![]() |
|
முகமாலையில் கைக் குண்டுத் தாக்குதல் முயற்சி: நடந்தது என்ன? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: முகமாலையில் கைக் குண்டுத் தாக்குதல் முயற்சி: நடந்தது என்ன? (/showthread.php?tid=2611) |
முகமாலையில் கைக் குண்டுத் தாக்குதல் முயற்சி: நடந்தது என்ன? - வினித் - 11-04-2005 முகமாலையில் கைக் குண்டுத் தாக்குதல் முயற்சி: நடந்தது என்ன? [வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2005, 18:43 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசத்துக்குள் நுழைந்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. <b>இது தொடர்பாக எமது கிளிநொச்சி செய்தியாளர் அனுப்பியுள்ள தகவல்கள்:</b> வவுனியாவிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற வாகனங்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் முகமாலைச் சோதனைச் சாவடியில் இன்று நிறுத்திவைக்கபட்டிருந்தன. அந்த இடத்திற்கு அண்மையில் கைக்குண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இடத்தில் தரித்து நின்ற வாகனங்களை சோதனையிட முற்பட்டபோது ஒரு வாகனத்தில் இருந்து இருவர் சிறிலங்கா இராணுவ சோதனை நிலையை நோக்கி ஓடினர். <span style='font-size:25pt;line-height:100%'>அவர்களில் ஒருவர் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொரு நபர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் காவலரணில் நின்றவர்கள் எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்த்ததனர். இதில் அந்த நபர் படுகாயமடைந்த நிலையில் சூனியப் பிரதேசத்தில் விழுந்தார். அவரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் யாழ். வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்சாவகச்சேரியைச் சேர்ந்த விஜயவர்மன் மதிமுகராஜா (வயது 27) என்பவரே காயமடைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.</span> 1998 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாராக இருந்த பொன். மதிமுகராஜாவின் மகன் இவர். இன்றைய சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்றனர் ¦ºö¾¢ Á¡üÈ¢ þ¨ÉòÐ ¯û§Çý நன்றி: புதினம் - cannon - 11-04-2005 இச்சதி முயற்சியில் காயமடைந்த விஜயவர்மன் எனும் கூலி, அண்மையில் இந்திய றோவின் ஆதரவுடன் பரந்தன் ராசன்/ஆனந்தசங்கரி கூட்டுக்கூலிகள் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டமை யாவரும் அறிந்ததே! அக்கும்பலைச் சேர்ந்த கூலியில் ஒருவனே இவன் என அறிய முடிகிறது! - வியாசன் - 11-04-2005 திருநெல்வேலிக்கே அல்வாவா? ஆழம் அறியாமல் காலைவிட்டால் உப்பிடித்தான்.:oops: :oops: - cannon - 11-04-2005 <b>தப்பி ஓட முயன்று பிடிபட்ட மற்றொரு நபர் நிலை குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. </b> ஓஓ... அவராம் :roll: , பாதுகாப்பாக.....பாதுகாப்பில்......பாதுகாவலர்களிடம் இருக்கிறாராம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - victor - 11-04-2005 வினித்.........கோடம்பாக்கம் என்றவுடன் தான் ஞாபகம் வருகிரது....துரோகி..பரந்தன் ராஜன்.அவனது...துரோககும்பலும்..அங்குதான்..இருக்கிரார்கள்.. றோதாண் சாப்பாடு கொடுத்துவச்சிருக்கு |