Yarl Forum
வடிவேலு மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: வடிவேலு மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள்! (/showthread.php?tid=2526)



வடிவேலு மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள்! - orutamilan - 11-10-2005

வடிவேலு மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள்!

காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பதுபோல் வடிவேலு மேல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்.

அந்த வகையில் இந்த வார குற்றச்சாட்டு...

பிரபு - கார்த்திக் இணைந்து நடிக்க ராஜ்கபூர் இயக்கத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் சுந்தரி பிலிம்ஸ் முருகன் தயாரிப்பில் உருவான படம் குஸ்தி.

கிட்டத்தட்ட பாதிக்கு மேல் படப்பிடிப்பு முடிந்துவிட்ட இந்தப் படத்தில் வடிவேலுதான் காமெடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


ஒரு வருடத்திற்கு முன் 12 லகரங்கள் சம்பளம் பேசிய வடிவேலு மொத்த சம்பளத்தையும் வாங்கிவிட்டார்.

இப்பொழுது கூடுதலாக சில லகரங்களை தந்தால்தான் எஞ்சிய படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்.

ஆனால் தயாரிப்பாளர் முருகனோ பேசிய சம்பளத்தை தந்தாச்சு. நடித்துக் கொடுத்துதான் ஆகணும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.

இப்பொழுது இந்தப் பஞ்சாயத்து புரொடியூசர் கவுன்சிலுக்கு போக இருக்கிறது அவ்வளவுதான்.


- shanmuhi - 11-10-2005

வடிவேலு மீது வடிவா தந்த குற்றச்சாட்டுக்களுக்கு நன்றிகள் ஒரு தமிழன்.
இதை சினிமா பகுதிக்குள் போட்டிருந்தால் இன்னும் வடிவாயிருந்திருக்கும் இல்லையா...