Yarl Forum
''காதலி''யுடன் வாழ மறுத்து ஜெயிலுக்கு சென்ற வாலிபர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ''காதலி''யுடன் வாழ மறுத்து ஜெயிலுக்கு சென்ற வாலிபர் (/showthread.php?tid=2504)



''காதலி''யுடன் வாழ மறுத்து ஜெயிலுக்கு சென்ற வாலிபர் - SUNDHAL - 11-11-2005

''காதலி''யுடன் வாழ மறுத்து ஜெயிலுக்கு சென்ற வாலிபர்

தன்னுடன் தகராறு செய்து அடிதடியில் இறங்கியகாதலியுடன்வாழ மறுத்து ஜெயிலுக்கு சென்றார் ஒரு வாலிபர். இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள உவோமிங் மாநிலத்தில் உள்ள செனினே நகரில் நடந்துள்ளது, அந்த நகரை சேர்ந்த வாலிபர் ரிக்கிஎவிங், ஒரு பெண்ணை காதலித்தார். நாளடைவில்இருவர்இடையே தகராறு வந்துவிட்டது. ஒருவரைஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த வழக்கில் ரிக்கி எவிங் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி எட்வர்டு கிராண்ட்,'' வாலிபர் ரிக்கி எவிங் தனது காதலியுடன் 6ஆண்டுகள் வாழவேண்டும்., இல்லையேல் 6 ஆண்டுகள் சிறை தண்டனைஅனுபவிக்க வேண்டும்'' என்று தீர்ப்பளித்தார். இதை கேட்ட ரிக்கி எவிங்,''காதலியுடன்இனி என்னால்சேர்ந்து வாழ முடியாது,. என்னை சிறைக்கு அனுப்பிவிடுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார். ரிக்கி எவிங்கின் விருப்பத்தை நிறைவேற்றினார், நீதிபதி.


- Thala - 11-11-2005

வாழ்க்கையில நல்லா அடிபட்டுட்டார் எண்டுங்கோ... கடைசியா அடிபட்ட அண்டு வாழ்க்கை வெறுத்துட்டுது ஆக்கும்...... இதுவே இந்தியாவாய் இருந்தா சாமியாராகி ஆசிரமம் தொடங்கி இருக்கலாம்..........ம்ம்ம்ம்ம்ம்


- sathiri - 11-11-2005

சுண்டல் செய்தியை வடிவா படிச்சனியாப்பு பாவம் எங்கடை முகத்தானோ தெரியாது Cry Cry


- tamilini - 11-11-2005

Quote:வழக்கை விசாரித்த நீதிபதி எட்வர்டு கிராண்ட்,'' வாலிபர் ரிக்கி எவிங் தனது காதலியுடன் 6ஆண்டுகள் வாழவேண்டும்., இல்லையேல் 6 ஆண்டுகள் சிறை தண்டனைஅனுபவிக்க வேண்டும்'' என்று தீர்ப்பளித்தார். இதை கேட்ட ரிக்கி எவிங்,''காதலியுடன்இனி என்னால்சேர்ந்து வாழ முடியாது,. என்னை சிறைக்கு அனுப்பிவிடுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார். ரிக்கி எவிங்கின் விருப்பத்தை நிறைவேற்றினார், நீதிபதி.
_________________

அப்படி என்ன தான் நடந்திச்சோ.. வாழ்வதை விட யெயில் பறவாய் இல்லை என்று முடிவெடுத்திருக்கார்னா... நம்மாளு றொம்ப நல்லாப்போட்டிருக்கா. அப்பாடா .. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- SUNDHAL - 11-12-2005

அப்பாடாவா? ம்ம்ம்ம்ம்;ம பாவம் வரபோறவர்................ Cry Cry <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 11-12-2005

saththiri Wrote:சுண்டல் செய்தியை வடிவா படிச்சனியாப்பு பாவம் எங்கடை முகத்தானோ தெரியாது

என்ன சாத்திரி அங்கே ஏதோ வாழுற மாதிரி......... ஜெயிலை மணியடிச்சா சாப்பாடு கிடைக்குது நிம்மதி எண்டு பெடி நினைச்சிருக்கு அப்பு எங்கடை நாட்டுக்கு இப்படி சட்டங்கள் வராதோடி................


- kuruvikal - 11-12-2005

வாழ்க்கை வெறுக்கிற அளவுக்கு பொண்ணு என்ன பண்ணிச்சோ..!!! அல்லது இவர் என்ன பண்ணினாரோ..அந்தப் பொண்ணுக்கு..! நிம்மதியெங்கே நிம்மதியெங்கே என்று..தேடி ஜெயிலுக்கு போட்டார்..! இப்ப பொண்ணுக்கும் நிம்மதிதானே..! கவலைக்குரிய விடயம்...ஜெயிலை விட அந்தப் பொண்ணு...மோசம் எண்டதுதான்...! :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- aathipan - 11-12-2005

சாகும் வரைக்கும் அந்தப்பெண்ணோடை வாழ்க்கை என்கிற சிறையில இருக்கிறதவிட
ஆறு வருசம் அரசாங்க சிறையில இருந்துட்டு அப்புறமா சந்தோசமா வாழுறது நல்ல ஐடியாதான்..


- ஈழமகன் - 11-12-2005

பிழைக்கத் தெரிந்த மனிதன்........................................................


- Maruthankerny - 11-13-2005

புதிதாக வந்த ஒரு தமிழ் படம் ( பெயரை மறந்துவிட்டேன்) அதை பாத்திருப்பாரோ......? ஆதாவது அதில வார ஒரு பகிடி!

மனைவி: என்னப்பா இன்றைக்கு என்ன நாள் என்று தெரியாத மாதிரி ஏதோ ஆழ்ந்த சிந்தனையில இருக்கிறீங்கள். இன்றைக்கு எங்கட 20வது கல்யாண நாளேல்லே. என்ன யோசிக்கிறீங்கள்?

கணவன்: உனக்கு ஞாபகம் இருக்கோ? 20 வருடத்திற்கு முன்னால நானும் நீயும் மாமரத்துக்கு பின்னால ஒருத்தருக்கும் தெரியாமல் காதலில் மயங்கி கிடக்கேக்க. அதால வந்த உன்ரை அப்பா(பொலிஸ்) எங்களை தவறுதலாக கண்டுவிட. என்னை வந்து வெருட்டினது. இவளவும் நடந்திட்டுது. இனி என்ர மகளின்ர களுத்தில மரியாதையாக தாலியை கட்டிவிடு இல்லை என்றால் உன்னை ஸ்டேசன் கொண்டு போய் கேஸ் பைல் பண்ணி இருவது வருடம் உள்ளுக்கு தள்ளி விடுவேன் என்று மிரட்டியதும் நான் பயத்திலேயே உன் களுத்தில் தாலி கட்டினதும்.

மனைவி: ஞாபகமிருக்கு அதுக்கு இப்போ என்ன?

கணவன்: அன்றைக்கு மட்டும் நான் கொஞ்சம் யோசித்து முடிவை மாற்றி எடுத்திருந்தால்......????? இன்றைக்காவது நான் விடுதலை பெற்றிருப்பேனே. அதைதிதான் யோசிக்கிறேன்.