Yarl Forum
தடை செய்ய உதவியவர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தடை செய்ய உதவியவர் (/showthread.php?tid=259)



தடை செய்ய உதவியவர் - நேசன் - 04-11-2006

விடுதலைப்புலிகளை கனடாவில் தடைசெய்வதற்கு முன்னின்று உழைத்த டி.பி யெயராஜ் அவர்களிடம் விடுதலைப்புலிகளின் தடைபற்றி தமிழோசை பேட்டி எடுத்து ஒலிபரப்பியதை கேட்டீர்களா?


- கந்தப்பு - 04-12-2006

தம்பி நேசன், உந்தச்செய்தியினை ஏன் நீர் வாழ்த்து/பாராட்டு களப்பிரிவில் பதிந்திருக்கிறீர்?. எட்டப்பன் ஜெயராஜுக்கு மறைமுகமாக வாழ்த்துச் சொல்லுகிறிரோ?


- Vasampu - 04-12-2006

<i>உப்படியே அடுத்தவர்கள் மேல் பழியைப் போட்டு நமது பக்கத் தவறுகளை நியாயப்படுத்துவதிலேயே குறியாக இருங்கள். ஏன் இப்படியான நிலை ஏற்பட்டது என்பதின் உண்மைத் தன்மையை ஆராய முன்வராதீர்கள்.</i>


- pepsi - 04-12-2006

Vasampu Wrote:<i>உப்படியே அடுத்தவர்கள் மேல் பழியைப் போட்டு நமது பக்கத் தவறுகளை நியாயப்படுத்துவதிலேயே குறியாக இருங்கள். ஏன் இப்படியான நிலை ஏற்பட்டது என்பதின் உண்மைத் தன்மையை ஆராய முன்வராதீர்கள்.</i>

சரி வசம்பு கனடா தடை செய்ததுக்கான எங்கள் தரப்பு தவறுகள் என்ன? சொல்லும் பார்ப்பம்? சுயநலத்துக்ககா நாட்டையும் மக்களுக்கும் அனியாயம் செய்யும் எல்லோரும் இதையே சொல்லுறீங்கள் சரி எங்கள் தவறுதான் என்ன?


- வர்ணன் - 04-12-2006

எத்தினை தடை வந்தும் ஒண்ணும் ஆகாது - தலைவா !

ஒரு ஜெயராஜ் - இல்ல ஒரு சில பன்னாடைகள் சொல்லி தடைகளை விதிக்கும் அளவிற்க்கு - சர்வதேசம் என்ன - அரை லூசா?

எல்லாம் ஒசாமா வால வந்தது - ரொம்ப பயப்பிடுறாங்க என்றதுதான் உண்மை -!

இருந்தும் எங்க பக்கம் இருக்கிற நியாயம் - ஓரளவு உலகம் தெரிஞ்சு வைச்சிருக்கு!

மத்தும்படி - இங்க சிலர் துள்ளி குதிக்கிற அளவிற்கு - அவர்களால் ஒண்ணும் ஆகல மாமு - அப்பிடி இருந்தால் - நோர்வே காரனை ஏத்திக்கொண்டு - கெலி கிளிநொச்சிக்கு பறக்காது - இவ்ளோ காலம்!


- Raguvaran - 04-12-2006

வர்ணன் Wrote:எத்தினை தடை வந்தும் ஒண்ணும் ஆகாது - தலைவா !

ஒரு ஜெயராஜ் - இல்ல ஒரு சில பன்னாடைகள் சொல்லி தடைகளை விதிக்கும் அளவிற்க்கு - சர்வதேசம் என்ன - அரை லூசா?

<b>எல்லாம் ஒசாமா வால வந்தது - ரொம்ப பயப்பிடுறாங்க என்றதுதான் உண்மை -!</b>
இருந்தும் எங்க பக்கம் இருக்கிற நியாயம் - ஓரளவு உலகம் தெரிஞ்சு வைச்சிருக்கு!

மத்தும்படி - இங்க சிலர் துள்ளி குதிக்கிற அளவிற்கு - அவர்களால் ஒண்ணும் ஆகல மாமு - அப்பிடி இருந்தால் - நோர்வே காரனை ஏத்திக்கொண்டு - கெலி கிளிநொச்சிக்கு பறக்காது - இவ்ளோ காலம்!


<b>இது உண்மை தான் வர்ணன்.

தமிழ் மக்களின் மனங்களிலிருந்து புலிகளை தடை செய்ய முடியாது</b>.


- aathipan - 04-12-2006

மற்ற நாடுகளில் தடை அமுலுக்கு வந்ததுமே வெளிப்படையான செயற்பாடுகள் குறைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது மறைமுகமாக்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் எமது தரப்பு நியாயங்களை அவர்களுக்கு அவ்வப்போது எடுத்துக்கூறி எந்த ஒரு தவறான அபிப்பிராயம் ஏற்படாது தடுத்திருக்க வேண்டும்.


- Nitharsan - 04-12-2006

கனடாவில் விடுதலைப் புலிகள்் தடை செய்யபட்டதற்க்கும் எந்த ஒரு தமிழ் துரோகிகளுக்கும் தொடர்பில்லை. தமிழ் துரோகிகளின் கதையை கேட்டு தடை செய்யும் அளவிற்க்கு கனடா தேடலற்ற ஒரு நாடு அல்ல. இது முற்றிலும் கன்சவேசிட்டி கட்சியில் திட்டமே தவிர வேறெதுவுமில்லை ஒசாமாவுக்கும் இந்த தடைக்கும் என்ன சம்பந்தம்? அப்படி அவனுக்கு பயந்து தடை செய்வதாயிருப்பின் செப்ரம்பர் 11 -2001 க்கு பின்னர் தடை செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்போது செய்யவில்லை. இப்போது சமாதானகாலத்தில் தடை செய்ய வேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லாத போதும். அவர்களின் முன்னைய திட்டப்படி ஆட்சிக்கு வந்த பின் தடை செய்துள்ளனர். என்பதே யதாாத்தம்....


- வர்ணன் - 04-12-2006

நிதர்ஸன் - இங்கே பொதுவாய் நாங்கள் கொண்ட அர்த்தம் வேறு!

`'ஒசாமாவுக்கும் இந்த தடைக்கும் என்ன சம்பந்தம்? அப்படி அவனுக்கு பயந்து தடை செய்வதாயிருப்பின் செப்ரம்பர் 11 ௨001 க்கு பின்னர் தடை செய்திருக்க வேண்டும்.'

நல்லது - ஒசாமாவுக்கும் - 2002 ல - இயக்கம் செய்து - இன்றுவரை - கைகள் கட்டப்பட்ட நிலையில் - கடைபிடிக்கும் ஒப்பந்தத்துக்கும் என்ன சம்பந்தம்?

பொதுவாய் ஒன்றை யாரும் தெரிந்து கொள்ளலாம் - உலக - சுதந்திர போராட்டங்களுக்கு ஆதரவாய் - குரல் எழுப்புவதை - எவ்ளோ காலம் முன்னமே - நாங்கள் பிறக்கு முன்னமே - தன் அரசியல் சட்டத்தில் கனடா தடை செய்து இருக்கு - இப்போ கொஞ்சம் மேலும் இறுக்கி இருக்கு!

விடுதலை போராட்டங்களூக்கு ஆதரவாய் - அகதிவிண்ணப்ப கோரிக்கையின்போது -வாக்குமூலம் தெரிவிப்பவர்கள் -

பெட்டி படுக்கையை கட்டி கொண்டு புறப்பட தயாராய் இருக்கணும் - புறப்பட்ட இடத்துக்கு திரும்பி போக - என்பது - கனடாவின் - எழுதப்பட்ட அரசியல் விதி!! 8)


- நேசன் - 04-12-2006

மூன்று இலட்சம் மக்கள் கூட்டம் என்பது ஒரு அதிர்வை ஏற்படுத்தக்கூடிய மக்கள் தொகை.அப்படி இருந்தும் அதை எல்லாம் புறம் தள்ளி செய்திருக்கிறார்கள் என்றால். எங்கள் சமூகக்கூட்டம் ஒரு பலவீனமானது என்பதை உணர்ந்து வைத்துள்ளார்கள்.

டென்மார்க் நாட்டில் முகமதுநபிகளின் கேலிச்சித்திரம் வரைந்து அந்த நாடு பட்ட அவஸ்தை போன்று எதுவும் இந்த கால்விழுந்து நக்கும் தமிழனால் வராது என்று கனடாவுக்கு நன்கு தெரிந்துள்ளது. :evil:


- uoorkkruvi - 04-13-2006

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கரிகால மலையில் ஊற்றெடுக்கும் புரட்சி ஆற்றைத் தடுப்பதற்கு அது என்ன கனடாவின் நாயாகராவில் இருந்தா சுரக்கிறது


- ThamilMahan - 04-13-2006

ஆயிரம் தடைகளை அவை போடட்டும். நாங்கள் எமக்குரிய பங்கை செய்துவிட்டு பேசாமல் இருந்தாலே போதும். எல்லாத்தடைகளையும் தாண்டி நம்மை வழிநடத்திவருபவர்கள் தொடர்ந்தும் வழிநடத்துவார்கள்.


- alika - 04-17-2006

உலகத்தில் ஆங்கில நாடுகளும், அதன் வாலைப் பிடிக்கும் முந்திய ஆங்கில அடிமை நாடுகளுமே எம்மை தடை செய்துள்ளன. ஆனால், தடை செய்ய, செய்ய நாங்கள் இன்னும் வலிமை அடைகிறோம் என்பதை கடந்த கால சமர் வெற்றிகளும், எம் அரசியல் கூட்டுறவும், சிங்கள அரசுக்கு கிடைக்கும் வெளிநாட்டு அழுத்தங்களும் வெளிப்படுத்துகின்றன.