Yarl Forum
பார்ப்பதற்கு மட்டும் அல்ல; பார்த்ததைத் தின்பதற்கும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பார்ப்பதற்கு மட்டும் அல்ல; பார்த்ததைத் தின்பதற்கும் (/showthread.php?tid=2311)



பார்ப்பதற்கு மட்டும் அல்ல; பார்த்ததைத் தின்பதற்கும் - SUNDHAL - 11-24-2005

வித விதமான வன விலங்குகளை பார்ப்பதற்கு வசதி ஏற்படுத்தித் தரும் மிருகக் காட்சி சாலைகளில் வித்தியாசமான ஒன்று தாய்லாந்தில் உருவாகி வருகிறது.

இங்கு விலங்குகளை பார்ப்பதற்கு மட்டும் அல்ல ருசிப்பதற்கும் வசதி செய்யப்படும். சியாங் மாஸ் நைட் சபாரி மிருகக்காட்சி சாலையில் வருகிற புத்தாண்டு முதல் ஓட்டல் தொடங்கப்பட உள்ளது.

இங்கு வரும் விருந்தினர்கள் 5 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தால், நாய்கறி முதல் ஆப்பிரிக்க சிங்கக் கறி வரை ஒரு பிடி

பிடிக்கலாம்.மிருகக்காட்சி சாலையில் ஓட்டல் தொடங்குவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இது மிருகங்களை கறிக்காக கடத்துவதை அதிகரிக்கச் செய்யும் என்று விமர்சகர்கள் கூறி உள்ளனர்.

வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே, அவற்றை கறியாக்கி உணவாகப் படைப்பது கண்டிக்கத்தக்கது என்று அந்த நாட்டு வனவிலங்குகள் பாதுகாப்புச் சங்கம் கண்டித்தது.
Thanks:Thanthi...............


- மேகநாதன் - 11-24-2005

தகவலுக்கு நன்றிகள்....

"புளு குரொஸ்" ( BLUE CROSS)காரர் என்னவாம்..?
ஏதும் கண்டனம்....?