Yarl Forum
புலிகளுக்கும் அல்கைடாவிற்கு தொடர்பு? புதிய தந்திரம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: புலிகளுக்கும் அல்கைடாவிற்கு தொடர்பு? புதிய தந்திரம் (/showthread.php?tid=2681)



புலிகளுக்கும் அல்கைடாவிற்கு தொடர்பு? புதிய தந்திரம் - வியாசன் - 10-31-2005

அல்-கைடா பயங்கரவாத அமைப்புடன் விடுதலைப் புலிகளிற்கு தொடர்பு இருக்கலாம் என தனது அருவருடிகள் மூலம் பரப்புரைகளைச் செய்து விடுதலைப் புலிகள் மீது நெருக்கடிகளை ஏற்படுத்த சிறீலங்கா அரச தரப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியைச் சேர்ந்த அனைத்துலக போரியல் கற்கை நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் விடுதலைப் புலிகளிற்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்து.

விடுதலைப் புலிகள் மீதும், தமிழரின் விடுதலைப் போரின் மீதும் எதிர்பைக் கொண்டுள்ள இந்திய புலனாய்வுதுறையின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருப்பதன் காரணமாக அவரைப் பயன்படுத்தி இது போன்ற அறிக்கைகளை வெளியிடவைத்து விடுதலைப் புலிகள் மீது அனைத்துலக அரங்கில் நெருக்கடிகளை ஏற்படுத்த சிறீலங்கா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

நன்றி சங்கதி