![]() |
|
தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: புலிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: புலிகள் (/showthread.php?tid=2806) |
தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: புலிகள் - வினித் - 10-23-2005 <b>அரச தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: விடுதலைப் புலிகள் [ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரொபர் 2005, 18:44 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு யாருக்கும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் வாரப் பத்திரிகையான சண்டே ஓப்சர்வருக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்: சிறிலங்கா அரச தலலைவர் நாம் எந்தக் கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை. நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளோம். தமிழ் மக்கள் சுதந்திரமாக தங்கள் வாக்குகளைச் செலுத்தலாம். சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஏமாற்றுவதை வழக்கமாக் கொண்டிருப்பதால் எந்தக் கட்சியையும் ஆதரிக்குமாறு தமிழ் மக்களிடம் நாங்கள் சொல்லவில்லை. தமிழீழப் பகுதிகளில் சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். அதற்குரிய முன் அனுமதிகளைப் பெற வேண்டும். முன்னைய தேர்தல் காலங்களில் சோதனைச் சாவடிகளில் தமிழ் மக்கள் வாக்குகளைச் செலுத்தவிடாமல் தடுக்கப்பட்டனர். கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 80 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டனர். இது அடிப்படை மனித உரிமை மீறல் என்று பின்னர் சிறிலங்கா தலைமை நீதிமன்றம் அறிவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரிக்கமாட்டார்கள் என்றார் தயா மாஸ்டர். </b> www.puthinam.com - victor - 10-23-2005 இது ஸ்ரீலங்காவின் தேர்தல்.........நாம்..அதாவது.தமீழீழ மக்கள்...யாருக்கும்...ஆதரவு வழங்கமுடியாது...... |