![]() |
|
நளாயினி தாமரைச்செல்வனின் "நங்கூரம்", "உயிர்த்தீ" - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23) +--- Thread: நளாயினி தாமரைச்செல்வனின் "நங்கூரம்", "உயிர்த்தீ" (/showthread.php?tid=2332) |
நளாயினி தாமரைச்செல்வனின் "நங்கூரம்", "உயிர்த்தீ" - இளைஞன் - 11-22-2005 <span style='color:blue'>நங்கூரம் உயிர்த்தீ <i>நளாயினி தாமரைச்செல்வன்</i> [size=18]எதிர்வரும் தைத்திங்கள் 2006ம் ஆண்டு அன்று கவிஞை நளாயினி தாமரைச்செல்வன் அவர்களின் முதலிரண்டு கவிதைத் தொகுப்புகள் ஆகிய நங்கூரம், உயிர்த்தீ என்பன வெளிவர உள்ளன. தமிழகத்தில் நடைபெற இருக்கிற புத்தகக் கண்காட்சியில் இவ்விரு கவிதைத் தொகுப்புகளும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன. காதல் கவிதைகளைத் தாங்கி வரும் இந்நூல்களின் அட்டைப்படங்களை ஓவியர் ஜீவன் அவர்கள் வரைந்துள்ளார்.</span> <b>நளாயினி தாமரைச்செல்வனின் வலைப்பதிவு:</b> உயிர்கொண்டு திளைத்தல் <b>வெளியீடு பற்றிய நளாயினி தாமரைச் செல்வனின் அறிவிப்பு:</b> கவிதைத்தொகுதிகள் வெளியீடு <b>ஓவியர் ஜீவனின் ஓவியங்கள்:</b> இங்கே <span style='font-size:25pt;line-height:100%'><b>நங்கூரம்</b></span> <i>நங்கூரம் கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை</i> அந்த புகை வண்டியில் நட்பாய் ஓர் கரம். என் பிரயாண சுமைகளை இறக்கி என் குழந்தையையும் தன் மடியில் வைத்துக்கொண்டான். அருகில் சிரித்த முகத்துடன் அவன் மனைவி. எனக்கு அவளை அறிமுகப்படுத்தி விட்டு தன்னை அறிமுகப்படுத்தாமல். நான் எனக்குள் இவன் கண்களை எங்கோ பார்த்ததாய் ..! நன்கு பரீட்சயமானதாய் ! யார் இவன்? நிறைய உரு மாறி இருப்பானோ? என்னை நன்கு தெரிந்தவனாய் எல்லாம் விசாரித்தான். மூளையின் ஒரு பக்கம் இவன் பார்வையின் அலகுகள் நிறைய இருப்பதை உணர்கிறது. யார் இவன்? ஞாபக புத்தகத்தில் இவன் அலகு தட்டுப்பட்டதில் ஓ! இவன் என் முதல் கணவன். அந்த புழுதி மண்ணில் மூக்கு வடிய கொன்றைப் பூப்பறித்து இரு மாலை கட்டி தென்னோலை பிடுங்கி தாலி செய்து நானும் இவனும் மாலை மாற்ற அயல்வீட்டு சிறுவர் சிறுமியர் பீப்பீப்பீ டும்டும் என மங்கல வாழ்த்தொலிக்க என் கழுத்தில் தாலி கட்டியவன். இவனுக்கு மண்ணில் சோறு கறி சமைத்து சிரட்டையில் உணவு கொடுத்தேன் எனது ஐந்து வயதில். [b]<span style='font-size:25pt;line-height:100%'>உயிர்த்தீ</span> <i>உயிர்த்தீ கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை</i> நீர்த்தடாகத்துள் விழும் மழைத்துளியாய் கண்மூடி கிறங்கி ரசிக்கிறேன். சின்ன சின்ன குமிழ்களாய் தோன்றுவதும் மறைவதுமாய்-- இப்படித்தான் உன் நினைவுகள் எனக்குள் இப்போ. கண் மூடி கிறங்கி சலசலப்பை உணர சுகமாகத்தான் உள்ளது. குமிழ்கள் உடையும்போது ஏற்படும் நீர்ச்சலனம் மெது மெதுவாக எங்கும் வியாபித்து தடாகத்துள் அலை போன்ற அசைவைத்தருவது போல் உயிரின் அந்தம் வரை நீயும் அதிர்வை தரத்தான் செய்கிறாய். - இளைஞன் - 11-22-2005 யாழ் இணைய கருத்துக்களத்தின் ஆரம்பகால உறுப்பினரான நளாயினி அக்காவின் கவிதை தொகுப்பு முயற்சிக்கு யாழ் கருத்துக்கள உறுப்பினன் என்கிற வகையில் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, பெருமை கொள்கிறேன். யாழ் இணையக் கருத்துக்களத்திலும், யாழ் இணையத்தின் முற்றம் பகுதியிலும் அவரது பல கவிதைகள் வாசிக்கக் கிடைத்தன. காதல் கவிதைகள் எழுதுவதில் தனித்துவம் மிக்கவர். உணர்வுபூர்வமாக அதை அனுபவித்து எழுதக் கூடியவர். கவிதைத் தளத்திலே எனது நட்புக்குரியவர். எனது கவிதைகளை விமர்சிப்பவர். ஆரம்பகாலங்களில் எனது கவிதை முயற்சிகளுக்கு உற்சாகமளித்தவர் - அவரது கவிதைத் தொகுப்பு வெளியீடு சிறப்பாக நடைபெறவும், அவரது கவிதைகள் பலரது உணர்வுகளைத் தொடவும் எனது வாழ்த்துக்களையும், அன்பையும் பகிர்ந்துகொள்கிறேன். - tamilini - 11-22-2005 <b>மூளையின் ஒரு பக்கம் இவன் பார்வையின் அலகுகள் நிறைய இருப்பதை உணர்கிறது. யார் இவன்? ஞாபக புத்தகத்தில் இவன் அலகு தட்டுப்பட்டதில் ஓ! இவன் என் முதல் கணவன். அந்த புழுதி மண்ணில் மூக்கு வடிய கொன்றைப் பூப்பறித்து இரு மாலை கட்டி தென்னோலை பிடுங்கி தாலி செய்து நானும் இவனும் மாலை மாற்ற அயல்வீட்டு சிறுவர் சிறுமியர் பீப்பீப்பீ டும்டும் என மங்கல வாழ்த்தொலிக்க என் கழுத்தில் தாலி கட்டியவன். </b> சிரிக்கவைத்தாலும் சிந்திக்க வைத்தது. அப்ப அந்த தாலிகட்டு செல்லுபடியற்றதா..?? தகவல் பகிர்ந்தமைக்கு நன்றிகள் இளைஞன். நளாயினி அக்காவிற்கு வாழ்த்துக்கள். கவிதை நூல் வெளியீடு சிறப்புற நடைபெறவும் வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- stalin - 11-22-2005 நளாயினி தாமரை செல்வன் அவர்களின் நூல் வெளீயீடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். இளைஞனின் உராய்வு கவிதை தொகுப்புக்கு அளித்த விமர்சனம் மூலம் இவரை அறியக்கூடியதாய் இருந்தது........வாழ்த்துக்கள் - yarlpaadi - 11-22-2005 நூல் வெளியீர்டு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். - AJeevan - 11-22-2005 நளாயினியின் நூல் வெளீயீடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். - aathipan - 11-22-2005 எங்கள் நளாயினி அக்காவின் கவிதைகளை எல்லோரும் படித்துச்சுவைக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். வாழ்த்துக்கள். - siluku - 11-22-2005 வாழ்த்துக்கள் நளாயினி அக்கா, ஏனக்கா களத்தில இப்ப எழுதுறேல்ல, நல்லா கவிதை எழுதுறீங்க வந்து இங்கேயும் எழுதுங்கோவன். திறமயானவர்களுக்கு அங்கீகாரம் அவர்களைத் தேடிக்கொண்டு வரும். - Rasikai - 11-23-2005 தகவலுக்கு நன்றிகள் இளைஞன். நளாயினி தாமரைச்செல்வனின் கவிதை நூல் வெளியீடு சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள் - Mathan - 11-23-2005 வாழ்த்துக்கள் நளாயினி அக்கா தகவலை அறிய தந்தமைக்கு நன்றி இளைஞன் - Aalavanthan - 11-23-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> எதிர்வரும் தைத்திங்கள் 2006ம் ஆண்டு அன்று கவிஞை நளாயினி தாமரைச்செல்வன் அவர்களின் முதலிரண்டு கவிதைத் தொகுப்புகள் ஆகிய நங்கூரம், உயிர்த்தீ என்பன வெளிவர உள்ளன. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> வாழ்த்துக்கள் நளாயினி - அனிதா - 11-23-2005 நளாயினியின் அக்காவின் நூல் வெளீயீடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.... தகவலுக்கு நன்றிகள் இளைஞன்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 11-25-2005 நளாயினி அக்காவின் நூல் சிறப்பாக வெளிவர வாழ்த்துக்கள். - shanmuhi - 11-25-2005 நளாயினி தாமரைச்செல்வனின் கவிதை நூல் வெளியீடு சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்... - sinnappu - 12-02-2005 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :wink: :wink: - kirubans - 12-02-2005 கவிதை நூல்கள் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். இலண்டனில் எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் அறியத்தந்தால் உதவியாக இருக்கும். - Nitharsan - 12-16-2005 நு}ல் வெளியீடு சிறப்புற நடைபெறவும் கவிதைகள் எங்கள் சமூகத்தில் பேசவும்...வாழ்த்துக்கள்... |