Yarl Forum
மறைமுகமாக முடக்கப்படும் தமிழ் இளையோர். தீர்வு என்ன? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மறைமுகமாக முடக்கப்படும் தமிழ் இளையோர். தீர்வு என்ன? (/showthread.php?tid=2552)



மறைமுகமாக முடக்கப்படும் தமிழ் இளையோர். தீர்வு என்ன? - thiru - 11-09-2005

ஒரு தேசிய இனம் தனது விடுதலைக்காகப் போராடி வரும் தருணம் இது.

இந்தப் போராட்டத்தினை ஒடுக்க ஆக்கிரமிப்பாளர்கள் பல்வேறு ஆக்கிரமிப்பு வடிவங்களைப் புதிது புதிதாக அறிமுகப்படுத்தி எமது இளம் சந்ததியை நசுக்கிவிட, அவர்களைப் போராட்டத்தின் திக்கிலிருந்து திசைகெடவைக்க முனைப்புடன் முனைந்துவருகிறார்கள் என்பதும் உங்களுக்குப் புதிய செய்தியல்ல.

தமிழனின் கை கொண்டே அவனது கண்ணைக்குத்தும் முயற்சியாக தமிழ்ச் சிறார்களின் மனங்களில் நச்சு விதைகளை விதைத்துத் தறிகெட வைக்கச் சிங்களப் புலனாய்வுத் துறை முயன்றுவருவதும், யாழ் மண் ஆக்கிரமிக்கப்பட்ட காலம் முதல் இந்த நடவடிக்கைக்கான பரீட்சைக் களமாக யாழ் மண் விளங்குவதையும் தமிழீழ மக்கள் நன்கு அறிவர்.

யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லு}ரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி மீதான வன்புணர்வு மற்றும் படுகொலையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டம் படிப்படியாக விரிவடைந்து இன்று ஆபாசப் படங்கள், போதைதரும் பாக்குகள், சாராயக் கடைகள், அப்பக் கடைகள் என்று பல்வேறு வடிவங்களில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறு இளைய தமிழர்கள் திசைமாறவேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயற்படும் சிங்களதேசம் தனது நோக்கம் நிறைவேறி வருவதாகத் தற்போது எண்ணத்தலைப்பட்டுள்ளது.


இன்று 06-10-2005 கொழும்பில் பிரசுரமான சண்டே ரைம்ஸ் வார இதழில் 'யாழ்ப்பாண இளைஞர்கள் அனைவரும் போராடப் போய்விட்டதாகத் தோன்றிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் தீபாவளி தினத்தன்று வடக்கின் தலைப்பட்டினத்தில், நு}ற்றுக்கணக்கான இளைஞர்கள் மனோகரா திரையரங்கின் முன் புதிய திரைப்படமான சிவகாசியைக் காண வரிசை கட்டி நிற்கும் வித்தியாசமான காட்சியைக் காணமுடிந்தது.' என்ற விளக்கத்துடன் முதற்பக்கத்தில் படம் ஒன்று பிரசுரமாகியிருப்பதாக அறிய முடிகிறது. (நன்றி: த சண்டேரைம்ஸ்)

<img src='http://img118.imageshack.us/img118/7544/mano7rm.th.jpg' border='0' alt='user posted image'> (குறிப்பு: படத்தின் மீது அழுத்துவதன் மூலம் அதனைப் பெரிதாகத் தெளிவாகப் பார்க்கமுடியும்)

இளைஞர்கள் படத்திற்குச் செல்வதும், வரிசைகட்டுவதும் அந்தக்காலத்திலிருந்து நடந்துவரும் காரியங்கள். இதற்கு இப்பொழுது என்ன முக்கியத்துவம் வந்தது என்று சிந்தித்துப் பாருங்கள்.

சிறிலங்கா அரசினதும் அதன் புலனாய்வாளர்களினதும் உள்ளக்கிடக்கையை, அவர்கள் எதை விரும்பினார்களோ அதைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியை மேற்படி செய்தியிலிருந்து நீங்கள் அறியவில்லையா?

'படம் பார்ப்பதால் என்ன வந்து கெட்டது. நாங்கள் பார்க்காத படமா?' என்று உங்களிற் சிலர் நியாயமான ஒரு கேள்வியை எழுப்பலாம்.

நீங்கள் படம் பார்த்தீர்கள், படலையைப் புரட்டி நட்டீர்கள். ஆனால் தெருவில் செல்லும் பெண் புரசுகளைப் பதம்பார்க்கும் எண்ணமோ, அல்லது முதுகின் பின்னே கத்தியைச் செருகிச்சென்று கண்முன்னே கண்டவரைச் சீவித்தள்ளும் வெறியோ உங்களுக்குள் இருக்கவில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் (Surgical words) போய்பாருங்கள். பெண்நோயியல் மருத்துவரை (Gynecologist) , சிறுவர் பிரிவில் கடமைபுரியும் வைத்தியர்களைக் (Paediatricians) கேளுங்கள். பேரினவாதத்தின் திட்டமிட்ட, ஆனால் மிகவும் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டுவரும் இன அழிப்பின் புதிய வடிவம் குறித்து உங்களுக்கு ஒரு செய்தியை அவர்கள் சொல்லுவார்கள்.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் தினந்தோறும் அடிகாயங்களுடனும், வெட்டுக்காயங்களுடனும் விபத்துப் பிரிவில் (casualty word) அனுமதிக்கப்படுபவர்களில் பாதிக்குமேற்பட்டோர் பதின்வயதைச் (teenage) சேர்ந்த தமிழ் இளைஞர்கள். இவர்களில் பலருக்கு அடியும், வெட்டும் விழுவது தலையில்.

வெட்டுவதும் தமிழன். வெட்டப்படுவதும் தமிழன். வெட்டு விழுவதோ தலையில். தலை என்பது மிகவும் பிரதானமான அங்கம் என்பது 'எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்' என்று என்றைக்கோ எழுதிவைத்த தமிழனின் இன்றைய வாரிசுகளுக்குத் தெரியவில்லை.

இனி வெளிநோயார் பிரிவைப் (OPD) பார்ப்போமா? அங்கும் இளைஞர்கள் தென்படுகிறார்கள். பார்க்க வாட்டசாட்டமாக, அழகாகத் தென்படும் இவர்களுக்கு என்ன குறை??

இவர்கள் தற்போது வருந்துவற்குக் காரணமே, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் தலையில் பட்ட அடிதான். அந்த அடியின் பின்விளைவாகத் தற்போது மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டதால், உடலின் ஏதாவது ஒரு அல்லது பல பாகங்களில் வலி, சோர்வு, செயலிழப்பு, உணர்வின்மை போன்ற நரம்புத்தொகுதி சார்ந்த வியாதிகள் இவர்களைப் பீடித்துள்ளது.

அதாவது இதனை இன்னொரு விதமாகச் சொல்வதானால், யாழ்ப்பாணத்தை இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்து சிலகாலம் கழிகையில் அப்போது பதின்வயதில் இருந்த இந்த இளைஞர்கள், படங்களில் தாங்கள் பார்த்ததைப் பரீட்சித்துப் பார்த்ததன் பின்விளைவுகள் இவை.

இந்த நானாவித குளறுபடிகளுக்கும் காரணம் வைத்தியத் துறையால் இதுவரைக்கும் மாற்றுக் கண்டுபிடிக்கப்படாத அங்கமான மூளையில்- மைய நரம்புத் தொகுதியில் (CNS - Central Nervous system)- ஏற்பட்ட நிரந்தரப் பாதிப்புகள்.

இனி மருந்து மாத்திரைகளுடன் கழியப்போகும் இவர்களது எதிர்காலம் என்ன? இவ்வாறு மௌனமாக ஒரு இனத்தின் இளம் சமூகம் திட்டமிட்ட விதத்தில் முடமாக்கப்படுவது குறித்துக் குடாநாட்டிலுள்ள எவருமே - விடுதலைப் புலிகளைத் தவிரப்- புரிந்துகொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

இதற்குச் சற்றும் குறையாத வேதனைக் கதைகளுடன் பெண்கள் பிரிவும், சிறுவர் பிரிவும் இயங்குகின்றன. பராயமடையாத சிறுமிகளைக் கூட சிறுவர்களே தீண்டியதாக வழக்குகள். பதின்வயதில் கர்ப்பமாகி நடுத்தெருவில் நிறுத்தப்படும் சிறுமிகள், சட்டவிரோத கருக்கலைப்பால் தினசரி ஒருவராவது ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொடுமை.

இப்படிச் சிறுவயதிலேயே உளரீதியாக முடமாக்கப்படும் பெண்கள், சிறுமிகள் குறித்து எந்தப் பெண்ணுரிமைவாதிகளாவது, எந்தச் சர்வதேச சிறுவர் அமைப்புகளாவது கண்கொண்டு பார்த்தனரா? பாதிக்கப்பட்ட பின்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அறிக்கை விடுப்பதும்தான் இவர்களது செயற்பாட்டின் எல்லைகளா?? இப்படியான சம்பவங்கள் மேலும் நிகழாது தடுக்க இவர்களில் எவரிடமாவது தொலைநோக்கான திட்டங்கள் இருக்கிறதா???

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தவிர வேறு எந்தச் சனநாயகத்தின் காவலராவது இந்தச் சீரழிவு குறித்து ஒரு வரியாவது சிந்தித்திருக்கிறார்களா? பேசியிருக்கிறார்களா? தாமே 'சனநாயக்கத்தின் காவலர்கள்' என்றும் 'தமிழர்களைக் காக்க வந்த இரட்சகர்கள்' என்றும் உளறித்திரியும் எவராவது இந்தச் சீரழிவுகளைத் தடுப்பது குறித்து ஏதாவது செய்திருக்கிறார்களா? தமிழ் மக்கள் அவசியம் தங்களைத் தாங்களே கேட்டுணரவேண்டிய கேள்வி இது.

கேவலம்! இதிலே கூடப் புலிகளுக்கு ஆதரவான எவராவது அரிதாகச் சிக்குப்பட்டால் மட்டும் இவர்களது கண்ணிற்கு அது தென்படும். அதுவும் நீதிமன்றமே எச்சரிக்கும் அளவிற்கு அது பற்றி 'வீணையை மீட்டிக்' கூச்சலிடுவார்கள். ஆனால் மற்றவர்கள் குறித்து அவர்களிற்குக் கவலையில்லை. ஏன் தெரியுமா? புலிகளை எதிர்த்துக் கூச்சலிட்டால் மட்டுமே இவர்களுக்குச் சம்பளமும், சலுகைகளும் கிடைக்கும். வயிறு நிரம்பும்.

இங்கே உதாரணத்திற்குக் குறிப்பிட்டது யாழ் குடாவின் -யாழ்ப்பாண வைத்தியசாலையின்- எல்லைக்குள்ளான நிலைவரம். வடக்குக் கிழக்கில் எத்தனை இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்பது உங்களுக்கே தெரியும். இவ்வாறு சொல்லுந்தரமற்ற வகையில் எமது இளம் சந்ததி இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில்; இரகசியமாக அழிக்கப்பட்டு வருவதை தடுப்பதற்கு வழி என்ன?

நிச்சயமாக இதனை எமது மக்கள்தான் தடுக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் எவராவது வரவேண்டும் என்று பார்த்துக்கொண்டிருப்பதை விடுத்து மக்களே செயலில் இறங்கவேண்டும். அதாவது அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழ் மண்ணிலிருந்து தமிழ் மக்களால் அகற்றப்படவேண்டும். அதுவே இந்தச் சிக்கலிற்கான இறுதித் தீர்வாக அமையும்.

<b>-திருமகள்-</b>


Re: மறைமுகமாக முடக்கப்படும் தமிழ் இளையோர். தீர்வு என்ன? - கரிகாலன் - 11-10-2005

[quote=thiru][b][size=18]அதாவது அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழ் மண்ணிலிருந்து தமிழ் மக்களால் அகற்றப்படவேண்டும். அதுவே இந்தச் சிக்கலிற்கான இறுதித் தீர்வாக அமையும்


மக்கள் எப்படி ஆக்கிரமிப்பு இராணுவத்தை அகற்றுவார்கள் ??
நீங்கள் சொன்னது எனக்கு விளங்கவில்லை...


Re: மறைமுகமாக முடக்கப்படும் தமிழ் இளையோர். தீர்வு என்ன? - thiru - 11-10-2005

கரிகாலன் Wrote:[quote=thiru]<b>[size=18]அதாவது அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழ் மண்ணிலிருந்து தமிழ் மக்களால் அகற்றப்படவேண்டும். அதுவே இந்தச் சிக்கலிற்கான இறுதித் தீர்வாக அமையும்


மக்கள் எப்படி ஆக்கிரமிப்பு இராணுவத்தை அகற்றுவார்கள் ??
நீங்கள் சொன்னது எனக்கு விளங்கவில்லை...


முதற்கண் தங்களுக்குப் பொருள்மயக்கம் தோன்றுமாறு எனது வசனநடை அல்லது அப் அப்பந்தியின் கருப்பொருள் அமைந்துவிட்டதற்காக வருந்துகிறேன்.

இந்த வரிகளின் வாயிலாக நான் சொல்ல முற்பட்ட செய்தி தமிழீழ மக்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானதுதான்.

மக்கள் சக்தி அல்லது எழுச்சியின் முன்னால் எந்த வல்லரசும் தாக்குப்பிடிக்க முடியாது.

அதாவது தியாகி திலீபன் அவர்கள் 'மக்கள் புரட்சி வெடிக்கவேண்டும்' என்று தமது உரையிலே என்றோ குறிப்பிட்டதைத்தான் இன்று இந்த வார்த்தைகளிலே நான் சொல்ல முற்பட்டிருக்கிறேன்.

இந்த மக்கள் புரட்சிக்கான அறிகுறிகள் ஏற்கெனவே தமிழீழத்திலே தென்படத்தொடங்கிவிட்டதை -நாம் அறிந்தோமோ இல்லையோ- எதிரி அறிந்துகொண்டதைத்தான், அங்கு எதிரியால் திட்டமிடப்பட்ட வகையில் உருவாக்கப்பட்ட சிலரால் முன்னெடுக்கப்படும் ஊர்ச்சண்டைகளும், குழு மோதல்களும் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

அதுதவிர யாழ்ப்பாணத்திலே அண்மையில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வின்போது, பல்கலைக்கழகச் சுற்றாடலில் நிறுத்தப்பட்டிருந்த சிறிலங்கா காவல்துறையினர் அவ்வழியே வந்த ஊடகவியலாளரை வழிமறித்து ''மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?, நிகழ்வு முடியும்போது திரண்டுவந்து எம்மைத் தாக்குவார்களா?? "என்ற கேள்விகளைக் கேட்டனர் என்பது பல தமிழ் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதுவும் சிறிலங்கா படைத்தரப்பு மக்கள் எழுச்சி குறித்துக் கொண்டுள்ள நியாயமான அச்சத்தையே எடுத்தியம்புகிறது
.
இந்த மக்கள் எழுச்சியின் வடிவங்கள் தங்களது தென்மராட்சிப் பகுதியிலே பலதடவைகள் வெளிப்பட்டுள்ளன.

ஆகப் பிந்தி இது வெளிப்பட்ட இடம் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புத்து}ர். இதுகுறித்துத் தாங்கள் நன்கு அறிந்திருப்பீரகள் என்ற நம்பிக்கையால் இங்கு விளக்கமாக எழுத முற்படவில்லை.

[b]அன்புடன் திரு</b>


- கரிகாலன் - 11-12-2005

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி திரு
இலட்சியத்தால் ஒன்று பட்ட மக்களை யாராலும் அழிக்க/பிரிக்க முடியாதுதான்.