Yarl Forum
இலங்கை கேட்டதாலேயே புலிகளுக்கு நோர்வே நிதி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இலங்கை கேட்டதாலேயே புலிகளுக்கு நோர்வே நிதி (/showthread.php?tid=2156)



இலங்கை கேட்டதாலேயே புலிகளுக்கு நோர்வே நிதி - Vaanampaadi - 12-07-2005

<b>இலங்கை கேட்டதாலேயே புலிகளுக்கு நோர்வே நிதி</b>

நோர்வே வெளிவிவகார அமைச்சு விடுதலைப் புலிகளுக்கு இலங்கையரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே நிதியுதவி வழங்கியதாக அந்த அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி நோர்வே நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

2002 ஆம் ஆண்டிற்கும் 2004 ஆம் ஆண்டிற்கும் இடையில் விடுதலைப்புலிகளுக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சு 12.5 மில்லியன் நோர்வேஜியன் குரோனரை வழங்கியதாக நவம்பர் 26 அன்று `நியூரைம்ஸ்' என்ற நோர்வே நாளிதழ் செய்தி வெளியிட்டது. இவ்வருட இறுதிக்குள் இவ்வுதவியானது 25 மில்லியன் குரோனர் (37,5000 அமெரிக்க டொலர்) என்ற அளவை அடையும் என்பது அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே இவ்வுதவி மேற்கொள்ளப்பட்டதாக நோர்வே வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

யுத்தநிறுத்த உடன் படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்திற்கு நிதிவழங்குமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள்விடுத்தது. அதனடிப்படையிலேயே நிதிவழங்கப்பட்டது என்று மின் அஞ்சல் மூலம் அப்பேச்சாளர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

Thinakural