Yarl Forum
ஊர்காவற்றுறையில் இளைஞர் சுட்டுக்கொலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஊர்காவற்றுறையில் இளைஞர் சுட்டுக்கொலை (/showthread.php?tid=2261)



ஊர்காவற்றுறையில் இளைஞர் சுட்டுக்கொலை - sri - 11-27-2005

யாழ். தீவகம் ஊர்காவற்றுறையில் இனந் தெரியாத நபர்களினால் இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


நேற்றிரவு மாவீரர் நாள் செயற்பாடுகளுக்கு ஒழுங்குகள் செய்து விட்டு இளைஞர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இருளில் மறைந்திருந்த இனந் தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் தம்பாட்டியைச் சேர்ந்த மார்க்கண்டு சசிக்குமார் எனும் இந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
puthinam


- sri - 12-02-2005

யாழ். நீர்வேலியில் 2 விவசாயிகள் சுட்டுக்கொலை! இன்று முழு அடைப்புப் போராட்டம்!!
யாழ். குடா நாட்டில் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் 2 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


யாழ். நீர்வேலியில் ஆதியார் இந்துக் கல்லூரி அருகே உள்ள தேநீர் கடை முன்பாக தங்களது உழவு இயந்திரத்தை நிறுத்திக் கொண்டிருந்த போது விவசாயிகள் மீது இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் குணரத்னம் கிருஸ்னகுமார் (வயது 34), சின்னையா சிவாகரன் (வயது 24) ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தின் போது தேநீர் கடைக்குள் உள்ளே இருந்த கே.ரூபன் (வயது 24) என்பவரும் படுகாயமடைந்தார்.

சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையினரே விவசாயிகள் இருவரை சுட்டுக்கொன்றதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விவசாயிகள் படுகொலையைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ். குடா நாடு தழுவிய முழு அடைப்புக்கு தமிழ்த் தேசிய விழிப்புணர்வுக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட இரு விவசாயிகளும் கடந்த மாவீரர் நாள் நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்றவர்கள் என்றும் நீர்வேலி மக்கள் கூறினர். கடந்த வாரம் ஊர்காவற்றுறையில் மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடுகள் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரை சிறிலங்கா இராணுவம்

puthinam