Yarl Forum
சூடான பஜ்ஜி....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: சூடான பஜ்ஜி....! (/showthread.php?tid=2505)



சூடான பஜ்ஜி....! - shanmuhi - 11-11-2005

[size=18]<b>சூடான பஜ்ஜி....! </b>

பஜ்ஜி

தேவையான பொருட்கள்:-

கடலைமாவு - 2 கப்
மிளகாய்தூள் - 1 மேஜைகரண்டி
சோடாஉப்பு - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
கலர்பொடி - சிறிது
உப்பு - தேவையான அளவு
கத்திரிக்காய் - 1
பெரிய வெங்காயம் -1
வாழைக்காய் - 1
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :-


1. கடலைமாவு, மிளகாய்தூள், சோடாஉப்பு, பெருங்காயத்தூள்,கலர்பொடி,உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து தோசைமாவுக்கு கரைப்பது போல் கரைத்துக் கொள்ளவும்.

2. பிறகு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை மிகவும் மெலிதாக வெட்டி, பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கிய காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.

3. பஜ்ஜி உப்பி வந்தவுடன் எடுத்து விருப்பமான சட்னியுடன் பரிமாற வேண்டியதுதான். கரகர மொறு மொறு பஜ்ஜி தயார்...!


சுட்டது - http://nilaachoru.blogspot.com/


- Thala - 11-11-2005

அட இப்பிடித்தான் பஜ்ஜி செய்யிறதா..??... நண்றி சண்முகி அக்கா...


- sathiri - 11-11-2005

சுட்டாதான் அதுக்கு பேர் பஜ்ஜி சண்முகியக்கா நன்றி சரி சொஜ்ஜி செய்ய தெரியுமா?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-11-2005

என்ன வாசிக்க பஜ்ஜி செய்யிறது ஈசியாக்கிடக்கு. ( செய்யத்தான் கஸ்டமோ)

சாத்திரி அதென்ன புதிசா சொஜ்ஜி.. முனிஸ் மொடேனா மாறினாலும் மாறினா.. புதிசு புதிசா சாத்திரிக்கு எடுத்து விடிறா போல. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 11-11-2005

நன்றி சண்முகி உங்கள் செய்முறைக்கு.... இவ்வளவு நாளும் இடியப்பாத்தை சாம்பலுடனும் சேரதியுடனும் சாப்பிட்டு அலுத்து விட்டது. இப்போது புதிசா ஒன்று..


- அருவி - 11-11-2005

சூட்டுடன் சாப்பிடத்தான் பஜ்ஜி நன்றாக இருக்கும். வெங்காய பஜ்ஜி போடும் போது கவனம் அதை சட்டியில் இருந்து எடுக்கும் போது ஒவ்வொரு வளையம் வளையமா வரப்பாக்கும், எண்ணையும் அதிகம் உறிஞ்சும்.


- Rasikai - 11-12-2005

செய்முறைக்கு நன்றி சண்முகி.

சாத்திரி அப்படியே சொஜ்ஜி இன் செய்முறையை போடுங்கோ நான் இதுவரை கேள்விப்பட இல்லை அப்படி ஒரு பெயரை


- MUGATHTHAR - 11-12-2005

பஜ்ஜிகள் பல வகையிருக்கு போல என்ன.... வாய் ஊறுது சாப்பிட ..........
உங்களுக்கு இன்னொரு பஜ்ஜி சொல்லுறன் செய்து பாருங்கோ பிங்கர் சிப் பஜ்ஜி விரல்களை கடலை மாவுக்குள் தோய்ச்செடுத்து அப்பிடியே எண்ணெலை பொரிக்கிறது சூப்பரா இருக்கும் ஆனா என்ன அஸ்பத்திரிக்கு போக ரெடியா இருந்தாச் சரி.......


- Mathan - 11-12-2005

ஆகா பஜ்ஜி சாப்பிடவேணும் போல இருக்கு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
படத்தில் தான் அடிக்கடி பஜ்ஜி சொஜ்ஜி எண்டு வரு, இதில் பஜ்ஜி சாப்பிட்டிருக்கேன். சொஜ்ஜி எப்படி இருக்கும்? அதன் படத்தையாவது யாராவது போடுங்களேன்.


- tamilini - 11-12-2005

Quote:சொஜ்ஜி எப்படி இருக்கும்?
ஐயோ அப்படி ஒன்றிருக்கா.. உண்மையா. சாத்திரி சும்மா சொல்றார் என்டு நினைச்சன். :?


- Mathan - 11-12-2005

நிச்சயமா இருக்கணும் எண்டு நினைக்கிறேன், படங்களில் பெண் பார்க்க போகும் போது அடிக்கடி பஜ்ஜி, சொஜ்ஜி என்று சொல்வார்களே


- tamilini - 11-12-2005

படங்களில் எதுகை மோனைக்காக அப்படி பஜ்ஜி சொஜ்ஜி என்பார்கள் என்று நினைக்கிறன். இப்ப சம்பளம் கிம்பளம் என்டமாதிரி. சொஜ்ஜி என்ற ஒன்றை இதுவரை நான் அறியவில்லை. தெரிந்தவர்கள் தகவல் தாருங்களேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 11-12-2005

ஆகா அப்படியா அப்ப நான் தான் தெரியாமல் சொஜ்ஜி படம் போட சொல்லி கேட்டுட்டனா