![]() |
|
யாழ் மக்களுக்காக விரைவில் பளைப்பகுதியில் தமிழீழ நீதிமன்றம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யாழ் மக்களுக்காக விரைவில் பளைப்பகுதியில் தமிழீழ நீதிமன்றம் (/showthread.php?tid=2587) |
யாழ் மக்களுக்காக விரைவில் பளைப்பகுதியில் தமிழீழ நீதிமன்றம் - thiru - 11-06-2005 <b>யாழ் மக்களுக்காக விரைவில் பளைப்பகுதியில் தமிழீழ நீதிமன்றம்.</b> விடுதலைப் புலிகள் யாழ்மாவட்டத்திலிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் குறித்து விசாரிப்பதற்காக பளைப் பகுதியில் நீதிமன்றம் ஒன்றினை அமைக்க உத்தேசித்திருக்கிறார்கள். இதுகுறித்து தமிழீழ நீதி நிருவாகப் பொறுப்பாளர் பரா அவர்கள் தமக்குத் தெரிவித்ததாக சண்டே ரைம்ஸ் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ''கொள்ளைகள், வழிப்பறிகள், காணி மற்றும் குடும்பச் சச்சரவுகள் குறித்த முறைப்பாட்டிற்காகக் குற்றம் நடந்த இடத்திலிருந்து தொலைவில் உள்ள கிளிநொச்சிக்கு மக்கள் முறைப்பாடு செய்வதற்கு வரவேண்டியிருக்கிறது. இதனால் நீதிமன்றம் ஒன்றினைப் பளைப்பகுதியில் திறப்பதற்கு நாம் முடிவெடுத்திருக்கிறோம்" 'விடுதலைப் புலிகள் யாழ்மாவட்டத்தில் தமது அரசியற் பணிகளை இடைநிறுத்தி வெளியேறியபின்னர், குற்றச்செயல்கள் அங்கு அதிகரித்திருக்கின்றன. தனியே கடந்த இருமாதங்களில் மட்டும் கிளிநொச்சியில் உள்ள தமிழீழ நீதிமன்றில் 200ற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருக்கின்றன" என்று பரா அவர்கள் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது. <b>நன்றி:</b> த சண்டே ரைம்ஸ் <b>தமிழில்:</b> திருமகள் (ரஷ்யா) |