸¡Ã¢¸ÙìÌõ ±¾¢Ã¡¸ ºð¼ ¿¼ÅÊ쨸 ±ÎìÌõ ÓÂüº¢¸¨Ç §Áü¦¸¡ñÎûÇ¡÷ ±ýÚ À¢Ã¡ýº¢ý ¦ºö¾¢¸û ¦¾Ã¢Å¢ì¸¢ýÈÉ.