Yarl Forum
தோசை ஐவ்வரிசி தோசை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: தோசை ஐவ்வரிசி தோசை (/showthread.php?tid=2437)



தோசை ஐவ்வரிசி தோசை - RaMa - 11-16-2005


தேவையான பொருட்கள்:-

ஜவ்வரிசி - 1 கப்
பச்சை பட்டாணி - கால் கப்
உருளைக்கிழங்கு - 2
இஞ்சி - சிறிது
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு



செய்முறை:-

தோசை செய்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன் ஜவ்வரிசியை வெந்நீரில் ஊற வைக்கவும்,
பச்சை பட்டாணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு, ஊறவைத்த ஜவ்வரிசியுடன் அரைத்த பட்டாணி, மசித்த உருளைக் கிழங்கு, துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக அரிந்த வெங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தோசை ஊற்றுங்கள்.
சூடாகச் சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும். தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் போதுமானது.


நன்றி:வணக்கம் மலேசியா


- MUGATHTHAR - 11-16-2005

தோசை சாப்பிடுவதுக்கு சிறந்தது என்ன
1. உரலிலை இடிச்ச சம்பல்
2. சாம்பார்
3. கட்டை சம்பல்
4. மீன் குழம்பு
இதென்ன பிள்ளை தக்கானி சாஸ் உறைப்பு இராதே........


- Vasampu - 11-16-2005

<b>ரமா</b>
இந்தத் தோசைக்கு மா புளிக்கத் தேவையில்லையோ

<b>முகத்தார்</b>
தோசைக்கு என்ரை தெரிவு சட்னி அல்லது சாம்பார் தான்.


- Rasikai - 11-16-2005

அப்படித்தான் போல கிடக்கு வம்பண்ணா. சரி நான் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு ரை பண்ணிப்பார்க்குறன்.

முகத்தார். தோசைக்கு உரலில் இடித்த சம்பல் தான் சூப்பர்.


- RaMa - 11-16-2005

வசம்பு இதனை புளிக்க வைக்க தேவையில்லை. நேற்று செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது.
ஆமாம் அதற்கு சாஸ்சை விட சாம்பல் தான் சிறந்தது.
ரசிகை ஒரு 30 நிமிடத்திற்குள் ரெடியாகி விடும் தோசை. றை பண்ணி பாருங்கள்


- கீதா - 11-16-2005

ரமா உங்கள் செய்முறைக்கு மிக்க நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sinnappu - 11-18-2005

சத்தியமா பிள்ளையள் நான் உந்த உழுந்து ஐடங்கள் சாப்பிடுறேல்லை சாப்பிட்டா கடவுளே 3 நாளுக்கு ரண்ணிங் தான்
Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry :evil: :evil: :evil: :evil: