![]() |
|
வனிலா ஐஸ்கிறீம் செய்யும் முறை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: வனிலா ஐஸ்கிறீம் செய்யும் முறை (/showthread.php?tid=2358) |
வனிலா ஐஸ்கிறீம் செய்யும் முறை - sabi - 11-20-2005 வனிலா ஐஸ்கிறீம் செய்யும் முறை தேவையான பொருட்கள்:- ரின்பால்- அரை ரின் சீனி- 100 கிராம் முட்டை- 2 வனிலா- அரை மேசைக்கரண்டி தண்ணி- அரை கோப்பை (தேத்தண்ணிக் கோப்பை) ஜெலற்றின்- ஒரு கோப்பை செய்முறை:- தண்ணியோடை பாலை நல்லாச் சேத்து அடிச்சுக்கலக்கவும். பின்பு ஜெலற்றினை பாலுடன் கரைக்கவும். பின்பு அப்பாலினுள் சீனியையும் போட்டு அடுப்பில் வைத்துச் சீனி கரையும் வரை காய்ச்சவும். 5 நிமிடம் கழித்து இறக்கவும். இறக்கிய பாலில் - (சூடு ஆறிய பின்னர் ) 2 முட்டை மஞ்சட்கருவை நன்றாக அடித்து பாலுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து இறுகும்வரை காய்ச்சவும். பின்னர் இறக்கிய பாலை நன்றாக அடித்துக்கலக்கி ஆறவிடவும். வெள்ளைக்கருவை நன்றாக அடித்து ஆறிய பாலில் சேர்க்கவும். கடைசியாக வனிலாவைச் சேர்த்துக் கலக்கவும். பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் கடும்குளிர் பகுதியில் 15 நிமிடம் வரை வைத்து - திரும்பவும் எடுத்து நன்றாகக் கலக்கி திரும்பவும் இறுகும் வரை வைக்கவும். இறுகிய பின்னர் சுவைக்கலாம். <img src='http://img478.imageshack.us/img478/3939/bouleglacevanille219vy.jpg' border='0' alt='user posted image'> - ப்ரியசகி - 11-20-2005 ஐயோ..எனக்கு வனிலா ஐஸ் எண்டால் ரொம்ப விருப்பம் சணி...பார்ப்போம்..முயன்று பார்க்கிறேன்..( என்ன பிடிச்சது பிடிக்காமலே போயிடுமோ என்று பயமா இருக்கு.. :roll: ) - Birundan - 11-20-2005 படம் நல்ல வடிவா இருக்கு, செய்தா இப்படி இருக்குமோ? - தூயா - 11-21-2005 சரியா செய்தா இப்படி தான் இருக்கும் பிருந்தன். நல்ல செய்முறை. நன்றி<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- தூயவன் - 11-21-2005 எப்படியும் எல்லோரையும் ஒரு வழி பண்ணும் குறிக்கோள் பாராட்டற்குரியது. :wink: - Rasikai - 11-22-2005 வனிலா ஐஸ்கிறீம் செய்முறைக்கு நன்றிகள் சபி. - RaMa - 11-22-2005 ஐஸ்கிறிம் செய்முறைக்கு நன்றிகள் சபி உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள் - கீதா - 11-24-2005 வனிலா ஐஸ்கிறீம் செய்முறைக்கு நன்றி சபி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- மேகநாதன் - 11-24-2005 சபி, வனிலா ஐஸ்கிறீமுக்கு நன்றி... ஓமோம்..படம் "மணி"யாத் தான் இருக்குது... என்னங்க இப்படி வச்சா உருகி வீணா ஓடாதா..? வளங்களை வீணாக்கக் கூடாது தானே... அதுதான் ஒரு அக்கறையில் கேட்டிட்டேன்... |