![]() |
|
பால் ஐஸ்கிரீம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: பால் ஐஸ்கிரீம் (/showthread.php?tid=2119) |
பால் ஐஸ்கிரீம் - RaMa - 12-10-2005 பால் ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள் பால் - 500 மில்லி லிட்டர் மில்க் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார் - 1 1/2 ஸ்பூன் ஜி.எம்.எஸ் - 3/4 ஸ்பூன் சர்க்கரை - 10 ஸ்பூன் வெனிலா எசன்ஸ் - 1/2 ஸ்பூன் செய்முறை: முதலில் 1/4 டம்ளர் வெதுவெதுப்பான பாலில், பால் பவுடர், கார்ன்ஃப்ளார், ஜி.எம்.எஸ் ஆகியவற்றைக் கரைத்து சர்க்கரையைச் சேர்த்து, சற்றே ஆற வைத்துள்ள பாலுடன் இவற்றைச் சேர்த்து கலக்கி ஐஸ் பாத்திரத்தில் ஊற்றி 4 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். பாதி கெட்டி ஆனவுடன் மிக்ஸியில் ஊற்றி அடித்து மறுபடியும் பாத்திரத்தில் ஊற்றி, மேலும் 2 மணி நேரம் குளிர விட்டு கிண்ணங்களில் எடுத்துப் பரிமாறுங்கள். சுவையான பால் ஐஸ்க்ரீம் தயார். - MUGATHTHAR - 12-10-2005 செய்முறைக்கு நன்றி ரமா சிலவு குறைய வரும் போல கிடக்கு இப்ப ஊரிலை அடிக்கிற குளிருக்கை இதை செய்து சாப்பிடச் சொல்லுறீயள் மனுசனுக்கு தொண்டை கட்டிப் போறதுக்குத்தான் Re: பால் ஐஸ்கிரீம் - அருவி - 12-10-2005 அக்கா ஜி.எம்.எஸ் என்றால் என்ன?, சர்க்கரை என்றால் சீனியா???? :roll: :roll: :roll: செய்துபாப்பம் எண்டுபாத்தா இந்த இரண்டும் விளங்கல :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Vishnu - 12-16-2005 MUGATHTHAR Wrote:செய்முறைக்கு நன்றி ரமா ஓ... ஓ.. ஸ் பி க்கு தொண்டை கட்ட கூடாது.... :wink: வேறை ஏதும் குளிர் இல்லாமல் சாப்பிடுறத இருந்தால் சொல்லுங்க றமா.. :wink: - sWEEtmICHe - 12-20-2005 ஜி.எம்.எஸ் என்றால் என்ன?, - அருவி - 12-22-2005 sWEEtmICHe Wrote:ஜி.எம்.எஸ் என்றால் என்ன?, அததானே நானும் கேட்டிட்டு இருக்கன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 12-22-2005 அருவி Wrote:sWEEtmICHe Wrote:ஜி.எம்.எஸ் என்றால் என்ன?, ம்ம்.நானும் தேடினேன்..அது வேற ஏதோ வருதே :roll: - sabi - 12-22-2005 ஜி.எம்.எஸ் என்றால் ஜெலட்டின் எண்டு நினைக்கிறன் :roll: (ஐஸ்கிறீமுக்கு அது தேவைதானே) சர்க்கரை எண்டால் சீனிதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|