![]() |
|
கண்காணிப்புக் குழுவின் பொறுப்பிலிருந்து விலகுகிறது நோர்வே - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கண்காணிப்புக் குழுவின் பொறுப்பிலிருந்து விலகுகிறது நோர்வே (/showthread.php?tid=2610) |
கண்காணிப்புக் குழுவின் பொறுப்பிலிருந்து விலகுகிறது நோர்வே - வினித் - 11-04-2005 <span style='font-size:30pt;line-height:100%'><b>போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறது நோர்வே</b>?</span>: நோர்வே போஸ்ட் இணையத் தளம் தெரிவித்துள்ளதாவது இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து நோர்வே பரிசீலிக்கும் என்று அமைதி முயற்சிகளுக்கான விசேட தூதுவரும் நோர்வே அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் அறிவித்துள்ளதாக நோர்வே போஸ்ட் இணையத் தளம் தெரிவித்துள்ளது. நோர்வே போஸ்ட் இணையத் தளம் தெரிவித்துள்ளதாவது: இலங்கை அமைதி முயற்சிகளின் அனுசரணையாளராகவும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பாளராகவும் நோர்வே செயற்பட்டு வருகிறது. நோர்வேயின் பணிகளை சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. சிறிலங்காவின் விமர்சனங்களையடுத்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து நோர்வே விலகிக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் இப்படியான எந்த ஒரு முடிவும் இனப்பிரச்சனையில் தொடர்புடைய இருதரப்பினரது ஆலோசனைக்குப் பிறகே மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். நன்றி: புதினம் |