Yarl Forum
தன்னம்பிக்கை.. விடாமுயற்சி... உழைப்பு... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: தன்னம்பிக்கை.. விடாமுயற்சி... உழைப்பு... (/showthread.php?tid=2547)



தன்னம்பிக்கை.. விடாமுயற்சி... உழைப்பு... - aathipan - 11-09-2005

குருநகர், மவுண்கார்மேல் வீதியைச்சேர்ந்த அல்பெட் பெஸ்ரியன் 1988 ஆம் ஆண்டு நான்கு வயதுச் சிறுவனாக இருந்தார். அந்தக் காலத்தில் எமது மண்ணில் போர்க்காலச் சூழல் நிலவியது. மின்சக்தி பாவனை இருக்கவில்லை. ஆத னால் பழுதடைந்த மபோலியோடு சொட்டு மருந்தை வீடுவீடாகச் சென்று குழந்தைகளுக்கு வழங் கியதால், பெஸ்ரியன் போன்று அவயவங்கள் ஊனமுற்ற சிறுவர் கள் பலர். இன்னும் சில சிறு வர்கள் மரணித்தனர்.

உயிர் பிழைத்துக்கொண்ட பெஸ்ரியன் - 1990 ஆம் ஆண்டு ஆறாவது வயதில் இடம்பெயர் ந்து தமிழ்நாடு செல்ல நேர்ந்தது. அதற்கு முன்னர் முன்பள்ளியில் சிலமாதகாலமே இங்கே கல் வியைப் பெற்றுக்கொண்டார்.

இடுப்புக்குக் கீழே செயலி ழந்துவிட்ட பெஸ்ரியனை, சிறு வயதில் தாயாரே இடுப்பில் சுமந்துசென்று கல்வியைக் கற்க விட்டு அழைத்துவருவார். இதே நிலைமை தமிழ் நாட்டிலும் தொடர்ந்தது. ஆயினும் மனம் தளர்ந்துபோகாமல் சாதாரண கல்வியில் இருந்து, உயர் கல்வி யையும் பெற்று இன்று கணினித் துறையில் அவர் ஒரு நிபுண ராகத் திகழ்கிறார் என்றால், அவ ரது முயற்சியுடன் பெற்றோரின் அயராத உழைப்புந்தான் கைகொடு த்தது எனலாம்.

அவரை மநமது ஈழநாடுடு வாசகர்களுக்கு அறிமுகம் செய் யும் அதேவேளை - இவரைப் போன்று யுத்தநிலைமையால் நமது மண்ணில் பலர் இழப் புகளுக்கு உள்ளாகியிருப்பார் கள். அவர்களில் பெஸ்ரியனைப் போன்று வாழ்க்கையில் எதிர் நீச்சலடித்து முன்னேறியவர் எத்தனைபேர்?

இனிமேலும் இவரைப் போன்ற திடமனதுடைய சிறு வர்கள் உருவாகவேண்டுமென்ற நோக்கத்துடன், அவருடனான சந்திப்பில் பெற்றுக்கொண்ட வற்றை வாசித்துப் பாருங்கள்.

1990 ஆம் ஆண்டு நமது மண்ணில் ஏற்பட்ட யுத்த நிலைமையால் எனது குடும்பம் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்தது. தமிழ்நாட் டில் தங்கச்சிமடம் என்ற இடத் தில் சிலநாட்கள் இருந்தோம். பிற்பாடு வெள்ளப்பள்ளம் அகதி முகாமில் சிறிதுகாலம். அடுத்து பவானிசாகர் இதன்பின்பும் இடம்பெயர்ந்து...

ஈரோடு மாவட்டத்திலுள்ள அறச்சலூர் என்ற மிகவும் பின் தங்கிய கிராமம். இத்தனை கால மும் முன்பள்ளிப் பாடங் களையும், வீட்டில் அம்மா கற் றுத்தந்தவையுமே எனது கல்வித் தராதரமாக இருந்தது.

முதல்முறையாக பாடசா லைக் கல்விக்காக அறச்சலூரில் இருந்த பாடசாலையில் மூன் றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டு, கல்வியைத் தொடர்ந்தேன். ஆறாம் வகுப்பில் இருந்து அறச் சலூர் உயர்நிலைப் பள்ளியில் இணைந்து மபிளஸ்ற்ரூடு வரை கற்றுத் தேர்ந்தேன்.

இதற்கிடையில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் - மசென்ரல் வீடெக்டு என்னும் தனி யார் கணினிப் பயிற்சி மையத் தில் பெற்றோர் சேர்த்தார்கள்.

அங்கே கணினித்துறையில் 6 மாதகாலம் கணினி மென் பொருள் அடிப்படைக் கல்வி யையும், 6 மாதகாலம் கணினி வன்பொருள் அடிப்படைக் கல்வியையும் கற்றுத் தேறியிருந் தேன்.

10 ஆம் வகுப்புப் படிக்கை யில் வேறெந்தத் துறையிலும் ஈடுபடாமல், கல்லூரிப் பாடங் களையே கற்றதாலே மபிளஸ்ற்ரூடு வகுப்பில் திறமைச்சித்தி பெற லாம் என்பதால், கணினிக் கற் கைகளை ஒருவருடம் நிறுத்தி யிருந்தேன்.

10 ஆம் வகுப்பில் 60 விழுக் காடுகளுக்குமேல் எடுத்தாலே மபிளஸ்ற்ரூடுவில் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கு அனு மதி தருவார்கள். நான் அந்தத் தேர்வில் 68 புள்ளிகள் எடுத்து முதல் தரத்தில் தெரிவாகியிருந் தேன்.

அதேபோன்று மபிளஸ்ற்ரூடு விலும் ஆங்கிலம், கணிதம், அறி வியல், தமிழ் பாடங்களில் முதல் தரத்தில் தெரிவாகினேன். அதேவேளை தனியார் நிலை யத்தில் கற்றுவந்த கணினித் தேர்விலும் மிகச்சிறந்த பெறு பேறுகளைப் பெற்றிருந்ததால், பெருந்துறை நந்தாபொறியியல் கல்லூரி கணினிப் பிரிவில் சேர்க் கப்பட்டேன்.

4 வருடம் படிக்கவேண்டிய கற்கைகளில் என்னால் ஒரு வருடம் மட்டுமே கற்க இயன் றது. மூன்று மாடிகள் உள்ள அந் தக் கல்லூரியில் - முதல் மாடி யில் எனக்கான கற்கைகள் இருந்தபோதும், இருபது படிக ளில் தினம் ஏறி இறங்குகையில் முழங்கால் சிரட்டைகளில் தேய்வு ஏற்பட்டதால், வைத்தி யரின் ஆலோசனைப்படி ஒரு வருடத்துடன் நிறுத்தவேண்டி ஏற்பட்டது. அவ்வேளை மலிப்ற்டு வசதிகள் இருக்கவில்லை.

திரும்பவும் அறச்சலூர் வந் தேன். அப்பொழுது முதலில் எனக்கு கணினி வகுப்பெடுத்த ஆசிரியர் இத்தோடு விட்டு விடாமல் தொடர்ந்தும் கணி னித்துறையில் மேலதிக கற்கை நெறிகளைப் பெறச் சொன்னார்.

பிற்பாடு மூலப்பாளையம் என்னும் இடத்தில் தங்கிநின்று, ஈரோடு மாவட்டத்திலுள்ள மசிக்சிக்மா சொலீயுசன்ஸ்டு என் னும் தனியார் நிறுவனத்தில் 1 வருடம் மகிறாபிக்ஸ்டு படித்தேன். இதன் தலைமை அலுவலகம் அமெரிக்காவிலுள்ள புளொ றிடா மாநிலத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

என்று கூறிய பெஸ்ரியன் தொடர்ந்தும் தெரிவித்ததா வது-

மசிக்சிக்மா சொலீயுசன்ஸ்டு நிறுவனத்தில் எனது திறமை யைப் பார்த்து, பகுதிநேர ஆசி ரியராக மாதம் எண்ணாயிரத்து ஐந்நூறு இந்திய ரூபா சம்பளத் தில் நியமனம் பெற்று ஆறு மாதம் சேவையாற்றினேன்.

இந்தநிலையில் எனது குடும் பத்தைச் சேர்ந்த பல உறுப்பி னர்கள் எமது தாயக மண்ணுக்கு வந்து சேர்ந்தனர். என்னோடு இருந்த பெற்றாரும் இங்கே வர நேர்ந்ததால், நானும் தாயக மான குருநகர் மண்ணுக்கு வந்து சேர்ந்தேன்.

அங்கே கற்றிருந்த கணினி வேலைகளை ஒருவருடகாலம் எமது வீட்டில் வைத்துச் செய்து வந்தேன். இப்பொழுது குரு நகர், மவுண்கார் மேல்வீதி, 45 ஆம் இலக்கத்தில் மபெஸ்ட் வொர்க்ஸ்டு என்னும் கணினி சார்ந்த வேலைத் தலத்தைப் பெற்றார் நிறுவித்தந்துள்ளனர்.

எனக்கு நேரே மூத்த சகோ தரன் சுவேந்திரனின் உதவியு டன் அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறேன். எனக்கு சகல விதத் திலும் உதவியாக இருப்பவர்கள் தகப்பனார் அல்பெட் சின்னத் துரை, தாயார் திரேசம்மா, சகோதர சகோதரிகள்தான்.

எனது வேலைத்தலத்தில் வீடியோ மிக்சிங், எடிட்டிங், போட்டோ டிசைனிங், புத்தக வடிவமைப்பு, நூல்கள் பதிப்பித் தல், கலண்டர் மாதிரிகள் மற் றும் சகல வாழ்த்துமடல்கள், வீடி யோவை இறுவெட்டுக்கு மாற் றல், டி.வி.டிக்கு மாற்றல், கல் யாண புகைப்பட ஆல்பம் வடி வமைத்தல், கடை மற்றும் சினிமா விளம்பரம் செய்தல் ஆகிய வேலைகளைச் செய்து வரு கிறேன்.

இவ்விதம் தெரிவித்த மபெஸ்ட் வொர்க்ஸ்டு உரிமையாளர் அல் பேட் பெஸ்ரியனிடமிருந்து விடைபெறும்போது அவரது தன்னம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சியும், உழைப்பும் பிரமிக்கவைத்தது. மற்றையோர் க்கு முன்னுதாரணமாகவும் இருந்தது.

நன்றி - நமது ஈழநாடு


- RaMa - 11-10-2005

நன்றி தகவலை இங்கு இனைத்தமைக்கு... ஊனமாயிருந்தாலும் உள்ளத்தில் உறுதி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நீருபித்து விட்டார். இப்படியானவர்கள் உயர்வு பெற கூட இருப்பவர்களின் ஒத்தாசை தான் முக்கிய காரணம்..
அவர் மேலும் வளர வாழ்த்துக்கள்


- அருவி - 11-10-2005

இவ்வாறு பல ஊனமுற்றவர்கள் எம் தாயகத்தில் தம் சுய முயற்சியில் தம்மாலானதைச் செய்து தம் குடம்ாத்தையும் வாழ வைத்துக் கொண்டுள்ளார்கள்


- ஈழமகன் - 11-11-2005

இங்கேயும் இருக்கிறார்கள் விடாமுயற்சியுடன்..................................
எப்படி மட்டை போடுவதென்று....