Yarl Forum
16 மாணவர்கள் கைது... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: 16 மாணவர்கள் கைது... (/showthread.php?tid=2430)



16 மாணவர்கள் கைது... - Nilavan. - 11-16-2005

16மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ரொரன்ரோ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 வயதுடைய அதே கல்லு}ரி மாணவி கொடுத்த தகவலை அடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டனர். தன் மீத பாலியல் இம்சையில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளர். சம்பந்தப்பட்டவர்கள் தன்னுனை கடந்த ஒருவருடங்களுக்கு மேலாக பாலியல் இம்சைப்படுத்தியதாக கடந்த வாரமத் அவர் தனது ஆசிரியர் ஒருவருக்கு தெரிவிக்க அவர் அதை காவில் துறையினரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதனடிப்படையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களின் இருவர் பெண்கள். இருவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கறுப்பினத்தவர்கள் என்பதால் இது திட்டமிட்டு கறுப்பினத்தவர் மீது இருக்கு காழ்ப்புணர்ச்சியால் உருவாக்கப்பட்ட சுூழ்ச்சி என்று பல கறுப்பினத்தவர்கள் வாதாடுகின்றனர். அவர்களின் கேள்வி... இதை யாராவது நம்புவார்களா? உண்மையில் எனது கருத்தின் படி இதை யாரும் நம்பமுடியாது இது திட்டமிட்ட சதியாகக் கூட இருக்கலாம். காரணம் கைது செய்யப்பட்ட மாணவர்கள் எந்த குழுக்களுடனும் தொடர்பற்றவர்கள்.

I never knew that anything like this is going on. I'm like totally in shock," said the 31-year-old woman, who is also related to one of the girls charged. "There's no question in my heart that this is totally false. My son has had nothing to do with this."

"எனக்கு என்ன இங்கே நடை பெறுகின்றது என்று தெரியவில்லை. ஆனால் எனது மகன் இதில் ஈடுபட்டிருக்க மாட்டர் அதில் எந்த கேள்விக்கும் இடமில்லை" என்று நேற்று காவல் நிலையத்துக்கு வந்த ஒரு மாணவனின் தாயார் சொன்னர். இவர் கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறவினருமாவார்.

காவல் துறை தொடர்ந்து மாணவியின் நண்பர்கள் மற்றுமு; கைது செய்யப்பட்டவர்களின் நண்பர்களை விசாரித்து வருகின்றது. அத்தொடு பாடசாலை ஒளிப்படக்கருவியில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்படங்களையும் பார்க்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் நேற்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.


- அருவி - 11-16-2005

இம்மாணவர்கள் அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிற்கு கடுமையான நிபந்னைகளும் விதிக்கப்பட்டுள்ளன.


- Nilavan. - 11-16-2005

நான் இன்னும் அந்த செய்தியை பார்க்கவில்லை. நன்றி அருவி