Yarl Forum
ரொட்டி உப்புமா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: ரொட்டி உப்புமா (/showthread.php?tid=2316)



ரொட்டி உப்புமா - கீதா - 11-23-2005

ரொட்டி உப்புமா

ரொட்டி 4 அல்லது 5 துண்டுகள்

கடுகு --அரை தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி

வற்றல் மிளகாய் --3

வெங்காயம் --3
தேவையான எண்ணெய்
உப்பு தேவையதனது


முதலில் ரொட்டியைச் சிறி துண்டுகளாக பிய்த்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெயை விட்டு கடுகு - உளுத்தம் பருப்பு -வற்றல் மிளகாய் -இவற்றை வறுத்துக் கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்கயத்தைப் போட்டு உப்பு சேர்த்து சிறிது வதக்கி 2கரண்டி நீர் விடவும் - வெங்காயம் வெந்தவுடன் -ரொட்டித் துண்டுகளைப் போட்டு 2நிமிடம் கிளறி இறக்கி பரிமாறலாம் ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sabi - 11-23-2005

தகவலுக்கு நன்றி கீதா
இப்படிப் பாணிலும் செய்யலாம்

பாணைச் சின்னசின்னத் துண்டுகளாகக் பிய்த்து
(தண்ணி தெளித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்)
கீதா சொன்னமாதிரியே செய்முறையில் செய்யலாம்.
உருளைக்கிழங்கு பொரியல்
கரட் பொரியல்
முட்டை பொரியல் (சிறு சிறு துண்டுகளாய்)
வெங்காயப் பொரியல்
இவற்றைக் கலந்தால் மிகவும் நல்லாயிருக்கும்.

வேண்டிய பாண் மீதமாயிருந்தால் பின்னேரச் சாப்பாடாக(டிபன்) செய்து சாப்பிடலாம்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 11-23-2005

நன்றி செய்முறைக்கு கீதா & சபி ம்ம் நான் பாணில் இப்படி செய்யுறனான்


- RaMa - 11-24-2005

ம்ம் செய்முறைக்கு நன்றிகள் கீதாக்கும் சபிக்கும்... இன்று செய்து பார்த்துவிட்டு சொல்கின்றென்


- அருவி - 11-24-2005

இது நானும் சாப்பிட்டிருக்கன் ரொம்ப சுவையாக இருக்கும்.
நன்றி சபி மற்றும் கீதா உங்கள் செய்முறைகளிற்கு.