Yarl Forum
லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு: ரணில் மீதான மங்களவின் குற்றச்சா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு: ரணில் மீதான மங்களவின் குற்றச்சா (/showthread.php?tid=2585)



லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு: ரணில் மீதான மங்களவின் குற்றச்சா - thiru - 11-06-2005

<b>லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு: ரணில் மீதான மங்களவின் குற்றச்சாட்டு நிராகரிப்பு</b>

மந்திரி மங்கள சமரவீரவினால் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது தொடுக்கப்பட்ட கணனிக்கொள்ளவு தொடர்பான பலமில்லியன் டொலர் மோசடிக் குற்றச்சாட்டினை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு நிராகரித்துவிட்டது.

அதேவேளை சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச மீது லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு முன் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொர்ந்து விசாரணைகளை மேற்கொள்வதெனவும் அந்த ஆணைக்குழு தீர்மானித்திருக்கிறது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் அமீர் இஸ்மாயில் இதுகுறித்துத் தெரிவிக்கும் போது, 'ரணில் மீதான மங்கள சமரவீரவின் குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதவை, அந்த விடயம் அமைச்சரவை, மற்றும் திறைசேரியின் அனுமதி பெற்றே மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அதுகுறித்து மேலதிக விசாரணை தேவையில்லை" என்றார்.

அதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச தொடர்புபட்டதாகக் கூறப்படும் 'ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை' விடயம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.


'ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை விடயம் தொடர்பாக மகிந்தர் உச்ச நீதிமன்றில் பெற்ற இடைக்காலத் தடையுத்தரவு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு ஒரு தடையல்ல" என்றும் அமீர் இஸ்மாயில் மேலும் சொன்னார்.

<b>நன்றி:</b> த சண்டே ரைம்ஸ்
<b>தமிழில்:</b> திருமகள் (ரஷ்யா)