![]() |
|
முள்ளை, முள்ளால் எடுக்க திட்டம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: முள்ளை, முள்ளால் எடுக்க திட்டம் (/showthread.php?tid=2477) |
முள்ளை, முள்ளால் எடுக்க திட்டம் - SUNDHAL - 11-13-2005 முள்ளை, முள்ளால் எடுக்க திட்டம் பிரான்ஸ் நாட்டில் இப்போது பல இடங்களிலும் கலவரம் நடைபெறுகிறது. பிரான்ஸ் நாட்டு போலீசார் இந்த கலவரத்தை அடக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ரஷியா முன்வந்து இருக்கிறது. ரஷியாவின் இடதுசாரி அரசியல் கட்சியை சேர்ந்த ஜிரினோவ்ஸ்கி என்பவர், பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள தந்தியில், "எங்களிடம் அடி-தடியில் புகழ் பெற்ற கால்பந்து முரட்டு ரசிகர்கள் இருக்கிறார்கள். எப்படிப்பட்ட கலவரத்தையும் இவர்கள் 48 மணி நேரத்தில் அடக்கிவிடுவார்கள். அவர்களது உதவி தேவை என்றால் நூற்றுக்கணக்கில் அவர்களை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்க தயாராக இருப்பதாக'' கூறியுள்ளார். இந்த உதவியை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. Thanks;Thanthi... |