![]() |
|
இலங்கையிலிருந்து சென்னை வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இலங்கையிலிருந்து சென்னை வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக் (/showthread.php?tid=2512) |
இலங்கையிலிருந்து சென்னை வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக் - Vaanampaadi - 11-11-2005 சென்னை வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கு அனுமதி மறுப்பு நவம்பர் 11, 2005 சென்னை: சுற்றுலா விசா மூலம் இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். விமானங்களை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திலும், பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் சுற்றுலா விசா மூலம் இலங்கை வழியாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் சென்னை வந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கருத்தை கேட்டனர். ஐந்து பேரையும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதன் பேரி அவர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். Thatstamil - kuruvikal - 11-11-2005 அப்ப ஒரு காலத்தில் பலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு மாங்கு மாங்கு என்று குரல் கொடுத்தவை பாடு என்னாச்சு...??! இதேதான் நமக்கும் நடத்தி இருக்கினம்..! :wink: hock:
- Birundan - 11-11-2005 இது எல்லாம் ஒரு விடயமா? அரபு நாடுகளிடம் நக்குவதற்கு ஒரு கதை, பின்னர் அமெரிக்காவிடம் நக்குவதற்கு ஒருகதை, நக்குவதற்கு ஒரு நாக்கு, பேசுவதற்கு ஒரு நாக்கு இதுதான் அரசியல், கேட்டால் இதுதான் வெளியுறவுக்கொள்கை என்பர், காலம் கற்றுத்தந்தபாடத்தை நாம் எழிதில் மறந்து விடுகிறோம், இலங்கைத்தமிழர் விடயத்தில் என்ன நடந்ததென மறந்துவிட்டோமா? - தூயவன் - 11-11-2005 நக்கின்ற நாய்க்கு அமெரிக்கா என்ன பாலஸ்தீனம் என்ன என்கின்றீர்களா பிருந்தன்? :wink: |