Yarl Forum
எனக்குள் தொலைந்தவன்.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: எனக்குள் தொலைந்தவன்.. (/showthread.php?tid=2612)



எனக்குள் தொலைந்தவன்.. - இவோன் - 11-04-2005

எனக்குள் எழுந்தவன் நீ..
என்னருகில் இருந்த போதெல்லாம்..
இதயம்... ஏங்கும்..
என்னை நேசிப்பாயா
என நீ கேட்காயா..?

காதல் சொல்ல..
கசியும் இதயம்..!

என் மெல்லிய புன்னகையை..
உனைக் கண்டு துடிக்கும்..
விழிமடலை..
உன்னில் மட்டும் பேச வரும் தயக்கத்தை
உனக்கான என் காத்திருப்புக்களை
இறுதி வரை
நீ காதலென மொழிபெயர்த்துப் பார்க்கவில்லை.


என் இயலாமையின் முடிவில்
காலத்தின் கரைதலில்..
உன் மேலான என் காதலை
சொல்லும் காலம் வந்தது..
என் கணவனிடம்..!


- kpriyan - 11-04-2005

Quote:என் இயலாமையின் முடிவில்
காலத்தின் கரைதலில்..
உன் மேலான என் காதலை
சொல்லும் காலம் வந்தது..
என் கணவனிடம்..!

இதனைக் காதல் என்று அவள் கருதியிருந்தால்.. அதை அவனிடம் கேட்டிருக்கலாமே.. ஒருவேளை அவனும் அவ்வாறு நினைத்திருந்தால்...

கணவனையாவது ஒழுங்காக காதலிக்கட்டும்..


- poonai_kuddy - 11-04-2005

இவோனண்ணா நீங்கள் எழுதினதா????? நீங்களும் கவித எழுதுவீங்களா.....உண்மைல அண்ணா... நல்லா இருக்குது கவிதை. ஒரு பெண்ணின்ர காதல சொல்லுற தயக்கத்த நல்லா சொல்லியிருக்கிறீங்கள்.... அதப்போல கடைசில தன்ர முதல் காதல் உணர்வ பற்றி கணவனிட்ட அவா சொல்றதா சொல்லியிருக்கிறீங்க....ஆனா அது எந்தளவுக்கு இப்ப நடக்கு... கன பெண்களுக்கு பயம் சொல்றதுக்கு.... அத ஏற்றுக்கொள்ளுற பக்கவமும் தமிழ் ஆம்பிளையள் கனபேருக்கு இல்ல.... அதான் இங்க இருக்கிற பெட்டையள லவ் பண்ணி ஏமாத்திட்டு ஊரில போய் கல்யாணங்கட்டுறாங்கள் உவங்கள்.....

நல்ல கவிதையண்ணா....தொட்டுட்டீங்கள்....


- poonai_kuddy - 11-04-2005

kpriyan Wrote:
Quote:என் இயலாமையின் முடிவில்
காலத்தின் கரைதலில்..
உன் மேலான என் காதலை
சொல்லும் காலம் வந்தது..
என் கணவனிடம்..!

இதனைக் காதல் என்று அவள் கருதியிருந்தால்.. அதை அவனிடம் கேட்டிருக்கலாமே.. ஒருவேளை அவனும் அவ்வாறு நினைத்திருந்தால்...

கணவனையாவது ஒழுங்காக காதலிக்கட்டும்..

அதேன் அவ மட்டும் சொல்லோணும்... காதலெண்டால் இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில வரோணும் சரியா....ரண்டுபேரும் ஒரே நேரத்தில சொல்லணும்...அதான் காதல்... :wink:


- இவோன் - 11-05-2005

Quote:இவோனண்ணா நீங்கள் எழுதினதா????? நீங்களும் கவித எழுதுவீங்களா.....

யாழுக்கு வந்திட்டு கவிதை எழுதாமல் விட முடியுமா..? நன்றி பாராட்டுக்கு!


- aathipan - 11-05-2005

நல்ல கவிதைகள் இன்னும் எழுதுங்கள். படிக்க ஆவலாக உள்ளோம்...


- இவோன் - 11-05-2005

Quote:நல்ல கவிதைகள் இன்னும் எழுதுங்கள்.

அப்போ.. இது நல்ல கவித இல்லங்கிறீங்க.!! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சரிங்க!


- காவடி - 11-08-2005

ஐயோ.. இந்தக் கவிதையையே.. கொஞ்சம் மாற்றி..

காலக் கரைதலில்..
என் காதல் சொல்ல முடியவில்லை..

கடைசி வரை உனை நினைந்து
என் உயிர் வற்றி சாவேனே தவிர..
இன்னொரு வாழ்க்கை எனக்கில்லை..

என்றெழுதியிருந்தீரெண்டால்.. கரகோசம் சும்மா வானைப் பிளக்கும்.. அதை விட்டுப் போட்டு.


- ப்ரியசகி - 11-08-2005

Quote:என் இயலாமையின் முடிவில்
காலத்தின் கரைதலில்..
உன் மேலான என் காதலை
சொல்லும் காலம் வந்தது..
என் கணவனிடம்..!

ம்ம்..அழகான கவி..இந்த முடிவு எனக்கு பிடிச்சிருக்கு..


- காவடி - 11-08-2005

ஆனா.. பிரியசகி.. அந்தப் பிள்ளை ஒருவனை காதலிச்சிருந்தால்.. கடைசி வரை அவனைத்தானே நினைத்திருக்க வேண்டும். அவன் கிடைக்கவில்லையெண்டாலும் அவனைதானே காலம் முழுக்க நினைக்க வேணும்.. அது தானே உண்மையான காதலுக்கு அழகு..


- கீதா - 11-08-2005

இவோன் உங்கள் கவிதை நல்லாயிருக்கு நன்றிகள் தொடர்ந்து எழுதுங்கள் இவோன்


- aathipan - 11-08-2005

இன்றைய நடைமுறையில் எது இடம்பெறுகிறது எனப்பார்த்தால் இந்த முடிவு சரியாகத்தான் இருக்கிறது.

உங்கள் முடிவு நன்றாக இருகிறது ஆனால் ஒரு நூற்றாண்டு பின்னோக்கிச்செல்ல வைக்கிறது.