Yarl Forum
உதயனுக்கு வயது 20 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: உதயனுக்கு வயது 20 (/showthread.php?tid=2257)



உதயனுக்கு வயது 20 - SUNDHAL - 11-27-2005

20 வது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் உதயண் பத்திரிகைக்கு வாழ்த்துக்கள்.....


- SUNDHAL - 11-27-2005

நேற்றுப் போன்று இருக்கிறது. ஆனால்இ உதயனுக்கு நேற்றுடன் இருபதாவது அகவை பூர்த்தியாகிவிட்டது. இன்று இருபத்தோராவது வயதில் அவன் தடம் பதிக்கிறான். அந்தளவு வேகமாகக் காலம் ஓடிக்கரைந்ததா என்று ஒருவகைத் திகைப்பு. ஆனால் மனதின் மறு மூலையில் மகிழ்ச்சி.
உதயனை ஆரம்பித்த வேளைஇ அது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மூன்றாவது நாளிதழாகச் சேர்ந்து கொண்டது. அது பிரசுரமான அன்றே ஒரு சாதனையைப் படைத்தது. குடாநாட்டில் பெரிய அளவில் அகலத் தாளில் வெளியான பத்திரிகை அது மட்டுமே. முதலாவதும் உதயனே. கொழும்பிலிருந்து மட்டுமே பெரிய அளவிலான பத்திரிகை வெளியிட முடியும் என்ற அப்போதைய நிலையை மாற்றிய பெருமையும் உதயனைச் சார்ந்ததே.
எனினும்இ நாட்டில் நிலவிய யுத்தச் சூழ்நிலை விளைவித்த பாதகமான நெருக்கடிகளால் இப்போதைய கையடக்க அளவுக்கு மாற்ற நேர்ந்தது. எமது பிரதேச வாசகர்கள் அந்த வகைப் பத்திரிகையையே பெரிதும் விரும்புகிறார்கள் என்று கருத்துக் கணிப்புகள் காட்டின. அதனால் முந்திய பெரிய அளவுக்கு மீண்டும் செல்லாமல் கைக்கு அடக்கமாகவே உதயன் வெளிவந்து கொண்டிருக்கிறது.
குடாநாட்டைத் தளமாகக் கொண்டு வெளிவந்த நாளேடுகள் முதலில் வாரப் பத்திரிகைகளாக ஆரம்பிக்கப்பட்டன. வாசகர்கள் மத்தியில் நன்றாக அறிமுகமாகிஇ விற்பனை சுமாராகிய பின்னரே நாளேடுகளாக மாற்றப்பட்டன. ஆனால்இ அந்த வகையிலும் உதயன் "புதுமை' செய்தான். பரீட்சைக்களம் செல்லாமல்இ எடுத்த எடுப்பிலேயே உதயன் வாசகர்களின் கரங்களில் தவழ்ந்தான். பின்னரே இரண்டு மாத இடைவெளியில் வார இதழ் சஞ்சீவியைப் பிரசுரித்தோம்.
குடாநாட்டில் மூன்றாவது நாளோடு ஒன்றை வெற்றிகரமாக வெளியிட முடியுமா என்று அதுவும் கொழும்பிலிருந்து பிரசுரமாகும் நாளிதழ்களுடன் போட்டிபோட்டுக் கொண்டு நிலைகொள்ள முடியுமா என்றும் பலரும் சந்தேகம் எழுப்பினார்கள்.
உதயன் வெளிவரப்போகின்றான் என்ற தகவல் அறிந்து பத்திரிகைத்துறை சார்ந்தவர்களும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களும்இ ஏன் புத்திஜீவிகள் சிலர் கூட என்னிடத்தில் இத்தகைய சந்தேகத்தைக் கிளப்பியது நினைவுக்கு வருகிறது. அவர்களின் சந்தேகம் எதிர்மறையான பார்வைஇ உதயனை முற்று முழுதாக வித்தியாசமானஇ புதிய பாங்குடன் வெளியிட வேண்டும் என்ற தூண்டுதலைத் தந்தது என்றே கூறவேண்டும்.

பெருமைக்காகவோஇ புகழுக்காகவோ கூறவில்லை. உதயன் வெளியிடப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே அப்போது வெளிவந்த தினசரிகளை விட அதிகம் விற்பனையாகியது. பத்திரிகைகளுக்கு ஆதாரமான விளம்பரங்கள் கிடைத்தன. மக்களோடு ஒட்டி உறவாடும் ஒரு பத்திரிகையாகஇ அவர்களின் அபிமானத்துக்கு உரிய பத்திரிகையாக இன்றும் முன்னணி வகிக்கிறது. தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக்கொண்டு மக்களின் மனம் நிறைந்த நாளிதழாக விளங்குகின்றது.

உதயன் வெளிவரத் தொடங்கிய ஒருவருட பூர்த்தியின் போது அர்ச்சுனாஇ சிறுவர் மாத இதழை வெளியிட்டோம். அடுத்தடுத்து ஞானக்கதிர்இ ஜோதிடஜோதி ஆகிய மாத இதழ்களும் வெளி யிடப்பட்டன.

ஒரு நாளேட்டை ஆரம்பிப்பதும்இ அதனை மக்கள் மத்தியில்கொண்டு செல்லுவதும் அவர்களின் விருப்பத்துக்கு உரியதாக்குவதும் ஒன்றும் இலகுவானதல்ல. பத்திரிகை நிறுவனத்தின் சகல அங்கங்களும்இ பிரிவுகளும் அவற்றில் பணியாற்றுவோரும் இது ஒரு கூட்டு முயற்சி என்ற மன உணர்வுடன் கடுமையாக உழைத்தாலே பத்திரிகையை மக்களின் செல்வாக்குப் பெற்றதாகஇ அபிமானத்துக்கு உரியதாக்க இயலும்.

உதயன் நிறுவனத்தைத் தொடங்கிய காலத்திலேயே அதன் நிர்வாகிகள் இத்தகைய ஒரு கூட்டுச் செயற்பாட்டுக்கான அடித்தளத்தை இட்டனர். அதனாலேயே போர்க் காலச் சூழலிலும்இ நெருக்கடிகள் வந்தபோதும்இ கஷ்டங்கள் மலிந்திருந்த வேளையிலும் மக்களுக்குத் தகவல் சொல்லும் சேவையை உதயனால் தளராது ஆற்ற முடிந்தது. அதன் மூலம் மக்களோடு நெருங்கி அவர்கள் மனங்களில் தனித்துவமான இடத்தைப் பெறமுடிந்தது.

வெளிநாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் போர் ஓரளவு ஓய்ந்திருந்த காலத்தில் இங்கு வந்த வேளைகளில்இ உதயன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டதை அறிந்து ஆச்சரியப்பட்டார்கள். சிலர் அசந்தே போனார்கள். கடும் போர் நடைபெற்ற காலத்தில் வளங்கள் வற்றிப்போன காலத்தில் ஒரு செய்தி நாளேடு வெளிவந்தது என்பதை எமது ஆவணக் காப்பகத்தின் கோவைகளைப் பார்த்து உறுதியாக்கிய பின்னர் பெரும் அதிர்ச்சி அடைந்த வெளி உலகப் பத்திரிகையாளர்கள் மிகப் பலர்இ எமது பத்திரிகை நிறுவனத்தின் மீது ஷெல் வீச்சுகள்இ பீப்பாய்குண்டு வீச்சுகள்இ விமானக்குண்டு வீச்சு நடத்தப்பட்ட போதிலும்இ வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பகுதிகளை இயக்கிஇ சிமெந்து அரணிடப்பட்ட பெரும் பதுங்கு குழிக்குள் பகலும் இரவும் பணி செய்து உதயனைத் தொடர்ந்து வெளியிட்டோம் என்று விவரித்தவேளைஇ 'ஆணூச்திணி' (துணிச்சல்காரர்கள் தான்) என்று கூறிக் கைகுலுக்கிய வெளிஉலகப் பத்திரிகையாளர்கள் பலர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் யாழ்ப்பாணம் வந்த தென்னிலங்கைப் பத்திரிகையாளர்கள் பலரும் ஆசிரியபீடம்இ எழுத்துக் கோர்த்துப் பக்கம் போடுதல்இ அச்சிடுதல் ஆகிய பணிகள் நடைபெற்ற சிமெந்து அரண் பதுங்கு குழியைப் பார்த்து மூக்கில் கை வைத்தனர். அதனை அருங்காட்சியகமாகப் பேணுகிறோம் என்று கூறிய வேளைஇ "நிச்சயமாக' என்றனர். உதயனின் இருபது ஆண்டுச் சரித்திரத்தில் அதுவும் ஓர் அங்கம்.

இடர்காலத்தில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வீச்சுக் குன்றாமல் உதயன் வெளிவந்தமைக்கு அவ்வேளைகளில் நிறுவனத்தில் சேவையாற்றிய ஒவ்வொரு பணியாளருக்கும் பங்குண்டு. அவர்கள் என்றென்றும் மறக்கமுடியாது நினைவில் கொள்ளத்தக்கவர்கள்.

மக்களுக்குரிய முக்கிய சேவையில் ஈடுபடும் ஒரு நிறுவனத்துக்கு வேண்டப்படும் கடமை உணர்வும்இ மனம் தளராமல்இ சலிக்காமல் செயலாற்றும் பொறுப்புணர்வும் துணிவும் கொண்ட பணியாளர்களின் கடும் உழைப்புமே உதயனை உயர்த்தின. நிர்வாகத்தினரோடு சேர்ந்து பணியாளர்களும் மேற்சொன்ன இயல்புகளைக் கொண்டிருந்ததால்இ உதயன் மக்களின் பத்திரிகையாக விளங்குகிறது. இலங்கையில் இருந்து வெளிவரும் எட்டுத் தமிழ் நாளேடுகளில் அதிக எண்ணிக்கையான வாசகர்களையும் கொண்ட பத்திரிகை என்ற முத்திரையை சுயாதீனமான கருத்துக் கணிப்புகளின் மூலம் பதித்துள்ளது.

உதயனின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்ததுஇ அதன் பணி எவ்வாறு அமைந்ததுஇ எதிர் கொண்ட இடர்கள்இ நெருக்கடிகள்இ அச்சுறுத்தல்கள்இ தாக்குதல்கள்இ ஆபத்துகள்இ இன்னல்கள் என்பனவற்றை எம்மோடு பணியாற்றியவர்களும்இ மக்களுடன் நெருங்கி உதயன் ஆற்றிய சேவைகள் எவ்வாறு அமைந்தன என்பதனை ஏனைய பிரமுகர்களும்இ இந்த இதழின் அடுத்தடுத்த பக்கங்களில் விவரித்துள்ளனர்.
இருப்பினும்

உயிர்த்துடிப்புள்ள வீச்சும் வேகமும் கொண்ட மக்கள் நலன்களையே மூச்சாகக் கொண்ட நாளிதழாக உதயன் மிளிர்வதற்குஇ மக்கள் அவன் மீது கொண்டுள்ள பற்றும் அபிமானமும் மதிப்புமே மூல வளங்கள் என்பதனை நான் இங்கு மிகுந்த நன்றியுடன் குறித்துக்கொள்ள விரும்புகிறேன்.
கடந்து சென்ற கஷ்டமானஇ இன்னல்கள் நிறைந்தஇ ஆபத்துகள் சூழ்ந்தஇ நெருக்கடிகள் மலிந்த காலங்களில் உங்கள் மத்தியிலேயேஇ உங்களுடன் வாழ்ந்தேஇ உங்களது வாழ்வுடன் இணைந்தேஇ நீங்கள் அனுபவித்த துன்பங்களை அனுபவித்தே உங்களுக்காகப் பணிபுரிந்தவன் உதயன்.

அந்த இருள் சூழ்ந்த காலத்தில் அவனை உங்கள் உள்ளங்களில் இருத்திஇ அவன் மீது அபிமானம் கொண்டு ஆதரவு நல்கினீர்கள். எங்களுக்கு உறுதுணையாக இருந்து பேருதவி செய்தீர்கள். தொடர்ந்தும் நீங்கள் அவன்மீது கொண்டுள்ள குன்றாத அபிமானம் எங்களுக்கு மேன்மேலும் ஊக்கமும் ஆக்கமும் தருகின்றன. எக்காலமும்இ எப்பொழுதிலும்இ எந்தச் சூழலிலும் மக்கள் நாளிதழாகவே பணி செய்யவேண்டும் என்ற இலட்சியத்துடனும் இலக்குடனுமே உதயன் தன்னைப் பக்குவப்படுத்திஇ அதனையே உணர்வு பூர்வமாக தனது மனதில் உய்த்துள்ளான். இனிவரும் காலங்களிலும் அவன் அதனையே தொடர்வான் என்பதை உறுதி கூறுகின்றான்.

ஈழத்தமிழ் மக்களின் உரிமைக் குரலாகஇ இருபது ஆண்டு காலமாகஇ உதயன் நிலை குலையாமல்இ தளராமல் ஒலித்து வருகின்றான். அந்தச் சீரிய நேரிய பணியே இனிவரும் காலத்திலும் அவனது வாழ்வியக்கமாக அமையும் தொடரும். எமது மண்ணினதும் மக்களினதும் வாழ்வும்இ வளமும்இ நலனும் அவனின் நாடிஇ நரம்புகள். எமது மக்களின் அரசியல்இ பொருளாதாரஇ சமூக விடிவுகளுக்காக உழைக்கும் பணியே அவனது உடம்பில் ஓடும் இரத்தம்.

மக்களுக்கு எதிரான அநீதிகளை இனங்கண்டுஇ அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவதையும்இ களைந்தெறிவதையும்இ மக்களின் சமூக இ பொருளாதாரஇ அரசியல்இ கல்வியியல் பரப்புகளில் பக்கத் துணை நிற்பதனையும் அவன் தனது பிரதான பணியாகக் கொண்டுள்ளான். இத்தனை வருட காலத்தில் அவன் அப்பணியையே செயல் வடிவமாக்கியதை நீங்கள் அறிவீர்கள்; உறுதி செய்தும் உள்ளீர்கள்.

பத்திரிகா தர்மத்தை தனது ஆன்ம நேயமாகக் கொண்டவன் உதயன். தனக்குள்ள சமூகப் பொறுப்புணர்வை என்றும் அவன் தட்டிக் கழித்ததும் இல்லை; மறந்ததும் இல்லை. தொடர்ந்தும் அவன் அவ்வழியே வீறுநடை போடுவான். மக்கள் பணியே அவனது முதன்மைப் பணி. அந்தப் பணியில் அவன் என்றும் முன்னிற்பான்; என்றும் முன்னணி வகிக்கவே உறுதியுடன் உழைப்பான்.

உதயனின் இன்றைய வளர்ச்சிக்கும் வலிமைக்கும் வளத்துக்கும் உறுதிகுன்றா உழைப்புக்கும் நீங்களே ஊட்டச் சத்துகள். அவனது உயர்வுக்கும் உன்னத பணிக்கும் சிறப்புக்கும் பெருமைக்கும் சாதனைகளுக்கும் விளை நிலமாக விளங்குபவர்கள் வாசகர்களும் விளம்பரதாரர்களுமாகிய நீங்களே! மக்கள் பலமே உதயனின் பலம்.

உதயன் உள்நாட்டு வாசகர்களின் அபிமானத்துக்குரிய தமிழ் நாளிதழாக மட்டுமன்றிஇ வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களினதும் பேராதரவைப் பெற்று அவர்களுக்கும் சேவை புரிகின்றான். உதயனை இணையத் தளத்தில் வாசித்து ஈழத் தமிழர்களின் முகத்தைப் பார்க்கின்றோம் என்று வெளிநாடுகளில்இ புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் மகிழ்ச்சி தெரிவிப்பவர்கள் பல்லாயிரக் கணக்கானோர்.

பெருமதிப்புக்குரிய வாசகர் பெருமக்களே! தாராள மனம்கொண்ட விளம்பரதாரர்களே! எங்களது பலமாக விளங்கிஇ எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துவரும் அன்பு உள்ளங் களுக்குஇ உதயனின் சொல்லில் அடங்காத நன்றிகளை இன்றைய நன்னாளில் தெரிவித்துக்கொள்கிறோம்.

பிரதம ஆசிரியர்


- ப்ரியசகி - 11-27-2005

<b>உதயனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:பல கிலோ கணக்கில சிரித்து பேசிடும் பெண்களை நீ நம்பு...சில கிலோ கணக்கில் சிரித்து பேசிடும் பெண்ணால் வரும் வம்பு...

சுண்டல்..பல..சில எண்டில்லாமல்..எவ்ளோ கிலோ எண்டு அடிச்சு சொல்லுங்கோ..அப்ப தான் நாங்கள்..அளந்து சிரிக்க சுலபமா இருக்கும். :wink:


- Remo - 11-27-2005

உதயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sri - 12-01-2005

தமிழ்த் தேசிய கருத்துருவாக்கத்துக்கு
உதவிடும் நாளிதழ் உதயன்
புலிகளின் குரல் புகழாரம்

தமிழத்தேசியக் கருத்துருவாக்கத்துக்கு உதவிடும் நாளிதழ் உதயன்' இவ்வாறு உதயனுக்கு' புகழாரம் சூட்டியுள்ளது. புலிகளின் குரல்' வானொலி. 20 ஆவது அகவையைப் பூர்த்தி செய்துள்ள உதயனுக்கு' வாழ்த்துத் தெரிவித்து புலிகளின் குரல்' வானொலி நேற்றிரவு தனது 9 மணிச் செய்தியில் வாழ்த்துச் செய்தி ஒன்றை ஒலிபரப்புச் செய்தது. அந்தச் செய்தியில்:
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி வரும் தமிழ்த் தேசிய நாõளேடுகளில் ஒன்றான "உதயன்' நாளேடு தனது 20 ஆண்டு சேவையை நிறைவுசெய்து 21 ஆம் ஆண்டில் கால்பதித்துள்ளது.
சிறிலங்கா அரசினதும் படைகளதும் ஒட்டுக்குழுக்களினதும் நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கும் மத்தியில் "உதயன்' நாளேடு தமிழர் தாயகத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கருத்துருவாக்கத்தை மேற்கொண்டு வருகின்றது.
1985 முதல் வெளிவரும் "உதயன்' நாளேடு 1987 இல் இந்திய இராணுவத் தாக்குதலுக்கு இலக்காகிப் பலரை இழந்தது.
இதனால் முதற்தடைவையாக "உதயன்' அப்போது மூன்றுமாதங்கள் வெளிவராது நின்றது.
1988 இல் தமிழ்த் துரோகக் கும்பல் இந்தியப் படையின் துணையுடன் அதன் அச்சு இயந்திரங்களைக் கைப்பற்றிச் சென்றதாலும் யாழ்ப்பாணத்தில் நாளேடுகளைத் தடைசெய்ததாலும் 137 நாள்கள் உதயன் வெளிவரவில்லை.
1990 இல் "உதயன்' சிறிலங்கா வான் படைத் தாக்குதலுக்கு உள்ளானது.
1996 இல் யாழ்ப்பாணம் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட போதும் இந்த நாளேடு 81நாள்கள் வெளிவரவில்லை.
அதன் பின்னர் வெளிவந்த "உதயன்' சிறிலங்கா இராணுவ ஆக்கிமிப்புக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கருத்தையும் விடுதலைப் போராட்டத்தின் உண்மைகளையும் தெரிவிப்பதில் தீவிரமாகச் செயற்பட்டது. அதனால் அதன்மீது குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
2000 இல் குறிப்பிட்ட காலத்திற்கு "உதயன்' சிறிலங்கா அரசால் தடை செய்யப்பட்டிருந்தது. எதிரிகளுக்கு மத்தியில் உதயன் நாளேடு, 20 ஆண்டுகளைக் கடந்த 27ஆம் நாள் பூர்த்தி செய்தது.
20 ஆண்டுகாலப் பகுதியை பூர்த்தி செய்து 21 ஆம் ஆண்டில் கால் பதித்து இயங்கும் உதயன் நாளேட்டிற்கு "புலிகளின் குரல்' வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.


- sri - 12-01-2005

உதயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


- Mathan - 12-01-2005

உதயன் பத்திரிகை சில காலம் படித்திருக்கின்றேன். ஒரு சில தவறுகள் செய்ததாக விமர்சிக்கப்பட்டதுண்டு, அதை தவிர மற்றப்படி இலங்கை தமிழ் தினசரிகளில் குறிப்பிடத்தக்க தரமான பத்திரிகை.

உதயன் பத்திரிகை தொடர்ந்து வீறுநடை போட வாழ்த்துக்கள்


- vasanthan - 12-01-2005

வாழ்த்துக்கள்

உதயனின் சிறப்பிதழ் பார்த்தேன் பத்திரிகை தொடங்கியதிலிருந்து 27.11.005 வரையான முக்கிய செய்தித் தலைப்புகளை தொகுத்திருந்தார்கள் இவ்வளவு பிரச்சினைகளிற்குள்ளும் அவற்றை ஆவணப்படுத்தி வைத்திருக்கிறதைப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது.