Yarl Forum
ஆருக்குச் சொல்லி அழ.............. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஆருக்குச் சொல்லி அழ.............. (/showthread.php?tid=2262)



ஆருக்குச் சொல்லி அழ.............. - thiru - 11-27-2005

<b>ஆருக்குச் சொல்லி அழ........</b>

சர்வதேச ஊடகம் ஒன்றின் செய்திகள் தொடர்பில் அந்த ஊடகத்தின் நிருவாகத்தினர் கரிசனைகாட்டி -உறுதிப்படுத்திய- சரியான தகவல்களை வழங்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து நான் எழுதிய மை காயமுன்னரே இன்னொரு சம்பவம்.

இப்போது நான் இங்கு குறிப்பிட விளையும் சம்பவம் வித்தியாசமானது.

எமது தமிழ்மக்களால் அதிகளவில் விரும்பி வாசிக்கப்படும், மதிக்கப்படும் ஒரு இணையத்தள செய்தி ஊடகம் 'புதினம்'. இத்தளத்தில் கூறப்படும் செய்திகளில் , கண்ணோட்டங்களில் எதுவித மாற்றமும் செய்யாது இலங்கைத்தீவில் வெளியாகும் தமிழ்த் தினசரிகள் அப்படியே தமது பதிப்புகளில் வெளியிட்டுவருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தி.

தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான கட்டுரைகள் செய்திகளுடன் வெளியாகும் இத்தளத்தில் நேற்றையதினம் (26-11-2005) பிரசுரமான செய்தி ஒன்று எனது கவனத்தைக் கவர்ந்தது.

http://www.eelampage.com/?cn=22055

அச்செய்தி வருமாறு,

Quote:தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிர் ஈந்த மாவீரார்களின் நினைவு நாள் நிகழ்வுகள் தமிழீழத் தாயகங்கள் எங்கும், உலகத் தமிழர் வாழுமிடங்களிலும் பேரெழுச்சியுடன் நாளை நடைபெற உள்ளன.


தமிழீழம் எங்கும் உள்ள 21 துயிலும் இல்லங்களிலும் தாயக நேரம் 6.05 மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றலுடன் மற்றும் ஆலயங்களில் மணிகள் ஒலிப்பதுடன் அகவணக்க நிகழ்வுகள் நடைபெறும்.

1982 ஆம் ஆண்டு முதலாவது மரவீரர் லெப். சங்கர் (சுரேஸ்) செ.சத்தியநாதன், சிங்கள இராணுவ சுற்றிவளைப்பின் போது நடைபெற்ற நேரடிச் சமரில் காயம் அடைந்து சுமார் இரண்டு மைல்கள் வயிற்றில் காயத்துடன் தப்பி ஓடி நண்பர்களைச் சென்றடைந்தார்.

எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற புலிகளின் மரபிற்கேற்ப இவரும் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியினால் எதிரியை முறியடித்து ஆயுதத்தையும் காப்பாற்றி தனது நண்பர்களிடம் கையளித்தார்.

வயிற்றில் காயம் பட்ட நிலையிலும் உடனடியாக சிகிச்சை பெற முடியாதநிலமை அப்போது இருந்தது.

இன்றைய காலத்தைப் போன்று உடனடியாக சிகிச்சை பெற முடியாத நிலையில் இராணுவத்தினரின் தேடுதல்கள் மற்றும் காட்டிக் கொடுப்புக்கள் என பலவிதமான இடையூறுகளும் இருந்தன.

ஆனாலும் ஏனைய போராளிகளின் முயற்சியும் சங்கரின் உறுதியும் காரணமாக இவர் ஒருவார காலத்தில் தமிழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அதிக இரத்தப்பெருக்கு மற்றும் நாள் சென்ற காரணத்தினால் தலைவரின் மடியில் தமிழ் மக்களுக்காக தனது இன்னுயிரை ஈர்ந்தார்.

இந்த நாளே தமிழ் மக்கள் தமது மாவீரர் செல்வங்களை நினைவு கூரும் ஒரு உணர்ச்சி பூர்வ நாளாக நினைவுகூரும் நாளும் ஆகும். இந்த நாளே மாவீரர் நாளாகவும் நடைபெறுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த நாளை 1990 ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாளாகப் பிரகடணப்படுத்தி வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.

<b>நன்றி;</b> புதினம்.கொம்

<img src='http://img516.imageshack.us/img516/5024/untitled0bj.th.png' border='0' alt='user posted image'>

இச்செய்தியில் <b><span style='color:red'>''தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த நாளை 1990 ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாளாகப் பிரகடணப்படுத்தி வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.''என்று குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து அவதானம் செலுத்துமாறு நான் அந்த ஊடகத்தின் ஆசிரியருக்கு ஒரு சிறுகுறிப்பினை உடனடியாகவே அனுப்பிவைத்திருந்தேன்.

அது வருமாறு,</span>

Quote:ஆசிரியருக்கு

இந்தச் செய்தியில் தமிழீழ மாவீரர் நாள் முதன்முதலாக 1990ல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனது மனத்திலுள்ள நினைவுப்படிமங்களின் பிரகாரம் இது 1989ல் ஆரம்பமானதாக எண்ணுகிறேன்.

இதுகுறித்துத் தங்களது ஆவணங்களில் சரிபார்த்துக்கொள்ளப்
பணிவுடன் வேண்டுகிறேன்;.

பணிவுடன் திருமகள்

<span style='color:red'>ஆனால் அந்தக் குறிப்பினை நான் அனுப்பிவைத்த பிற்பாடு மேற்படி செய்தியில் நிருபரது பெயர் , செய்தி இடப்பட்ட நேரம் ஆகியன மாற்றப்பட்டதைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் நான்
காணவில்லை

<img src='http://img516.imageshack.us/img516/2687/untitled25ix.th.png' border='0' alt='user posted image'>

[size=18]ஆக, ஒரு முக்கியமான- தமிழர்களது வாழ்வின் இன்றியமையாத ஒரு வரலாற்று நிகழ்வு தொடர்பான- விடயத்திற்கு இந்த இணையத்தளத்தினர் கொடுக்கும்[b]முன்னுரிமை</b> இவ்வளவுதானா?

நான் ஆசிரியருக்குக் குறிப்பினை அனுப்பி <b>ஏறத்தாள 08 மணித்தியாலங்களுக்கு மேலாகியும்</b>இதுகுறித்து கருத்தினைச் செலுத்த ஆசிரியருக்கு நேரம் போதவில்லையா??

நான் இதுவிடயமாகத் தேடிப் பெற்ற தகவல் வருமாறு,</span>

[quote]<b>'விடுதலைப் புலிகள்</b>
குரல் 18 <b>கார்த்திகை 1990

எமது இலட்சிய உறுதிக்கு உரமூட்டிய தியாகிகள்
மாவீரர்களைக் கௌரவித்து தலைவர் பிரபாகரன் அஞ்சலிச் செய்தி,

'நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள் என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்தபோதெல்லாம் எனது இதயம் வெடிக்கும், ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கிறது." இவ்வாறு தமிழீழத்தின் தேசியத் தலைவர் திரு வே. பிரபாகரன் [b]இரண்டாவது மாவீரர் நாளையொட்டி </b>


இந்த எட்டுமணிநேரத்திற்குள் எனது மனப்பதிவிலிருந்த விடயத்தைத் தேடி ஆதாரத்துடன் உறுதிப்படுத்திக்கொண்டேனாயின், ஏன் அதனை இந்த இணையத்தள ஆசிரியரால் செய்யமுடியாது போய்விட்டது?

தமிழர் மத்தியில் மதிக்கப்படும் -பொறுப்புடன் செயற்படவேண்டிய -ஒரு ஊடகமே இவ்வாறு அசிரத்தையைக் காண்பித்தால் இதை 'ஆருக்குச் சொல்லி அழ?'

<b>வேதனையுடன் திருமகள்</b>


- sri - 11-27-2005

உண்மையில் 1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில் தான் விடுதலை புலிகள் மாவீரர் தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தனர். அதே ஆண்டு விடுதலை புலிகள் மாவீரர் தினத்தை கொண்டாடினார்கள்.

[size=18]ஆனால் மக்கள் எழுச்சியுடன் 1990 ஆம் ஆண்டு முதல் தான் கொண்டாடுகின்றனர்.


- வியாசன் - 11-27-2005

திரு நீங்கள் இப்போது புதினத்துடன் மோதுகின்றீர்கள் அவர்கள் திருத்தவே(திருந்தவே)மாட்டார்கள். குவைத்தில் ஒரு இலங்கைத் தமிழர் கடத்தப்பட்டவிடயத்தில் ஒரு தகவலை வெளியிட்டு பின் களஉறவுகள் மோதியபோது அவர்கள் மெளனமாக இருந்துவிட்டார்கள். இவர்களை நாம்
சந்தர்ப்வாதிகளாகத்தான் கருதவேண்டும்.
89 இல்தான் மாவீரர் தினம் ஆரம்பிக்கப்பட்டது.. தவறை சுட்டிக்காட்டியமைக்கு.
நன்றி புதினம் மீண்டும் ஒரு தடவை உங்கள் சுயரூபத்தை காட்டியமைக்கு


- thiru - 11-27-2005

Quote:உண்மையில் 1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில் தான் விடுதலை புலிகள் மாவீரர் தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தனர். அதே ஆண்டு விடுதலை புலிகள் மாவீரர் தினத்தை கொண்டாடினார்கள்.

ஆனால் மக்கள் எழுச்சியுடன் 1990 ஆம் ஆண்டு முதல் தான் கொண்டாடுகின்றனர்

தாங்கள் குறிப்பிட்டதுபோல அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் 1990 முதல் இதனைப் பிரகடனப்படுத்தியதாகத்தானே அவர்கள் அங்கே செய்தி போட்டிருக்கிறார்கள்.

1989 மாவீரர் தின ஏற்பாடுகளில் எமக்குத் தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்த காலஞ்சென்ற தமிழ் ஆசான் திருஞானசேகரம் அவர்களின் வழிகாட்டலில் நாம் ஈடுபட்டிருந்தோம். 1989லேயே மக்கள் ஆதரவுடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

திருஞானசேகரம் ஆசிரியர் அவர்கள் பின்னர் யாழ்ப்பாணம் அசோகா விடுதியில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைகள் காரணமாக சாவடைந்தார்.

எனவே 1990ல்தான் மக்கள் ஆதரவுடன் கொண்டாடப்பட்டது என்ற கருத்தினையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது.

வேண்டுமானால் ஆக்கிரமிப்பு அகன்று, மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டாடிய நிகழ்வாக 1990 ஆம் வருடத்திய மாவீரர் தினத்தினைக் கூறலாம்

அது அவ்வாறிருக்க எவருடனும் பொருதுவது எனது விருப்பமல்ல. எனினும் வழுக்கள் ஏற்படும்போது சம்பந்தப்பட்டவர்கள்- அது நானாகக் கூட இருக்கலாம்- அதனைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் இத்தகைய பதிவுகளின் காரணம்.

<b>அன்புடன் திரு.</b>


- iruvizhi - 11-27-2005

வணக்கம் திருமகள்!

நீங்கள் புதினம் இணையத்தில் இடம் பெற்றதாக குறிப்பிடும் தவறினை நானும் படித்தேன். புதினம் இணையம் மிகவும் சிரத்தையுடன் செயல்படுகின்ற ஒரு இணையம். தவறுதலாக நிகழ்த தவறாக இருக்கலாம். அடுத்து வரும் செய்திகளை அவர்கள் முடிந்தவரை சிரத்தை எடுத்து வெளியிடுவார்கள் என்று நம்புவோம். உங்களின் ஆதங்கமும் எமக்கு புரிகின்றது. இவற்றினை இங்கே சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள்.


- sri - 11-27-2005

thiru Wrote:
Quote:உண்மையில் 1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில் தான் விடுதலை புலிகள் மாவீரர் தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தனர். அதே ஆண்டு விடுதலை புலிகள் மாவீரர் தினத்தை கொண்டாடினார்கள்.

ஆனால் மக்கள் எழுச்சியுடன் 1990 ஆம் ஆண்டு முதல் தான் கொண்டாடுகின்றனர்

தாங்கள் குறிப்பிட்டதுபோல அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் 1990 முதல் இதனைப் பிரகடனப்படுத்தியதாகத்தானே அவர்கள் அங்கே செய்தி போட்டிருக்கிறார்கள்.

1989 மாவீரர் தின ஏற்பாடுகளில் எமக்குத் தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்த காலஞ்சென்ற தமிழ் ஆசான் திருஞானசேகரம் அவர்களின் வழிகாட்டலில் நாம் ஈடுபட்டிருந்தோம். 1989லேயே மக்கள் ஆதரவுடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

திருஞானசேகரம் ஆசிரியர் அவர்கள் பின்னர் யாழ்ப்பாணம் அசோகா விடுதியில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைகள் காரணமாக சாவடைந்தார்.

எனவே 1990ல்தான் மக்கள் ஆதரவுடன் கொண்டாடப்பட்டது என்ற கருத்தினையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது.

வேண்டுமானால் ஆக்கிரமிப்பு அகன்று, மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டாடிய நிகழ்வாக 1990 ஆம் வருடத்திய மாவீரர் தினத்தினைக் கூறலாம்

அது அவ்வாறிருக்க எவருடனும் பொருதுவது எனது விருப்பமல்ல. எனினும் வழுக்கள் ஏற்படும்போது சம்பந்தப்பட்டவர்கள்- அது நானாகக் கூட இருக்கலாம்- அதனைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் இத்தகைய பதிவுகளின் காரணம்.

<b>அன்புடன் திரு.</b>


[size=24]தமிழ் தேசிய தொலைக்காட்சியில் இப்போது நேரடியாக நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் கு.வீரா நான் கூறியதை போல் தான் கூறியுள்ளார்.


- iruvizhi - 11-27-2005

தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை கண்ணியம் தவறாமல் வழங்கி வந்த புதினம் ஏனோ எனக்கு வேலை செய்யவில்லை. எனக்கு மட்டுமா இல்லை உங்களுக்குமா வேலை செய்யவில்லை?முடிந்தால் யாராவது உடன் அறியத்தாருங்கள்.


- iruvizhi - 11-27-2005

அப்பாடா இப்பத்தான் ஆறுதல். இப்போது புதினம் எனக்கும் வேலை செய்கின்றது.


- sri - 11-27-2005

Quote:1989 மாவீரர் தின ஏற்பாடுகளில் எமக்குத் தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்த காலஞ்சென்ற தமிழ் ஆசான் திருஞானசேகரம் அவர்களின் வழிகாட்டலில் நாம் ஈடுபட்டிருந்தோம். 1989லேயே மக்கள் ஆதரவுடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

திருஞானசேகரம் ஆசிரியர் அவர்கள் பின்னர் யாழ்ப்பாணம் அசோகா விடுதியில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைகள் காரணமாக சாவடைந்தார்
.

இல்லை அது திலீபனின் நினைவுதினம். மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள். தவறு மீண்டும் தவறாக கூடாது.[/quote]


- thiru - 11-27-2005

Quote:இல்லை அது திலீபனின் நினைவுதினம். மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள். தவறு மீண்டும் தவறாக கூடாது

திருஞானசேகரம் ஆசிரியர் அவர்களது வழிகாட்டலில் நாம் மேற்கொண்டது தாங்கள் குறிப்பிட்டதுபோல தியாகி திலீபனின் நினைவுநாள் என்பதை நினைவுபடுத்திக்கொண்டேன். தவறுக்கு வருந்துகிறேன். சுட்டிக்காட்டிய தங்களுக்கு நன்றி

இங்கே மேலுள்ள எனது பதிவில் நான் சுட்டிக்காட்ட விளைவது ''தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த நாளை <b>1990 ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாளாகப் பிரகடணப்படுத்தி </b>வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.''என்று குறிப்பிடப்பட்டுள்ளது குறித்தே.

பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு 1990 என்று குறிப்பிடுவது தவறு.

அது அப்படியே செய்தித்தாள்களிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டு வரலாறு தவறாகப் பதிவு செய்யப்படும் அவலம் நேரக்கூடாது என்ற எண்ணமே இதற்குக் காரணம்.


<b>பணிவுடன் திருமகள்</b>


- Vaanampaadi - 11-27-2005

திரு அவர்கள் தெரிவித்த கருத்த நாம எல்லாரும் ஏத்துக்கனும் .... அவர் சொல்றாரு 1989 இல் தான் இது தொடங்கப்பட்டது அப்டீங்கிறாரு.... அவருடைய அந்த கருத்தில எதுவித தப்பும் கிடையாது. புதினம் இதனை தவறாக பிரசுரித்துவிட்டார்கள் என்று தெளிவாகியுள்ளது ..... இந்த விழாபற்றி ஒரு சிறிய விளக்கம் .....

மாவீரர்நாள் 1989 நவம்.27 இல் தொடங்கப்பட்டது......அந்த ஆண்டு அது ஒரு நாள் நிகழ்வாக மட்டும் இருந்தது ..... 1990 இல் இருந்து 1994 வரை 7நாட்கள் நிகழ்வாக இருந்தது ( அதன் முடிவு நாள் நவம்.27 ).... 1995 இல் இருந்து அது மூன்று நாட்களாக்கப்பட்டு அதன் முடிவு நாள் நவம்.27 ஆகும் ....

<b>Heroes' Day - An Introduction </b>


Tamil Eelam's National Heroes Days are to celebrated for the three days ending November 27, which is the day the first LTTE fighter gave his life for the freedom of the Tamil Eelam nation. Heroes Day celebrations first started in 1989 when it was held on a single day, November 27. From 1990-4 the programme was held over a seven-day period, ending also on the 27th. Since 1995, it has been held for 3 days ending again on the 27th.

Maveerar days are held by people all over Tamil Eelam in honour of the LTTE freedom fighters. During these celebrations people light traditional oil lamps at home and in public places and ceremonies are held in which Tamil Eelam's national flag is proudly raised. People also engage in prayers for their nation, speeches are delivered by prominent people and the portraits of freedom fighters who died are suitably garlanded.


http://www.tamilcanadian.com/pageview.php?...ID=2142&SID=317
http://www.tamilevent.com/

மொழிபெயர்ப்பில எதாவது தவறு கண்டீங்கன்னா என்ன மன்னிச்சிடுங்க ....


- sri - 11-30-2005

ஐயா திரு எங்கே பொய்விட்டீர்கள்? ததேதோ(தமிழ் தேசிய தொலைக்காட்சி) பார்த்தீர்களா? என்ன சொன்னார்கள்? 2நாட்களுக்கு மேலாக உங்களை காணவில்லை பதில் கிடைத்துவிட்டதா?


- nirmalan - 11-30-2005

மாவீரர்நாள் 1989 ல் பிரகடனப்படுத்தபட்டு மணலாற்றில் கடைப்பிடிக்கப்பட்டது. 1990ல் தான் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் மக்கள் மயப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

1989 ல் கிளிநொச்சியின் கோணாவிலில் இரகசியமாக மாவீரர் நாள் நிகழ்வுகள் விடுதலைப் போராட்ட ஆதரவாளர்கள் மூலம் வேறு ஒரு நிகழ்வு முலாமில் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் நா.யோகேந்திரநாதன் குறியீடாக நாடகம் ஒன்றையும் அரங்கேற்றினார்.


- thiru - 11-30-2005

Quote:ஐயா திரு எங்கே பொய்விட்டீர்கள்? ததேதோ(தமிழ் தேசிய தொலைக்காட்சி) பார்த்தீர்களா? என்ன சொன்னார்கள்? 2நாட்களுக்கு மேலாக உங்களை காணவில்லை பதில் கிடைத்துவிட்டதா?

தமிழ்த்தேசியத் தொலைக்காட்சியை பார்க்க இங்கு எனக்கு வசதியில்லை. காரணம் என்னிடம் சொந்தமாக தொலைக்காட்சிப்பெட்டி இல்லை. அதனால் என்ன சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது.

ஆனால் எவரும் 1990ல் தான் மாவீரர் நாள் முதன்முதலில் பிரகடனப்படுத்தப்பட்டதாகச் சொல்லியிருக்க மாட்டார்கள்.இம்முறை வெளியாகியுள்ள விடுதலைப் புலிகள் இதழில் கூட 1989ல் தான் மாவீரர் நாள் ஆரம்பிக்கப்பட்டது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலே வானம்பாடி அவர்கள் இணைத்துள்ள தெளிவான விபரங்களும் இடம்பெற்றுள்ளன.

மற்றப்படி 'மக்கள்மயப்படுத்தப்பட்ட" மாவீரர் வார நிகழ்வுகள் 1990ல் நடந்தது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொண்டு, எனது தவறுக்கு மன்னிப்பும் கோரியிருப்பதைத் தாங்கள் கண்கொண்டுபார்க்கவேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.

இங்கே நான் எழுப்பிய வினா 1989ல் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வை 1990ல் பிரகடனப்படுத்தப்பட்டதாக எவ்வாறு எழுதலாம் என்பதே.

இந்த வினாவிற்குச் சற்றும் பொருத்தமில்லாத விடை 'மக்கள் ஆதரவுடன்" எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற விவகாரம். வேண்டுமானல் 1989ல் பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் 1990 முதல் முழுஅளவில் மக்கள்மயப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டிருக்கவேண்டும் என்பதை எனது இரண்டாவது பதிவிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

<b>1989ல் பிரகடனப்படுத்தப்பட்டது என்பதைத் தாங்களும் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். 1990முதல் மக்கள்மயப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதை நானும் ஏற்றுக்கொண்டுள்ளேன்

[b]பணிவுடன் திரு</b>


- thiru - 12-02-2005

[size=24]ஒருவருடைய எழுத்தைக் கொண்டே அவரது பண்பை, மனித விழுமியத்தினை நாம் ஊகித்துக்கொள்ளமுடியும்.

வழுக்களை ஒப்புக்கொண்டு திருத்தும் மனப்பக்குவமோ விமர்சனங்களை அன்போடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமோ அவ்வளவு எளிதில் எவருக்கும் வாய்த்துவிடாது.

அந்த வகையில் இவ்வளவு து}ரம் கடுமையாக நான் விமர்சனம் செய்தபோதும் அதனை உரிமையோடு ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்ததுடன் நான் எழுப்பிய வினாவிற்கான விடையினையும் அனுப்பிவைத்திருக்கும் புதினம் குழுவினர் தற்போது என்மனதில் உயரிய இடத்தினைப் பிடித்திருக்கிறார்கள்.

அத்துடன் சுட்டிக்காட்டப்பட்ட வழுவினைத் திருத்திவிட்டதையும் அறியத்தந்திருக்கிறார்கள்.இனிமேல் அவ்வாறு வழுக்கள் நேர்ந்துவிடாது கண்காணிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்களது மனஅமைவை நன்கு வெளிப்படுத்தும் அவர்களது பதில் கடிதத்தினை இங்கு இணைத்து அனைவரும் அவர்களது பண்பான நடத்தையினை அறிய வழிசெய்யவேண்டும் என்ற அவா என்னுள் எழுந்தாலும், அவர்கள் அதனை விரும்பவில்லை.

இது ஒன்றே அவர்கள் புகழ் விரும்பிகள் அல்லர் செயல் விரும்பிகள் என்பதைக் காட்டப்போதுமானது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

<b>எனது மேற்படி பதிவு இந்தப் பண்பான- உயரிய நடத்தையுடைய- புதினம் குழுவினருக்கு மனக்காயத்தினை உண்டுபண்ணியிருப்பின் அதனைப் பொறுத்தருளுமாறு வேண்டுகிறேன்</b>

<b>அன்புடன் திரு</b>


- yarlmohan - 12-02-2005

இது பற்றி மேலதிகமாக விவாதிக்க எதுவுமில்லை என்பதால் இத்துடன் இக்கருத்து மூடப்படுகின்றது.