Yarl Forum
எங்களுக்கும் மூளை இருக்குங்க! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: எங்களுக்கும் மூளை இருக்குங்க! (/showthread.php?tid=2426)



எங்களுக்கும் மூளை இருக்குங்க! - SUNDHAL - 11-17-2005

குரங்கில் இருந்து தான் மனிதன் பிறந்தான் என்று சார்லஸ் டார்வின் கூறிய கூற்று பல நூற்றாண்டை கடந்து விட்டது. இருந்த போதிலும் அதன் சர்ச்சை மட்டும் குறையவே இல்லை. உண்மையிலே மனிதனின் முன்னோடி குரங்கு இனத்தில் இருந்து தான் வந்ததா? என்பது பற்றி தீவிரமாக பல நாடுகளில் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

மனிதனின் சந்ததி நிச்சயமாக குரங்கு இன வழி தோன்றல் போல தான் உள்ளது என்று காங்கோ நாட்டை சார்ந்த விஞ்ஞானி கோட்டிபிராய்டு ஹக்மேன் கூறியுள்ளார்.

காங்கோ நாட்டில் சமுக விரோதிகள் சிலரால் சில மாதங்களுக்கு முன் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த கொரில்லா மனித குரங்கு ஒன்றை அந்நாட்டு காவல் துறையினர் மீட்டு அங்கு உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் சேர்த்திருந்தனர். இந்த கொரில்லாவிற்கு இரண்டரை வயது.

மனித குரங்களை பற்றியும் அவற்றின் குணநலன்களை பற்றியும் ஆராய்வதற்காக கோட்டி பிராய்டும் அவரது குழுவினரும் வந்திருந்தனர். அவர்களுக்கு சிறிய கொரில்லாவின் நடவடிக்கைகளை காண ஆசை ஏற்பட்டது. அதன்படி அவர்கள் கொரில்லாவின் நடவடிக்கைகளை கவனித்தனர். கிட்டதட்ட மனிதனை போலவே நடந்து கொண்ட கொரில்லா மீது அவர்களுக்கு வியப்பும், ஆச்சரியமும் ஏற்பட்டது.

கொட்டைகளை உடைத்து சாப்பிடுகிறது. ஆழமான நீரில் குச்சியை வைத்து பார்த்து நீரில் இறங்குகிறது என மனிதனின் நடவடிக்கைகளை செய்வதைக் கண்டு திகைத்து போயிருந்தனர். மனித குரங்களை பற்றி விரிவான ஆய்வுகளை செய்ய தீர்மானித்தனர்.

மனித குரங்குகளில் கொரில்லா, சிம்பென்சி, ஏப் என்ற வகைகள் உண்டு. இந்த மூன்று இன குரங்குகளும் மனிதனின் குணங்களை கொண்டு உள்ளது. இவற்றை கொண்டு மனித தொடர்பு ரகசியங்களை கண்டு பிடித்து விடலாம் என்று கூறுகிறார்.
Thanks:Thanthi..


- RaMa - 11-17-2005

மம்ம் தகவலுக்கு நன்றி சுண்டல்....இவர்களின் ஆராய்ச்சி முடிவும் இதைதானே சொல்லப்போகுது.. அதாவது குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்று... :?:


- Danklas - 11-17-2005

குரங்கு காட்டுவதாகக் கூறி சிறுவர் களைக் கூட்டிச்சென்ற இளைஞர் குழு ஒன்று சிறுவன் ஒருவனின் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரைப்பவுண் தங் கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தலைமறைவாகியது. இந்தச் சம்பவம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோயில் சுற்றாடலில் இடம்பெற்றது.
புலோலி மேற்கைச் சேர்ந்தோரின் திருமண வைபவம் ஒன்று கடந்த வாரம் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோயிலில் நடைபெற்றது.
இத்திருமணத்துக்காக சென்றிருந்த சில சிறுவர்களிடம் அங்கு வந்திருந்த இனம் தெரியாத சில இளைஞர்கள் குரங்கு பார்க்கலாம் வாருங்கள் காட்டு கிறோம் என்று கூறிக் கோயிலின் புறச் சூழலுக்கு அழைத்துச் சென்று சிறுவர் களில் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு தலைமறைவாகினர்.

உதயன்...

சுண்டல் அப்ப இது என்னமாதிரி?? யாரிடம் இருந்து யார் கற்ற வித்தை?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :evil:


- தூயவன் - 11-17-2005

டண் சன்னதித் திருவிழா எப்படி? தேர் வரைக்கும் நின்றீர்களா? :wink: