Yarl Forum
பொண்ணுங்களும் கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பொண்ணுங்களும் கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க..... (/showthread.php?tid=2275)



பொண்ணுங்களும் கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க..... - SUNDHAL - 11-26-2005

ஆந்திராவில் பல்கலைக் கழக ஹாஸ்டலில் தங்கியிருக்கும் ஜூனியர் மாணவிகளை "ராகிங்'செய்த ஒன்பது மாணவிகள் பல்கலைக் கழகத்தில் இருந்து "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

இது பற்றிய விவரம் வருமாறு:

ஆந்திரா காக்காத்தியா பல்கலைக் கழக ஹாஸ்டலில் சீனியர் மாணவிகள் சிலர் ஜூனியர் மாணவிகளை "ராகிங்' செய்வதாக கடந்த 22ம் தேதி புகார் வந்தது. இதில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் துணை வேந்தரிடம் புகார் செய்தனர்.

இதுகுறித்து விசாரிக்கும்படி பல்கலை., கல்லுõரி முதல்வர் எலையாவுக்கு துணைவேந்தர் <உத்தரவிட்டார். அன்றைய தினம் கல்லுõரி முதல்வர் நேரடியாக ஹாஸ்டலுக்கு சென்ற போது மாணவிகள் சிலர் "ராகிங்' செய்வதை கண்டார். அவர் இது பற்றி துணை வேந்தருக்கு புகார் செய்ததைத் தொடர்ந்து "ராகிங்'கில் ஈடுபட்ட ஒன்பது மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்று பல்கலை., அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்கிலம் மற்றும் நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த மாணவிகள் சிலர் ராகிங்கில் ஈடுபட்டது பற்றிய புகார் வந்ததையடுத்து நான்கு மாணவிகளுக்கு பல்கலை., அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். இந்த சம்பவம் பற்றி பல்கலைக் கழக அதிகாரிகள் போலீசிடம் புகார் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks:dinamalr...


- tamilini - 11-26-2005

சஸ்பெண்ட் தேவை தான். யாருக்காவது ராகிங் அனுபவம் உண்டா?? பகிர்ந்து கொள்ளுங்களேன். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- SUNDHAL - 11-27-2005

சத்தியமா எனக்கு இல்ல.................யாருக்காவது .இருந்தா அல்லது கேள்விபட்ட சம்பவங்கள் இருந்தா கூறுங்கப்பா.....