Yarl Forum
கால் விரலை கவ்விக்கொண்டு ஓடிய பூனை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: கால் விரலை கவ்விக்கொண்டு ஓடிய பூனை (/showthread.php?tid=2699)



கால் விரலை கவ்விக்கொண்டு ஓடிய பூனை - SUNDHAL - 10-30-2005

எஜமானரின் துண்டான கால் விரலை கவ்விக்கொண்டு ஓடிய பூனை

ஜெர்மனியின் லீபெக் நகரை சேர்ந்தவர் உடோ ரீட். சமையல் அறையில் ரொட்டித்துண்டுகளை நறுக்கிய அவர் மறந்துபோய் கத்தியை தரையில் போட்டுவிட்டார். பின்னர் வெறுங்காலால் நடந்து சென்றபோது கத்தியில் பட்டு கால் விரல் துண்டாகி கீழே விழுந்துவிட்டது.

குளியல் அறைக்குச் சென்று காயத்துக்கு கட்டுப்போட்ட அவர், விரலுடன் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக ஆம்புலன்ஸ் வண்டியை அனுப்பி வைக்கும்படி செல்போனில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டு இருந்தார். அதற்குள் அவருடைய வளர்ப்புப்பூனை, துண்டித்த விரலை கவ்விக்கொண்டு வெளியே ஓடிவிட்டது.

சிறிது தூரம் அதை விரட்டிச்சென்ற ரீட், பின்னர் அந்த முயற்சியை கைவிட்டு விட்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். பூனை விரலை `திருடி'ச்சென்று இருக்காவிட்டால் அதை மீண்டும் பொருத்தி இருக்கலாம் என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்தனர்.
Thanks:Thanthi......


- RaMa - 10-30-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சுண்டல் நீங்களா கேட்டீர்கள் அந்த விரலை சுட்டுத் தரச்சொல்லி???? :roll:


- Birundan - 10-30-2005

ஓ சுண்டல் விரல் வேறு சுடுறாரா?


- tamilini - 10-30-2005

பாருங்க அதை நம்ம பூனைக்குட்டியாய் இருக்கப்போது. :wink:


- shanmuhi - 10-30-2005

ஓடிய பூனைக்குட்டி ஓடியதுதான்.


- Rasikai - 10-31-2005

என்ன எல்லோருக்கும் சுண்டல் கூட லொள்ளா கிடக்கு


- SUNDHAL - 11-01-2005

அதானே.....
எல்லாம் நீங்க இல்லாதது தான்...பேசாமா daily ஒரு பாடம் கட் பன்னிட்டு களம் வாங்கப்பா..
பாடம் கட் பன்னிட்டு சினிமாக்கு போறது மாதிரி இதுலையும் ஒரு கிக் இருக்கும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 11-01-2005

ஆஆ பாடத்தை கட் பண்ணீட்டு வரட்டா? அப்புறம் யாரு நமக்கு பாடம் சொல்லித்தாறது?