![]() |
|
சினிமா பின்னணி பாடகி லீலா மரணம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17) +--- Thread: சினிமா பின்னணி பாடகி லீலா மரணம் (/showthread.php?tid=2665) |
சினிமா பின்னணி பாடகி லீலா மரணம் - Vaanampaadi - 11-01-2005 சினிமா பின்னணி பாடகி லீலா மரணம் சென்னை, நவ. 1- பழம் பெரும் சினிமா பின்னணிப் பாடகி பி.லீலா மரணம் அடைந்தார். மிஸ்சியம்மா படத்தில் இடம் பெற்ற ``வாராயோ வெண்ணிலாவே'', வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இடம் பெற்ற ``கண்ணும் கண்ணும் கலந்து'', ஞான சவுந்தரி படத்தில் இடம் பெற்ற ``அருள் தரும் தேவ மாதாவே'' ஆகிய பாடல்கள் உட்பட ஏராளமான பாடல்களைப் பாடியவர் பி.லீலா. 76 வயதான இவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அதிகாலை 5 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். லீலா திருமணம் ஆகாதவர். கடைசி காலத்தில் அவருடைய அக்காள் வீட்டில் வசித்து வந்தார். தமிழ் பாடல்கள் தவிர மலையாளம், தெலுங்கு சினிமாப் பாடல்களுடன் ஏராளமான பக்திப் பாடல்களையும் அவர் பாடி இருக்கிறார். லீலாவின் உடல் சென்னை போரூரில் உள்ள சுடுகாட்டில் நேற்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை லீலாவின் அக்காள் மகன்கள் நந்தகுமார், கோபி கிருஷ்ணா ஆகியோர் செய்தனர். - stalin - 11-01-2005 அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> http://www.raaga.com/channels/tamil/artist...t/P._Leela.html
- Birundan - 11-01-2005 "வாராயோ வெண்ணிலாவே" நான் விரும்பிக்கேட்கும் பாடல், பாடகிக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். - AJeevan - 11-01-2005 மறைந்த பாடகி லீலா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.......... - Vasampu - 11-01-2005 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லார்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றென். எல்லாவற்றிக்கும் மேலாக அவரது பெருந்தன்மையையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் இடம்பெற்ற சிங்காரவேலனே பாடலைப் பாட முதலில் லீலாவைத்தான் கேட்டார்கள். ஆனால் அவரோ என்னைவிட சிறப்பாக பாட இன்னொருவர் இருக்கின்றார் என்று ஐhனகியை அறிமுகப்படுத்தினார்.எவ்வளவு பெருந்தன்மை. - SUNDHAL - 11-01-2005 நன்றி அண்ணா தகவல்க்கு உண்மையிலேயே பெருந்தண்மை தான்..... அவர் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...
- Rasikai - 11-01-2005 அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்
- கீதா - 11-01-2005
- Selvamuthu - 11-01-2005 பி.லீலா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி. பி.சுசிலா அவர்களுக்கு முன்னர் பிரபலமாக இருந்தவர் பி.லீலா என்று எண்ணுகிறேன். பின்னரும் பல பாடல்கள் பாடியுள்ளார். தற்போது நினைவுக்கு வருவது சபாஷ் மாப்பிள்ளை படத்தில் வரும் "குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்குது" என்ற பாடல்தான். கர்நாடக சங்கீத இசைக்கு ஏற்ற இனிமையான குரல்வளம் படைத்தவர். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம். - vasisutha - 11-02-2005 பி.லீலா அவர்களுக்கு எனது அஞ்சலி.................. - RaMa - 11-02-2005 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன் - Vishnu - 11-06-2005 மியா மியா பூனைக்குட்டி மீசைக்கார பூனைக்குட்டி அத்தான் மனசு வெல்லக்கட்டி.. அவர் அழகை சொல்லசி சின்னகுட்டு......என்று ஒரு பழைய பாடல்... இதை பாடியது இவர் தானோ?? இவரின் ஆத்மா சந்திஅடைய பிராத்திக்கிறேன். - sinnappu - 11-07-2005 Vishnu Wrote:
- Vasampu - 11-08-2005 <b>விஷ்ணு </b> நீங்கள் குறிப்பிட்ட மியா மியா புூனைக்குட்டி பாடலைப் பாடியவர் எம்.எஸ்.இராஜேஸ்வரி என்ற பாடகி. எனவே <b>இவர் அவரல்ல அவர் இவரல்ல</b> சின்னப்புவிற்கும் மப்பிலே தெரியலையோ???? - Vishnu - 11-09-2005 Vasampu Wrote:<b>விஷ்ணு </b> நன்றி அண்ணா... எனக்கு சரியாக தெரிந்து இருக்கவில்லை.... அது தான் இவர் தான் பாடினாரோ என்று நினைத்து கேட்டேன். தகவலுக்கு நன்றி |