Yarl Forum
கட்டணமின்றி ரி.ரி.என் சிறப்பு நிகழ்ச்சிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: தமிழ்த் தொலைக்காட்சி இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=18)
+--- Thread: கட்டணமின்றி ரி.ரி.என் சிறப்பு நிகழ்ச்சிகள் (/showthread.php?tid=2352)



கட்டணமின்றி ரி.ரி.என் சிறப்பு நிகழ்ச்சிகள் - adsharan - 11-21-2005

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு ரி.ரி.என் தொலைக்காட்சி தனது சிறப்பு நிகழ்ச்சிகளை மூன்று நாட்களுக்கு கட்டணமின்றி ஒளிபரப்பு செய்கிறது.


இது தொடர்பாக ரி.ரி.என் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

எமது தேசத்தின் விடுதலைக்காக, தம்மை அர்ப்பணித்துவிட்ட அற்புதமான தியாகிகளின் நினைவு சுமந்து ரி.ரி.என் தமிழ் ஒளியில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.

தமிழீழ தேசிய பேரெழுச்சி நாளான, மாவீரர் நாளை முன்னிட்டு, 25 ஆம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில், ரி.ரி.என் தமிழ் ஒளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் தாய்மடியில் இருந்து நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படவிருக்கிறது.

தேசிய பேரெழுச்சி நிகழ்வுகளுடன், புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மக்களின் எழுச்சி நிகழ்வுகளையும் உள்ளடக்கி உணர்வுபூர்வமான நிகழ்ச்சிகள் ரி.ரி.என்னில் ஒளிபரப்பாக உள்ளன.

25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதிவரையான மூன்று நாட்களும், கட்டணங்கள் எதுவும் இன்றி உங்களின் தமிழ்ஒளி உங்களின் பார்வைக்கு வலம் வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.eelampage.com/?cn=21884


- MUGATHTHAR - 11-21-2005

மிகவும் நல்ல செய்தி எண்டு சொன்ன இதைத்தான் சொல்லவேணும் நன்றிகள் ரி.ரி.என் நிர்வாகத்துக்கு................


- shanmuhi - 11-21-2005

கட்டணமின்றி ரி.ரி.என் சிறப்பு நிகழ்ச்சிகள் வருவதைத்தான் நல்ல செய்தி என்று சொல்லுறியளா முகத்தார்....? ? ?


- MUGATHTHAR - 11-21-2005

இல்லையம்மா மாவீரர் நிகழ்ச்சியை நீங்கள் எல்லாரும் எமது உறவுகளோடு பர்hப்பீர்கள் ஆனால் நான் ஜே.வி.பி கூட்டத்தோடும் மற்ற சிங்கள கட்சி தொணடரோடும் இருந்து பார்ப்பது இலவசம் எண்டால் அவர்களால் எதுவும் சொல்லமுடியாது காட் வாங்கிப்பாத்தால் ஏதோ புலி ஏஜேண்டு எண்டு சொல்லிதிரிவாங்கள் அதுக்குத்தான் சொன்னன் மாவீரர் தின நிகழ்ச்சி இலவசம் எண்டது நல்ல செய்தி எண்டு


- ஈழமகன் - 11-21-2005

நல்லதொரு முடிவு........ நிர்வாகத்தினருக்கு நன்றிகள்..................


- kurukaalapoovan - 11-21-2005

கட்டணமின்றி பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டாலும் அடிப்படையான DVB-S (digital video broadcast-satellite) receiver தேவை. வழமையாக கட்டணமின்றி பார்பதற்கான ஒளிபரப்புகள் free to air (FTA) என அழைக்கப்படும். இவற்றின் receiver விலை 79 pounds...100 euro வரை இருக்கும்.

எதிர்காலத்தில் சாந்தா கட்டி TTN பார்பதென்றால் அது viaaccess தொழில்நுட்ப முறையினால் encrypt செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய அட்டையை உள்வாங்க viaacess embedded receiver அல்லது viaaccess CAM/CI(common access/interface module) பொருத்தப்பட்ட receiver தேவை.

dvb-s receiver விட LNB, dish என்பன மேலதிகமாக தேவை.
http://www.brymar.co.uk/acatalog/Technomat..._Receivers.html
http://www.digi-sat-online.de/index.php?cP...be59e6665e529f4


- Aravinthan - 11-22-2005

எம்மை அடையாளப்படுத்தாத சூரியத்தொலைக்காட்சிஜ் காசு கொடுத்து பார்க்கலாம். ஆனால் எமது தொலைக்காட்சி (TTN)இலவசமாக வேணும். ரொம்ப நல்லாய் இருக்குது.


- Mathan - 11-22-2005

kurukaalapoovan Wrote:எதிர்காலத்தில் சாந்தா கட்டி TTN பார்பதென்றால் அது viaaccess தொழில்நுட்ப முறையினால் encrypt செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய அட்டையை உள்வாங்க viaacess embedded receiver அல்லது viaaccess CAM/CI(common access/interface module) பொருத்தப்பட்ட receiver தேவை.

ஏன் இப்போது TTN viaaccess encrypt முறையை உபயோகிக்கவில்லையா :?


- kurukaalapoovan - 11-22-2005

Mathan Wrote:
kurukaalapoovan Wrote:எதிர்காலத்தில் சாந்தா கட்டி TTN பார்பதென்றால் அது viaaccess தொழில்நுட்ப முறையினால் encrypt செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய அட்டையை உள்வாங்க viaacess embedded receiver அல்லது viaaccess CAM/CI(common access/interface module) பொருத்தப்பட்ட receiver தேவை.

ஏன் இப்போது TTN viaaccess encrypt முறையை உபயோகிக்கவில்லையா :?

தலைப்பை வாசிச்சுப் போட்டு கருத்தெழுதினா உந்த <b>***</b> கேள்வியள் வராது. கார்த்திகை 25 முதல் 27 வரை FTA receiver ஓடே பார்க்கலாம். அந்தற்கு பின் அவர்கள் திருப்பி கட்டணம் செலுத்தியவர்களுக்கு மாத்திரம் என்றரீதியில் மீண்டும் encryption அய் அமுல்படுத்துவார்கள். அபோ பார்க்க விரும்புபவர்களுக்கு viaaccess embedded receiver அல்லது viaaccess CAM/CI பொருத்தப்பட்ட receiver தேவை எண்டு எழுதினனான்.

<b>*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது -வலைஞன்</b>


- Mathan - 11-22-2005

<span style='font-size:20pt;line-height:100%'>தயவு செய்து களத்தில் நாகரீமற்ற முறையில் எழுதுவதை தவிர்த்து கொள்ளுங்கள். உங்கள் கருத்து எதுவாக இருந்தாலும் நாகரீகமான முறையில் மற்றவர்களுக்கு புரியும்படி எழுதினால் சிறப்பாக இருக்கும். யாராக இருந்தாலும் பதில் கருத்துக்கள் எழுதும் போது தனிப்பட விமர்சிப்பதை அல்லது சீண்டுவதை தவிர்த்து கருத்துக்கு பதில் கருத்தாக எழுதுங்கள். நன்றி.</span>


- Aravinthan - 11-23-2005

கனடாவில் TVI தொலைக்காட்சியில் மாவீரர் நிகல்வுகளையும் தேசியத்தலைவரின் மாவீரர் உரையயும் பார்க்காலம்.



அவுஸ்திரெலியாவில்
சிகரம் தொலைக்காட்சியில் மாவீரர் நிகல்வுகளையும் தேசியத்தலைவரின் மாவீரர் உரையயும் (TTN உதவியுடன்) பார்க்காலம்.