Yarl Forum
ஈழத் தமிழர் பட விழாவில் பாலுமகேந்திரா மகிழ்ச்சி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ஈழத் தமிழர் பட விழாவில் பாலுமகேந்திரா மகிழ்ச்சி (/showthread.php?tid=2776)



ஈழத் தமிழர் பட விழாவில் பாலுமகேந்திரா மகிழ்ச்சி - SUNDHAL - 10-25-2005

ஈழத் தமிழர் தயாரிக்கும் …மனதோடு மழைக்காலம்† பட விழாவில் டைரக்டர் பாலுமகேந்திரா இரட்டிப்பு மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஷhம், நித்யாதாஸ் நடிக்கும் …மனதோடு மழைக்காலம்† பட தொடக்க விழாவில் பாலுமகேந்திரா பேசியது„

இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்தியர் அல்லாத தமிழர் என்று கூறினார்கள். அது என்ன இந்தியர் அல்லாத தமிழர்? ஈழத் தமிழர்* என்று சொல்ல வேண்டியதுதானே. இப்படிச் சொல்வதில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். அவர்களில் ஒருவன் நான்.

நித்யாதாஸ் இப்படத்தில் அறிமுகமாகிறhர். சமீப காலமாக கேரளாவிலிருந்து அதிக நடிகைகள் தமிழுக்கு வருகிறhர்கள். கோபிகா, நயன்தாரா இப்படி நிறையபேரைக் கூறலாம். அந்த வரிசையில் நித்யாதாசும் நல்லதொரு இடத்தைப் பிடிப்பார். இது மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்றhர் பாலுமகேந்தரா.

…உள்ளம் கேட்குமே வெற்றி உங்களுக்கு கைகொடுத்திருக்கிறதா?† என்று நாயகன் ஷhமிடம் கேட்டபோது, …எனக்கு மறுவாழ்வு கொடுத்த படம் அது. ஒன்றரை வருடம் ஆனபிறகு பல தடைகளை கடந்து ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. எத்தனை வருடம் ஆனாலும் நல்ல படம் ஓடும் என்பதற்கு இதுவே சான்று. இளைஞர்களைக் கவரும் படம்தான் இப்போது எடுபடுகிறது. மனதோடு மழைக்காலம் அதுபோல் கதைதான் என்றhர் ஷhம்.

டைரக்டர் அற்புதன் கேட்டுக்கொண்டதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் டி.ஜp.தியாகராஜன், ஏ.எல்.அழகப்பன், ஆர்.பி.சவுத்ரி காமிராவை முடக்கிவிட முதல் காட்சியை எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார் படமாக்கினார்கள்.

தயாரிப்பாளர் அந்தோணி விழாவிற்கு வராததை எஸ்.பி.முத்துராமன் சுட்டிக்காட்டியபோது, …5 தமிழ்ப்படங்களை தயாரியுங்கள் அதன் வெற்றி விழாவிற்கு வருகிறேன் என துபாயிலிருந்து அந்தோணி தெரிவித்ததாக மற்றெhரு தயாரிப்பாளர் சேலஞ்ச் சக்திவேல் கூறினார். இதுபுதுமாதிரியான சேலஞ்சாக இருக்கிறதே என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.
Thanks..Karan....