Yarl Forum
ராஜபக்சவின் முதல் தாக்குதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ராஜபக்சவின் முதல் தாக்குதல் (/showthread.php?tid=2309)



ராஜபக்சவின் முதல் தாக்குதல் - adsharan - 11-24-2005

தமிழர்கள் மீதான மகிந்த ராஜபக்சவின் முதல் தாக்குதல்: வடக்கு-கிழக்கைப் பிரிக்க முடிவு!!

தமிழர் தாயகமான இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் ஒருங்கிணைந்த மாகாணமாக சிறிலங்கா அரசியல் யாப்பின் கீழ் நீடிப்பது தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.


கொழும்பில் நேற்று புதன்கிழமை இந்த ஆலோசனைக் கூட்டத்தை மகிந்த ராஜபக்ச நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், வடக்குப் பிரதேசத்துடன் கிழக்குப் பிரதேசம் இணைந்திருப்பது தொடர்பாக கிழக்குப் பிரதேச மக்களின் வாக்கெடுப்பு நடத்துவதை ஓராண்டுக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார்கள்.

சிறிலங்காவின் 1988 ஆம் ஆண்டு மாகாண சபை சட்டத்தின் கீழ் தாற்காலிகமாக இரு பிரதேசங்கள் இணைக்கப்பட்டு ஆண்டு தோறும் அது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலில் மகிந்தருக்கு ஆதரவளித்த பேரினவாதக் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் கூட இந்த வடக்கு-கிழக்கை கூறுபோடும் விடயம் தொடர்பாக எதுவும் கூறாத நிலையில் மகிந்த ராஜபக்ச தனது முதல் நடவடிக்கையாக இதை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

\"வடக்கு-கிழக்கைப் பிரிப்பதானது அமைதி முயற்சிகளின் அடித்தளத்தை தகர்ப்பதாகும். வடக்கு-கிழக்கு இணைந்த அடிப்படையில்தான் இந்த அமைதிப் பேச்சுகளே நடைபெறுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில், வடக்கு-கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. இருப்பினும் கிழக்கு மக்களின் கருத்தறிவதும் அவசியம் என்று கூறியுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் ஒருவர், கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமையை மதிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=21968