Yarl Forum
ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு குவைத்தில் புதிய கட்டுப்பாடு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு குவைத்தில் புதிய கட்டுப்பாடு (/showthread.php?tid=2273)



ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு குவைத்தில் புதிய கட்டுப்பாடு - Vaanampaadi - 11-26-2005

<b>ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு குவைத்தில் புதிய கட்டுப்பாடு</b>

துபாய்: குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குவைத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு குவைத் அரசு தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய விதிமுறைபடி, ஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் பட்டப்படிப்பு படித்திருப்பதோடு அவர்களின் மாத சம்பளம் ரூ. 61 ஆயிரத்து 650க்கு குறையாமல் இருக்க வேண்டும். குவைத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்திருக்க வேண்டும். டாக்டர்கள், ஆசிரியர்கள், நீதிபதிகள், கணக்கர் பணி செய்பவர்கள் உள்ளிட்ட 22 பணி செய்வோருக்கு மட்டும் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. கடந்த வியாழன் முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. குவைத் நாட்டின் சாலைகளில் வாகன போக்குவரத்தை குறைக்கவும், பொதுமக்கள் அரசு பஸ்களை பயன்படுத்துவதை அதிகரிக்கவும் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.

Dinamalar


- Mathan - 11-26-2005

தமது நாட்டில் யாருக்கு வாகனம் ஓட்டும் அனுமதி வழங்கலாம் என்பது குவைத் அரசின் உரிமை என்றாலும் பட்டபடிப்புக்கும் ஓட்டுனர் உரிமத்திற்கும் என்ன சம்மந்தம்?