![]() |
|
வாகரையில் போராளி வீரச்சாவு! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வாகரையில் போராளி வீரச்சாவு! (/showthread.php?tid=2693) |
வாகரையில் போராளி வீரச்சாவு! - mayooran - 10-30-2005 மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் விடுதலைப் புலிப்போராளியொருவர் வீரச்சாவை தழுவியுள்ளார். விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலில் கருணா கருணா குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்ட எல்லைப் பகுதியிலுள்ள மதுரங்குளம் குஞ்சுக்குளத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரின் உதவியுடன் கருணா குழுவினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய கருணா குழுவினர், காவலரண் கடமையிலிருந்த விடுதலைப் புலிப் போராளிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகள் உடனடி பதில் தாக்குதலை நடத்தியதாக இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட தமது உறுப்பினரையும காயமடைந்த மேலும் மூவரையும் தூக்கிக் கொண்டு அப் பகுதியிலுள்ள இராணுவ முகாம் பக்கமாக தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. <span style='font-size:14pt;line-height:100%'> puthinam</span> |