Yarl Forum
விய வருடம் வெற்றிகொண்டு வருகவே! - கவிதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: விய வருடம் வெற்றிகொண்டு வருகவே! - கவிதை (/showthread.php?tid=225)



விய வருடம் வெற்றிகொண்டு வருகவே! - கவிதை - Selvamuthu - 04-14-2006

<span style='font-size:25pt;line-height:100%'>விய வருடம் வெற்றிகொண்டு வருகவே!</span>

இயல் இசையும் நாடகமும்
எங்கள் தமிழ் மூச்சு
அயலவர்கள் இனசனங்கள்
எல்லாம் உறவாச்சு

நெய்தலும் குறிஞ்சியும்
மருதம் முல்லை பாலை
சுயமாக சொந்த மண்ணில்
செழித்திருக்கும் காலை

புயல் அடித்த தேசமென்று
பெயரும் வரலாச்சு
அயலவர்கள் புலம் பெயர்ந்து
வருடம் பலவாச்சு

உயர் தலைவன் வழிநடத்தல்
உலகில் முதலாச்சு
வியந்து பார்க்கும் அனைவர்க்கும்
மூக்கில் விரலாச்சு

பயந்து வாழ்ந்த காலமெல்லாம்
பறந்து பலநாளாச்சு
வியப்புடனே வந்தபடை
வெற்றி பலவாச்சு

விய வருடம் வந்ததின்று
வணங்கிடுவோம் நன்று
வெற்றிதரும் புதுவருடம்
வாகைசுூடும் வென்று.