![]() |
|
ரேணுகா மேனன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ரேணுகா மேனன் (/showthread.php?tid=2335) |
ரேணுகா மேனன் - Vaanampaadi - 11-22-2005 ரேணுகா விட்ட 'பளார்.. பளார்' கலாபக் காதலன் படத்தில் நடித்து வரும் ரேணுகாவுக்கும் ஹீரோ ஆர்யாவுக்கும் ஏதோ கச முசா என்கிறார்கள். சூட்டிங் ஸ்பாட்டில் ஆர்யாவுக்கு மூஞ்சியைச் சேர்த்து ஒரு பளார் விட்டாராம் ரேணுகா. இந்தப் படத்தில் மிக நெருக்கமான காட்சிகளை வஞ்சமில்லாமல் வைத்திருக்கிறார்களாம். அப்படி ஒரு காட்சியில் கொஞ்சம் நெருக்கமாகக் கட்டிப் பிடிக்கும் காட்சியில், நரம்பெல்லாம் நொறுங்கும் அளவுக்கு ஆர்யா பலம் காட்டியதாகவும் கடுப்பாகிப் போன சேச்சி பளார் விட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால், சினிமாவில் அறை விட்டதையும் அறை வாங்கியதையும் யார் தான் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே இருவருமே அதை மறுக்கிறார்கள். ஆர்யாவை அறைந்தீர்களா என்று கேட்டால், ஆர்யா ரொம்ப நல்லா நடிக்கிறாரு.. நல்லா டயலாக் பேசுறாரு என்று என்று பேச்சை மாத்துகிறார் ரேணுகா. விடாமல் கேட்டபோது, அவரைப் போய் நான் எதுக்கு அடிக்கனும் என்று திருப்பிக் கேட்கிறார். ரேணுகா நடித்த பிப்ரவரி 14 மற்றும் தாஸ் இரண்டும் ஊத்திக் கொண்டதால் அவரை ராசியில்லா நடிகை என்று பச்சை குத்திவிட்டார்கள் கோடம்பாக்கத்தில். அதையும் மீறி அவருக்குக்கு தமிழில் கிடைத்துள்ள படம் தான் கலாபக் காதலன். இந்தப் படத்தில் ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்கிறாராம் ரேணுகா. ஒரு பக்கம் ராசியில்லா நடிகை என்ற பெயர் இருந்தாலும் சம்பள விஷயத்தில் மகா கறார் பார்ட்டியாக இருக்கிறார் ரேணுகா. மிக அதிகமான சம்பளம் கேட்பதால் இவரது பெயரைச் சொன்னாலே ஆடுகிறார்கள் கோலிவுட் தயாரிப்பாளர்கள். தெலுங்கில் இவர் கேட்பது கிடைப்பதால் தெலுங்குப் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வமும் காட்டுகிறார். சம்பளம் குறித்துக் கேட்டால், மும்பை நடிகைகளுக்கு மட்டும் கொட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால் கேரளா என்றால் சம்பளத்தைக் குறைக்கிறார்கள். நான் ரூ. 30 லட்சம் கொடு, ரூ. 40 லட்சம் கொடு என்றெல்லாம் கேட்டதில்லை. கேரவன் கொடு, ஸ்டார் ஹோட்டலில் ரூம் போடு, ஜிம் ரெடி பண்ணு, ஸ்பிம்மிங் பூல் தயார் செய் என்றெல்லாம் யாரையும் படுத்துவதில்லை. நியாயமான சம்பளத்தைத் தான் கேட்கிறேன். நான் அதிக கவர்ச்சியெல்லாம் காட்ட மாட்டேன் அதனால் தான் என்னைத் தேடி வந்த பம்பரக் கண்ணாலே, சரவணா, மெர்க்குரிப் பூக்கள், திருவிளையாடல் ஆகிய படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன் என்கிறார். (இதெல்லாம் உண்மையா?) ரொம்ப விவரமான ரேணுகா, நடிப்போடு பேஷன் டிசைனிங்கும் செய்து வருகிறாராம். கேரளாவில் ஒரு பிரபல டெக்ஸ்டைல் ஷோ ரூமுக்கு பெரிய சம்பளத்தில் பேஷன் டிசைனராக உள்ளாராம். Thatstamil - Birundan - 11-23-2005 வானம்பாடி யரை சொல்லுறீங்க என்றே தெரியவில்லை ஏதவது படம் இருந்தால் இனைத்துபோடுங்கள். ஒரே குழப்பமா இருக்கு. - Aravinthan - 11-23-2005 கலாபக்காதலன் பாடத்தில் ஐரோப்பியாவில் வாசியும் எம்மவர் இசை அமைக்கிறார். - மேகநாதன் - 11-23-2005 நான் தலைப்பைப் பார்த்தவுடன் ...அடடா "ரேணுகா ஹேரத்" யாருக்கோ விட்டா போல என்று பார்த்தா... அட இவ கேரளக் கிளி..... - Vaanampaadi - 11-23-2005 <!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->வானம்பாடி யரை சொல்லுறீங்க என்றே தெரியவில்லை ஏதவது படம் இருந்தால் இனைத்துபோடுங்கள். ஒரே குழப்பமா இருக்கு.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <img src='http://thatstamil.indiainfo.com/images30/optimized/renuga-arya-kalapa01e-450.jpg' border='0' alt='user posted image'> <img src='http://thatstamil.indiainfo.com/images30/optimized/renuga-arya-450.jpg' border='0' alt='user posted image'> <img src='http://thatstamil.indiainfo.com/images30/optimized/renuga-arya-kalapa01b-450.jpg' border='0' alt='user posted image'> ரேணுகா மேனன் - Mathan - 01-19-2006 ரேணுகாவின் ஆட்டம்; புலம்பும் மல்லுவுட்! <img src='http://img468.imageshack.us/img468/3609/renuga0255009sk.jpg' border='0' alt='user posted image'> தமிழில் ரேணுகா மேனன் கிளாமராக நடித்து வருவதைப் பார்த்து மல்லுவுட்காரர்கள் கடுப்புடன் பெருமூச்சு விடுகின்றனர். மலையாளத்து மலரான ரேணுகா மேனன் தாஸ் மூலம் தமிழுக்கு வந்தவர். தொடர்ந்து பிப்ரவரி 14 படத்திலும் நடித்தார். அடுத்தடுத்து அவரது இரு படங்கள் வெளியானபோதிலும், இரண்டுமே வேகமாக டப்பாவுக்குள் போனதால் ரேணுகா ராசியில்லாத சேச்சிகள் வரிசையில் சேர்ந்தார். இருந்தும் சற்றும் மனம் தளராத விக்கிரமாத்தியன் போல கலாபக்காதலன் படத்தை பெரிதாக நம்பியுள்ளார். அதற்குக் காரணம் இதில் ரேணுகாவின் தாராளம். ஹீரோ ஆர்யாவுடன் ஏகப்பட்ட அப்படி, இப்படிக் காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளார். படத்தில் ரேணுகா விஸ்வரூபம் எடுத்துள்ளதால் கலாபக் காதலனுக்குப் பிறகு ரேணுகா பெரிய ரவுண்டு வருவார் என்று கோலிவுட்டில் டாக் எழுந்துள்ளது. இந்த டாக்தான் மல்லுவுட்காரர்களுக்கு கடுப்பை ஏத்தியுள்ளது. தமிழுக்கு வருவதற்கு முன்பு மலையாளத்தில்நிடித்து வந்த ரேணுகா, கிளாமர் ரோலில் நடிப்பதை அறவே தவிர்த்து வந்தார். கிளாமரான உடை அணிய மறுத்தார். கொஞ்சம் போல கிளாமர் காட்ட வேண்டும் என்று கூறினால் கூட கடும் கோபம் கொள்வாராம். அப்படியாப்பட்ட ரேணுகா, இன்றைக்கு படு கிளாமராக கலாபக்காதலனில் நடித்து வருவதைக் கேள்விப்பட்ட மலையாளத் தயாரிப்பாளர்கள் கடுப்படையாமல் வேறு என்ன செய்வார்கள்? தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படு கிளாமராக அட்டகாசம் செய்து வரும் ரேணுகாவைப் பார்த்து மலையாளத் திரையுலகினல் பொறு¬கின்றனராம். அங்கே மட்டும்தானா, இங்கேயும் அப்படி, இப்படி கொஞ்சம் நடித்தால்தான் என்னவாம் என்று அவர்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ரேணுகாவோ இதைப் பத்திக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தமிழிலும், தெலுங்கிலும் நல்ல சம்பளம் தருகிறார்கள். அப்படி இருக்கும்போது இயக்குனர்கள் சொல்வது போலத்தானே நடிக்க முடியும். மலையாளத்தில் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை (சம்பளமும் பெரிதாக தர மாட்டார்கள்). எனவே வலிந்து போய் கிளாமராக நடிக்க முடியுமா? மேலும் தமிழிலும், தெலுங்கிலும் போட்டி அதிகம். அதனால் கிளாமர் காட்டாமல் இருக்க முடியாது. கிளாமராக எடுத்தாலும் கூட அழகாக எடுப்பார்கள். <img src='http://img468.imageshack.us/img468/7256/renugaaryakkathalan115009ex.jpg' border='0' alt='user posted image'> ஆனால் மலையாளத்தில் கிளாமர் என்றால் அநியாக ரேஞ்சுக்கு உரித்துவிடுவார்கள். பின்னர் அந்த நடிகைக்கு 'தனி முத்திரை'யும் குத்தி விடுவார்கள், அதற்குப் பிறகு அந்த நடிகைக்கு என்ன பெயர் கிடைக்கும் என்பது எனக்குத்தானே தெரியும் என்று புலம்புகிறார் ரேணுகா. ஆமாமா, தமிழில் இருந்து போன ஷகீலா, ஷர்மிலி எல்லாம் வாங்குன பேர் தான் நமக்குத் தெரியுமே. தட்ஸ் தமிழ் - Vishnu - 01-19-2006 தகவலுக்கு நன்றி மதன்... பெப்ரவரி 14 பாடல்கள் மட்டும் பார்த்தேன்.. தலையை எதோ கூடு கட்டினமாதிரி பண்ணி இருந்தது.. ஆனால் இந்த பட ஸ்டில்களில் அழகாக இருக்கிறார்.. படம் வர பார்க்கலாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-09-2006 ரேணுகா மேனனின், வயது வந்தவர்களுக்கு மட்டும்! <img src='http://img410.imageshack.us/img410/3880/yarlrenu2pp.jpg' border='0' alt='user posted image'> மகளிர் சங்கங்கள் போராட்டம் நடத்தி ரொம்ப நாள் ஆகிறது. அவர்கள் போராட்ட குணம் துரு ஏறாமல் பளபளப்பாக்க, வருகிறது ரேணுகா மேனனின் வயது வந்தவர்களுக்கான படம்! காதலன் என்று பெயர் இருந்தாலும் கலாபக்காதலனில் காதலைவிட காமம் கொஞ்சம் தூக்கல்.அதிலும் புதிய பாடலாசிரியர் எம்.ஜி. கன்னியப்பன் நூறு டிகிரி ஹீட்டில் எழுதியிருக்கும் பாடல்... "உருகுதே... தாபத்தில் ரத்தமெல்லாம் பற்றி எரியுதே..." திருமணமான ஆர்யாவும், ரேணுகா மேனனும் அந்நியோன்யமாக இருக்கையில் இடைச்செருகலாக வருகிறது இந்தப்பாடல். பாடல் வரிகளும் அதை படமாக்கிய விதமும் ரேணுகாவின் எக்ஸ்பிரஷனும்... வாத்ஸ்யாயனர் தோற்றார் போங்கள்! பாடல் இப்படி என்றால் படத்திலும் உண்டு ஒரு வில்லங்க டுவிஸ்ட். ரேணுகாவின் தங்கையாக வரும் அக்ஷ்யாவுக்கும் ஆர்யாவுக்கும் இடையில் மலர்கிறதாம் வேலி தாண்டிய காதல்! இப்படி மகளிர் சங்கங்களுக்கு தேவையான தீனியுடன் இம்மாதம் பதினேழாம் தேதி தியேட்டருக்கு வருகிறான் கலாபக்காதலன். இவரது பிட்னெஸ் சர்ட்டிபிகெட்டை டெஸ்ட் செய்த சென்ஸார், காதலனுக்கு கொடுத்திருக்கிற ரேங்க், A! பதினெட்டு வயசுக்கு கீழ் உள்ளவர்கள் காதலனை தியேட்டரில் பார்க்கமுடியாது. இதற்காக படத்தின் இயக்குனர் இகோர் அசரவில்லை. "கணவன் மனைவி நெருக்கத்தை காண்பிக்க சில காட்சிகள் தேவைப்பட்டது. மற்றபடி படத்தில் இதைத்தாண்டி பல விஷயங்கள் உள்ளன" என்றுகூறி A-ஐ மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். இப்படி உள்ளூரில் ஒரு புயல் சுழன்று கொண்டிருக்க, எல்லை தாண்டி கேரளாவிலும் மையங்கொண்டுள்ளது வேறொரு புயல்! மலையாளப்படங்களில் இழுத்துப்போர்த்தி நடிக்கும் ரேணுகாவின் 'கலாபக்காதலன்' ஆடி தள்ளுபடி ஸ்டில்களை பார்த்து பற்களை நரநரக்கிறார்கள் அங்குள்ள தயாரிப்பாளர்கள். இங்கு மட்டும் இழுத்து போர்த்தி நடிக்க, நாங்க என்ன இளிச்சவாயர்களா என்பது அவர்களது கோபம். இந்த கோபத்தை அப்படியே ரேணுகாவிடம் மொழி பெயர்த்திருக்கிறார் ஒரு நிருபர். "அவங்க கொடுக்கிற காசுக்கு அவ்வளவு போதும்!" என முகத்தை வலித்துக்கொண்டிருக்கிறார் ரேணுகா! சினி சவுத் - ப்ரியசகி - 02-10-2006 .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வினித் - 02-10-2006 ப்ரியசகி Wrote: இப்படி வடிவேலு மாதிரி இரண்டும் செய்யபாடது சரியோ :twisted: :twisted: - ப்ரியசகி - 02-11-2006 வினித் Wrote:ப்ரியசகி Wrote: சாறிங்கண்ணா... :? என்ன செய்ய ரேணுகா மேனனை பார்க்க அழுகை வருது...இந்த கதையில வர்ற மனிதர்களை பார்க்க சிரிப்பு வருது...இதை வேறு எப்படி சொல்லலாம் எண்டு நினைக்கின்றீர்கள்? :roll: :wink: |