![]() |
|
பிரபாகரன் குறித்த எமது அனுபவம் தோல்வியடைந்துவிட்டது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பிரபாகரன் குறித்த எமது அனுபவம் தோல்வியடைந்துவிட்டது (/showthread.php?tid=2383) |
பிரபாகரன் குறித்த எமது அனுபவம் தோல்வியடைந்துவிட்டது - வினித் - 11-19-2005 <b>பிரபாகரனின் எண்ண ஓட்டங்கள் குறித்த எமது அனுபவம் தோல்வியடைந்துவிட்டது: ராஜித சேனாரத்ன </b> [சனிக்கிழமை, 19 நவம்பர் 2005, 16:49 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடித்துவிட்டனர் என்றும் புலிகளின் தலைவரின் எண்ண ஓட்டங்கள் குறித்த எமது அனுபவம் தோல்வியடைந்துவிட்டது என்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின்னர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ராஜித சேனாரத்ன கூறியுள்ளதாவது: வடக்கு-கிழக்கில் பாரிய அளவிலான வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அர்சியல் தந்திரோபயத்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய பெரும்பான்மையான தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்காமல் தடுக்கப்பட்டுவிட்டனர். தமிழர்கள் வாக்களித்திருந்தால் ஆகக் குறைந்த பட்சம் நாம் 5 லட்சம் வாக்குகளையாவது நாம் பெற்றிருப்போம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் எண்ண ஓட்டங்கள் குறித்த எமது அனுபவம் தோல்வியடைந்துவிட்டது. தென்னிலங்கையில் ஒரு கடும்போக்காளர் வருவதன் மூலம் யுத்தத்தை மீளவும் தொடர தமிழீழ விடுதலைப் புலிகள் எண்ணுகின்றனர். சர்வதேச வலைப்பின்னலுடன் கூடிய அமைதி முயற்சிகளுக்கு வெளியேற வேண்டிய தேவை விடுதலைப் புலிகளுக்கு உள்ளது. இதற்காக மகிந்த ராஜபக்சவினது வெற்றி அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்றார் ராஜித சேனாரத்ன. நனறி:புதினம் Re: பிரபாகரன் குறித்த எமது அனுபவம் தோல்வியடைந்துவிட்டது - தூயவன் - 11-19-2005 50 வருடமாக எம்மை ஏமாத்தினியல்லோ! இப்ப தெரிகின்றதோ அதன் வலி? இதற்கெல்லாம் வருந்தலாமா? எனி இதை அடிக்கடி சொல்லவேண்டி வரும். :wink: |