![]() |
|
மேஜர் தர படை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மேஜர் தர படை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு. (/showthread.php?tid=248) |
மேஜர் தர படை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு. - Vaanampaadi - 04-12-2006 புதன் 12-04-2006 21:18 மணி தமிழீழம் [நிருபர் மகான்] <b>வாளைச்சேனை மாஞ்சோலையில் மேஜர் தர படை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு</b>. வாழைச்சேனை மாஞ்சோலை முஸ்ஸிம் பகுதியில் இராணுவ உயர் அதிகாரி மீது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாஞ்சோலையில் உள்ள முஸ்ஸிம் வீடு ஒன்றுக்கு இன்று புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். 38 அகவையுடைய மேஜர் குமாரசம்பவ இடத்திலேயே படுகாயமடைந்துள்ளார். 48 அகவையுடைய கஜனலி என்ற இன்னொரு படைவீரரும் காயமடைந்துள்ளார். இவர்கள் இருவரும் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிற்சைக்காக சிறீலங்கா உலங்கு வானூர்தி மூலம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1& - Vaanampaadi - 04-12-2006 <b>மட்டக்களப்பில் மேஜர் தர அதிகாரி சுட்டுக்கொலை</b> - பாண்டியன் - Wednesday, 12 April 2006 21:57 மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை மாஞ்சோலைப் பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் ஸ்ரீலங்கா இராணுவத்தின் மேஜர் தர அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் மற்றுமொரு சிப்பாய் படுகாயமடைந்துள்ளார். அதிகாரி குமார(38) என்ற இராணுவ அதிகாரியே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக படைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ஹசன் அலி(48)என்ற சிப்பாய் மட்டக்களப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. http://www.sankathi.com/index.php?option=c...=2553&Itemid=26 |