Yarl Forum
தீபங்களே! தியாகங்களே!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: தீபங்களே! தியாகங்களே!! (/showthread.php?tid=2266)



தீபங்களே! தியாகங்களே!! - hari - 11-27-2005

<b>தீபங்களே! தியாகங்களே!!</b>
<img src='http://www.tamilcanadian.com/eelam/maaveerar/tmp/maveerar1.JPG' border='0' alt='user posted image'>

ஒளிவீசி நிற்கின்ற தீபங்களே -எங்கள்
உயிரோடு வாழ்கின்ற தியாகங்களே!
விழியெங்கும் நிறைகின்ற உருவங்களே! - எங்கள்
வேட்கைக்கும் வேள்விக்கும் கரு நீங்களே!

விதையாகி மண்ணிலே வீழ்ந்தபோதும் - நீங்கள்
விழுதாகி நிற்பதைக் காலம்சொல்லும்!
புதையுண்ட மரணங்கள் என்றபோதும் - எங்கள்
பொன்னுலகில் நீங்களே உதய கீதம்!

மலர்வளையம் உமக்குயாம் வைத்தபோதும் - எங்கள்
மனப்பொழிலில் வாடாத மலர்கள் நீங்கள்!
பல மெழுகு வர்த்திகள் எரிந்தபோதும் - எங்கள்
பரம்பரைக்(கு) அணையாத தீபம் நீங்கள்!

விலையற்ற உயிர்தந்த வள்ளல் நீங்கள் - உங்கள்
விழுப்புண்கள் எம்மவர்தம் கேடயங்கள்!
மலைமுட்டத் துயருற்று மருண்டபோதும் - எங்கள்
மனம்வருடும் ஆறுதல் வாசகங்கள்!

அடியெடுத்து வைக்கின்ற சுவடுதோறும் - எங்கள்
அன்பான தழுவல்கள் நீங்களன்றோ?...
நெடியதொரு விடுதலைப் பயணமெங்கும் - எங்கள்
நிரந்தரத் துணையாட்கள் நீங்களன்றோ?..

எண்ணிக்கை யில்லாத உயிர்களன்றோ? - எங்கள்
எண்ணத்தில் வேர்விட்ட பயிர்களன்றோ?...
மன்னிக்க இயலாத குற்றமன்றோ? - அந்த
மாற்றார்கள் கொய்த(து) எம் கொற்றமன்றோ?..

மழலையரும் மங்கையரும் மாசிலாரும் - அன்று
மறுகினார்: கருகினார்: மறப்பதுண்டோ?...
அழலோடு அழலாக அமரரானார் - அந்த
அருமந்த உறவுகள் இறப்பதுண்டோ?...

இறப்பொன்றும் இல்லாத எம் உறவுகாள்! - எங்கள்
இதயத்தில் தினந்தோறும் உம் நினைவுநாள்!
புறப்பட்டு வாருங்கள், எம்மோடுதான்! - தமிழர்ப்
புத்துலக வீதிகளில் நடைபோடத்தான்!....

தொ. சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)