Yarl Forum
தம்பி 51 - தலைவர் பிறந்த தின கவிதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: தம்பி 51 - தலைவர் பிறந்த தின கவிதை (/showthread.php?tid=2555)



தம்பி 51 - தலைவர் பிறந்த தின கவிதை - இவோன் - 11-09-2005

<img src='http://www.oviarpugazh.com/albums/uranga-nirangal/aat.jpg' border='0' alt='user posted image'>

நேரில்
உன் முகம் பார்த்ததில்லை
நினைவில்
உன் முகம் மறந்ததில்லை

வயதில் எனைவிட
சிறியவன் நீ
வாழ்வில்
எவரினும் பெரியவன் நீ

அறமும் அகிம்சையும்
தோற்ற பின்னர்
அறுவை
முறையே ஏற்றதென
ஆயுதம்
கைகளில் ஏந்தி வைத்தாய்
அக்கினி
ஆற்றில் நீந்தி வந்தாய்..

எத்தரின்
தலைகளை வாங்கியவாள்
எத்தனை
துயரம் தாங்கியதோள்
அத்தனை
துயரிலும் உடன்நின்றார்
மொத்த
ஈழத் தமிழ்மக்கள்
இடிந்தது
எதிரிகள் ஈனத்தனம்
விடிந்தால்
வெல்லும்உன் ஈழத்தவம்
விரைவில்
இறுதிப் புயல்வீசும்
வேங்கைகள்
ஆள்வார் தமிழ்த்தேசம்

<b>-பேராசிரியர் சுப.வீரபாண்டியன் - (தமிழ்நாடு)</b>


- காவடி - 11-09-2005

தமிழ் உணர்வாளர்களின் எழுத்துக்களை தொடர்ந்தும் தருக இவோன்..!


- Rasikai - 11-09-2005

தலவரின் பிறந்த தின கவிதை அருமை. இணைப்புக்கு நன்றிகள் இவோன்


- Mathuran - 11-09-2005

அண்ணனைப் பாடிய தமிழ் ஐய்யனின் உயிர்ப் பா அருமையிலும் அருமை. ஈழத்தமிழருக்காய் இந்தியாவில் இன்னலை சுமக்கும் இமயங்களில் ஒருவர்.