Yarl Forum
கருவேப்பிலையின் மகிமை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: கருவேப்பிலையின் மகிமை (/showthread.php?tid=2436)



கருவேப்பிலையின் மகிமை - RaMa - 11-16-2005

பித்தம் நீங்க:-

கருவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தைப் போக்கும். சுக்கும் பனை வெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீரைக்குடித்து வந்தால் பித்தம் ஏற்படாது.

பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்று போக காலை வெறும் வயிற்றில் கொஞ்சம் வேப்பம்பூவுடன் சிறிய துண்டு கருப்பட்டி வைத்து அரைத்து இரண்டு பெருநெல்லிக்காய் அளவு சாப்பிடவும்.

தலைவலி நீங்க:-

சாதாரண தலைவலிக்கு, சுக்கை தண்ணீர்விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பற்றுப் போட்டால் நீங்கும். சுரத்தின் போது ஏற்படும் கடுமையான தலைவலிக்கு கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப்போட்டால் குணமாகும்.

வெற்றிலையின் காம்பு, லவங்கம், ஏலரிசி ஆகியவற்றை சம அளவாக எடுத்து பால் கலந்து அரைத்து, சூடாக்கி, கொதிக்க வைத்து நெற்றிப் பொட்டிலும், உச்சந்தலையிலும் போட்டுவர கடுமையான தலைவலி விலகும்.

பல்வலி நீங்க:-

சாதாரண பல்வலிக்கு ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொண்டாலே போதும் வலி அதிகமாக இருந்தால் கடுகை அரைத்துப் பல்வலி இருக்கும் பக்கம் கன்னத்தின்மேல் பொடி செய்து பற்றுப் போட்டால் குணமாகும்.


நன்றி:வணக்கம் மலேசியா


- MUGATHTHAR - 11-16-2005

அப்ப வீட்டிலை கருவேப்பிலை மரத்தை வைக்கச் சொல்லுறீயள் எங்கை இருக்கிற மரத்தையே சனம் இறைச்சி காச்சவெண்டு வந்து உருவிட்டுப் போகுதுகள்...........


- RaMa - 11-16-2005

MUGATHTHAR Wrote:அப்ப வீட்டிலை கருவேப்பிலை மரத்தை வைக்கச் சொல்லுறீயள் எங்கை இருக்கிற மரத்தையே சனம் இறைச்சி காச்சவெண்டு வந்து உருவிட்டுப் போகுதுகள்...........


அங்கிள் பேட் ருமுக்குள் இல்லாட்டி சாமி அறைக்குள் வையுங்கள்... அங்கு வாரமாட்டார்கள் தானே...
இல்லாட்டி ஒவ்வொருநாளும் இலையில் கொஞ்ச வேப்ப எண்ணெய் தடவி விடுங்கள். ஒருநாள் சமைத்து பார்த்து விட்டு திரும்பி வரமாட்டார்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->