Yarl Forum
இலங்கை பாடசாலை ஹொக்கி அணிக்கு,தமிழ் மாணவன் கப்டன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41)
+--- Thread: இலங்கை பாடசாலை ஹொக்கி அணிக்கு,தமிழ் மாணவன் கப்டன் (/showthread.php?tid=2117)



இலங்கை பாடசாலை ஹொக்கி அணிக்கு,தமிழ் மாணவன் கப்டன் - MUGATHTHAR - 12-10-2005

<b>மலேசியா சென்றுள்ள ஹொக்கி அணிக்கு தமிழ் மாணவன் கப்டன்</b>

ஆசிய நாட்டின் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான ஹொக்கிப் போட்டி இன்று மலேசியாவின் பினாங் நகரில் ஆரம்பமாகின்றது.

மலேசியா சென்றுள்ள இலங்கை பாடசாலை ஹொக்கி அணிக்கு, கொழும்பு கொட்டாஞ்சேனை சென். பெனடிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் மாணவரான <b>கிளைப் பெர்னாண்டோ </b>தலைமை தாங்குகின்றார். இலங்கை அணியில் இதே கல்லூரியைச் சேர்ந்த இரு தமிழ் மாணவர்களான <b>நிசான் பிரிங்லர் பாலன்</b>, <b>அரேந்திரன் அரவிந்தன் </b>ஆகியோரும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் மேற்படி போட்டி 12 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப் போட்டியின் பின்பு இலங்கை பாடசாலை ஹொக்கி அணி 19 ஆம் திகதி தொடக்கம் பாங்கொக்கில் நடைபெற இருக்கும் பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டியிலும் பங்கு பற்றவுள்ளது

thanks: thinakkural


- AJeevan - 12-10-2005

தகவலுக்கு நன்றி முகத்தார்.
வாழ்த்துக்கள்.