Yarl Forum
தொண்டைமானாறு கடற்பரப்பில் அபூர்வ நிகழ்வு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தொண்டைமானாறு கடற்பரப்பில் அபூர்வ நிகழ்வு (/showthread.php?tid=2247)



தொண்டைமானாறு கடற்பரப்பில் அபூர்வ நிகழ்வு - adsharan - 11-28-2005

மேகம் நீரை உறிஞ்சும் அபூர்வ நிகழ்வு நேற்றுக் காலை 7.30 மணியள வில் தொண்டைமானாறு கடற்பரப்பில் இடம்பெற்றது.
நீர்நிலைகளில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலேசென்று கருமுகிலாவதே வழக்கம். ஆனால், மிக அபூர்வ நிகழ்வாக வளி மண்டலத்தில் ஏற்படும் அழுத்த ஏற்பாடுகள் காரண மாக திரவநிலையிலேயே நீர் முகிலை யடைவது இடம்பெறுகிறது.
இது போன்ற ஒரு நிகழ்வே நேற்று தொண்டைமானாறு கடற்பரப்பில் இடம்பெற்றது. இதன்போது மிகப் பாரிய காளான் போன்று முகிலும் மேலே சென்ற நீரும் தோற்றமளித்தன என்று நேரில் கண்டவர்கள் தெரிவித் தனர்.
http://www.uthayan.com/pages/news/today/16.htm