Yarl Forum
மனதுமட்டும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மனதுமட்டும் (/showthread.php?tid=2422)



மனதுமட்டும் - inthirajith - 11-17-2005

சந்தோசத்துக்கும் அதை பகிரவும் மட்டும் தானா
சகியே உன் மனது உன்சந்தோசம் கண்டு புன்னகை
சகிதம் வரவேற்கும் மனது புரிந்தால் உன்வார்த்தைகள்
சுகமாய் வருடும் தென்றல் மனதின் வலிபுரியா உறவும்

மங்கையரை புரியாது தவிக்கும் வாலிபங்களும்
மனதைபடிக்கமுடியா தனிமையும் எப்போதுமே
மனதின் வலிபுரியா உன் வார்த்தைகளும் என்
மயக்கங்களும் எப்போதும் என் வார்த்தைகள்
மதிக்கப்படாதபோது வரும் வலி உனக்கு

புரியாது உன்னை சுற்றி உறவு இருக்கும் என்னை
புரியாது உன்மனம் புரிந்தால் மனதுமட்டும் அழுவது
புரியும் பகிரவும் ஆறுதல் கிடைக்கவும் அதற்கோர்
புரிந்த உறவு வேண்டும் கிடைத்தவர் மட்டும்

அதை அறியாமலே புன்னகை யின்றி வாழ்வை தொலைத்து
அன்பும் புரியா மனதுடனும் வாழும் தனி மனித
அவலங்கள் எம் தலைவிதி மாறா ரணங்களும்
அருகில் இல்லா மனதும் அலைகின்ற போது நீ வேண்டும்


- Rasikai - 11-17-2005

இந்திரஜித் உங்கள் மனதுமட்டும் கவிதை அழகாக இருக்கிறது மேலும் தொடருங்கோ