Yarl Forum
தேவராசா அண்ணை குடும்பம் இருந்த வீடு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: தேவராசா அண்ணை குடும்பம் இருந்த வீடு (/showthread.php?tid=2160)



தேவராசா அண்ணை குடும்பம் இருந்த வீடு - kanapraba - 12-07-2005

என்னுடைய புதிய வலைப்பதிவை பார்த்து உங்கள் கருத்தை தாருங்கள்


http://kanapraba.blogspot.com


- Birundan - 12-07-2005

நல்லதொரு பதிவு, தொடர்ந்து பதிய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.


- Aravinthan - 12-08-2005

மிகவும் அருமை, நல்ல முயற்சி, இவ்வாறன செய்திகளை தொடர்ந்து தர எனது வாழ்த்துக்கள்


- kanapraba - 12-08-2005

நன்றி பிருந்தன்இ அரவிந்தன், மற்றும் கருத்தைப்பதிந்த ஷண்முகி, மதி மற்றும் முகம் தெரியாத உறவுக்கும்.


- aathipan - 12-08-2005

உங்கள் பதிவு எனது பழைய நினைவுகளை மீட்டுவந்துவிட்டது. தேவராசா அண்ணாவுக்கு நேர்ந்தது அதே கொடுமை எனது ஒன்றுவிட்ட சகோதரிக்கும் நுணாவிலில் நடந்தது. ஒரே ஒரு குழந்தை உயிர்தப்பி இப்போது வெளிநாட்டில் அதன் மாமாவுடன் வசிக்கிறது.


- kanapraba - 12-08-2005

அதிபன், இப்படிச் சொல்லப்படாத பல வேதனைக்கதைகள் பல எங்கள் நாட்டில் உள்ள அவற்றில் ஒரு சிலவற்றைப்பதிவதே என் நோக்கம்.


- Mathan - 12-08-2005

நல்ல முயற்சி தொடர்ந்து இப்படியான விடயங்களை பதிவுகளாக்குங்கள் கானபிரபா. நடந்த பல துயரசம்பவங்களை பலரும் அறிந்து கொள்ள இது உதவும்.


- cannon - 12-08-2005

தொடருங்கள்! உங்கள் தேவராசா அண்ணையின் இடிந்த வீட்டில் என் வீட்டு விம்பங்களையும் கண்டேன்!!

Quote:ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்.


நிரந்தர முகவரிக்கான காலம் வெகுதொலைவிலில்லை! அதோ நிரந்தர விடியலுக்கான ஒளி!! வெல்வோம்!!!


- Mathuran - 12-08-2005

வணக்கம் கனா பிரபா அண்ணன்!

அதி முக்கியத்துவம் கொடுக்கப் படவேண்டிய உங்கள் தளம். நன்றாக வடிவமைத்ததோடு நின்றுவிடாது. மானிடத்தின் அவலத்தினையும் துடிப்பையும் வெளிப்படுத்துகின்றீர்கள். தேவதாசு அண்ணரின் அழகிய வஞ்சகமிலா குடும்பம் ஈவிரக்கமற்ற சிக்கள காடையரால் அளித்தொழிக்க பட்டதனை, நீங்கள் நேரில் விபரிப்பதைப்போல செவ்வனே சொல்லிச் சென்றீர்கள். நிகழ்வோடு ஒன்றிப் போனமையால் கண்கள் கசிந்தன. மையிர்கள் சிலிர்த்தன. வேதனை வேதனை வேதனை.

இப்படி பல வீடுகள் ஈழத்தில். பல கதைகளுடன் சுவடுகளிண்றி மறைந்து போய் உள்ளன. அவற்றின் நினைவுகளை மீட்டால். மனம் கலங்கும். இருந்தும் சொல்லாமல் இருக்கவும் முடியாது. தெளிவோடு சொன்னீர்கள். இன்னும் சொல்லுங்கள்.


- கந்தப்பு - 12-09-2005

தம்பி நல்ல விசயம், இந்த கந்தப்புவின் ஆசி உமக்கு எப்போதும் உண்டு. வாழ்க வளமுடன்


- Aravinthan - 12-19-2005

கனா பிரபா ,தமிழின உணர்வாளர் இயக்குனர் சீமானை இன்பத்தமிழ் வானொலியில் (8/10/05ல்) பேட்டிகண்டார். யாழ் கள உறுப்பினர் அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டும். பின் வரும் இணைப்பில் கேட்கலாம்.
http://www.tamilnaatham.com/Interviews.htm