Yarl Forum
தமிழில் சில சொற்களுக்கு பொருள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: தமிழில் சில சொற்களுக்கு பொருள் (/showthread.php?tid=2440)



தமிழில் சில சொற்களுக்கு பொருள் - MUGATHTHAR - 11-16-2005

தமிழில் சில சொற்களுக்கு இப்படியும் பொருள் படும் எண்டு சொல்லினம் பாருங்கோ

1. <b>அடைக்கலம்</b> - அடை சுடுவதற்காகப் பாவிக்கப்படும் பாத்திரம்

2. <b>அறைகூவல்</b> - ரூமுக்கிலை இருந்து கொண்டு கத்துவது

3. <b>அடியுரம்</b> - மூட்டைக்கு அடியில் கிடக்கும் உரம்

4. <b>குக்கிராமம்</b> - சமையல்காரர் மட்டும் வசிக்கும் சின்னஊர்

5. <b>குளறுபடி </b> - உச்சரிப்பு தெரியாமல் தப்புத் தப்பா படிப்பது

6. <b>நாட்டாமை</b> - ஊர்புறங்களில் காணப்படும் ஊர்வன - ஒருவகைப் பிராணி

7. <b>புல்லரிப்பு</b> - புல் வைக்கோல் போண்றவை வெற்றுடம்பில் படுவதால் ஏற்படும் ஒருவகை நமைச்சல்

8. <b>நிறவெறி </b> - கலரான பெண்களைப் பாத்ததும் இளைஞர்களுக்கு ஏற்படும் எல்லை மீறிய கிளு கிளுப்பு

9. <b> பலசரக்குக் கடை</b>- எல்லாவகையான மதுவகைகளையும் விற்பளை செய்யும் டாஸ்மாக்

10. <b>படை வீரன் </b>- உடம்பு முழுக்க படை வந்தாலும் டாக்டரிடம் போகாமல் எதிர்த்து போராடுகிறவன்

11. <b>சிரஞ்சீவி</b> - தயவு காட்டாமல் தலையை வெட்டும் கூலிக்காரன்

12. <b>முகவெட்டு</b> - 2 ரவுடிகளுக்கு இடையில் நடக்கும் தகராறில் முகத்தில் ஏற்படும் பிளேடுக் கீறல்

13. <b>ஆதிகாரம்</b> - ஓவராக மிளகாய் சேர்க்கப்பட்ட உணவு

குங்குமம்


- RaMa - 11-16-2005

ஆகா அங்கிள் அப்படியே புதிய ஆகாராதி ஒன்று தாயரிக்கலாமே? பழைய தமிழ் சொற்களுக்கு புதிய கருத்துக்கள் என்று...
இப்படியான கருத்துக்களில் தானே பொன்னம்மாக்காவும் சின்னாச்சியும் முனியாம்மாவும் கதைப்பார்கள் அங்கிள்?


- Rasikai - 11-16-2005

தமிழில் சில சொற்களுக்கு உங்களின் புதிய விளக்கம் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது